Enable Javscript for better performance
இணைய வெளியினிலே...- Dinamani

சுடச்சுட

    

    இணைய வெளியினிலே...

    By DIN  |   Published on : 04th June 2019 10:30 AM  |   அ+அ அ-   |    |  

    im1

    முக நூலிலிருந்து....
    * "கைகள் இருப்பதே தட்டத்தான்' என்று
    கண்டதற்கும் தட்டிவிடாதீர்கள்...
    காற்றில் கலந்த கரவொலிகளை
    திரும்பப் பெற இயலாது! 
    நேசமிகு ராஜகுமாரன்

    * செலவழிக்கப்படும் 
    அன்பு...
    வரவாகிறது. 
    கருணாகரன் பெருமாள்

    * நமக்குள் இருக்கும் பைத்தியங்களை
    அடக்கிக் கொன்று... 
    அவர்களின் குரல்களை நெரித்து... 
    நவ நாகரிகமாக வாழ்வதே 
    நல்மேன் மக்களின் வாழ்வு.
    குமார் அம்பாயிரம்

    * நம்பிக்கை துரோகம் ஏன் வலிக்கிறது தெரியுமா?
    அதைச் செய்பவர்கள்
    நம் எதிரிகள் அல்ல;
    நாம் நம்பியவர்கள்
    என்பதால்.
    மாரியப்பன்

    * மரத்தை விற்றவனும் அறிந்ததில்லை...
    வெட்டியவனும் 
    உணர்ந்ததில்லை...
    கூடிழந்த பறவையின் 
    வேதனையை. 
    தமிழன்பன் தாமோதரன்

    சுட்டுரையிலிருந்து...
    * வீட்டில் சாப்பிட்டவுடன்
    தட்டை எடுக்காதவர்கள் தான்..
    ஹோட்டல்களில் சாப்பிட்டவுடன்
    இலையை எடுக்கிறார்கள்.
    சிலந்தி

    * ஓர் ஆண் சந்திக்கும் 
    வரதட்சணைக் கொடுமை என்பது 
    "சொந்த வீடு இருக்கா ?' 
    என்ற கேள்வியே.
    ப்ரியா ஜான்சன்

    * "எவ்ளோ 
    வருஷமாச்சுடா பாத்து''"
    என சிலிர்ப்புடன்
    பெயர் சொல்லி அழைக்கும்
    நண்பனுடன் பேசுகையில்...
    பயமாய் இருக்கிறது
    "எம் பேரு 
    ஞாபகமிருக்கா''"
    என கேட்டு விடுவானோ?
    என்று.
    -கபிலன்

    * வீடு வரைந்தால்...
    அருகில் மரம் இருக்க 
    வேண்டும் என 
    குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது! 
    ச ப் பா ணி 

    வலைதளத்திலிருந்து...
    படிப்பு மற்றும் வேலை விஷயத்தில் நான் என்ன விரும்பினேன்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டேன். அண்டவெளியில் கோடிக்கணக்கான காலக்ஸிகளும் கிரகங்களும் இருப்பதாகவும் பூமியை விடப் பன்மடங்கு பெரிதான கோளங்கள் சுற்றுவதாகவும் அறிந்த போது ஏற்பட்ட பிரமிப்பு, அந்த ஆசையைத் தோற்றுவித்தது. நிலவில் கால் பதியாமல் மிதந்து செல்லும் ஆராய்ச்சியாளர்களை டிவியில் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்திருக்கிறேன். 
    டாக்டர், எஞ்சினியர், வெளிநாடு கனவெல்லாம் பெரிதாக இருக்கவில்லை. 
    பள்ளி இறுதி வகுப்புகளில் படிக்கும் போது, கணினிக் கல்வி ஏதாவது கற்று ஒரு நல்ல கம்பெனியில் ஓரளவு கெளரவமான சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் யதார்த்தமான ஆசையாக இருந்தது. 
    ஆனால் உள்ளுக்குள் வேறு கனவுகளும் இருந்தன. இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். விட்டுப் போன பாட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்கி மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற கனவுகள் இருந்தன. 
    இன்னொரு விஷயம், விரும்பியும் நடக்காமல் போனது பேராசிரியை ஆக வேண்டும் என்பது. 
    ஆறுமாதம் பாலிடெக்னிக்கில் வேலை பார்த்த போது அந்த அனுபவம் அலாதியாக இருந்தது. நாங்கள் படித்த போது முட்டி மோதிப் பயின்ற எஞ்சினியரிங் ட்ராயிங்கை மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க முடிந்தது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. 
    அதற்கு முந்தைய செமஸ்டர் வரை பாதிக்கும் மேல் தோல்வியுற்ற அப்பாடத்தில் அனைத்து மாணவர்களும் பிள்ளைகளும் 80க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து முழுத் தேர்ச்சியடைந்ததும் சீனியர் பேராசிரியைகள் வியந்து பாராட்டியதும் மறக்க முடியாத நினைவுகள். 
    ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் சிவிலுக்கு ரொம்பவும் மதிப்பு இல்லாததால் கல்லூரிகளிலும் பேராசிரியை வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. அதனால் கணினித் துறைக்குத் தடம் மாறிய கதையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்
    http://deepaneha.blogspot.com

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp