இணைய வெளியினிலே...

தோட்டத்து மல்லிகை பூத்துப் பூத்துக் கொட்டுகிறது..."பறிக்கலையா இவ்வளவு தண்ணீர் ஊற்றி வீணாப் போகுதே' என்கிறார்கள்.மல்லிகை நட்டதும் நீர் பாய்ச்சியதும் பறித்தால் தானா?
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


தோட்டத்து மல்லிகை பூத்துப் பூத்துக் கொட்டுகிறது...
"பறிக்கலையா இவ்வளவு தண்ணீர் ஊற்றி வீணாப் போகுதே' என்கிறார்கள்.
மல்லிகை நட்டதும் நீர் பாய்ச்சியதும் பறித்தால் தானா?

செங்கான் கார்முகில் 


பள்ளிக் கட்டணம் கட்டாத மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள், 
இரண்டு மாதமாகச் சம்பளம் வாங்காத ஆசிரியை!

மு.ரா.சுந்தர மூர்த்தி


வெளிச்சம் தொலைவில் இல்லை.

சுந்தரபுத்தன்


புற்கள் தானே  என்கிறாய்...
வளர்ப்பவர்கள் இன்றி,
நீர் வார்ப்பவரின்றி,
தானே முளைத்து,
தலை நிமிர்ந்து நிற்கிறதே...
அது முக்கியம் எனக்கு.

ரவி உதயன்


அறிவு என்பது 
இறுதியில் குழப்பம்தான்.
சுகுணா திவாகர்


சுட்டுரையிலிருந்து...

பழைய சோற்றை நவீன ஓட்டல்களில் மண்பானைக் கலயத்தில் விற்கும் காலம் வந்துவிட்டது என்றால்... 
நாடு வளர்ச்சி அடைந்து விட்டது என்று அர்த்தம்...

எஸ்.கருணா


ஒவ்வொரு நாளையும் நீங்கள் அறுவடை செய்வதை வைத்துத் தீர்மானிக்க வேண்டாம்...
ஆனால், எதை நீங்கள் விதைக்கிறீர்கள்  என்பதை வைத்து எடை போடுங்கள்.
மனமே வசப்படு


உன்னை ஒருவர் புகழ்ந்து  பேசினால், அதற்கு நீ தகுதியானவனாக இல்லையெனில் அவனுக்கு உன்னிடம் ஏதோ காரியம் ஆக வேண்டும். 
அதை நீ புரிந்துகொள்...
நீ தகுதியானவனாய் இருந்தால் ஏற்றுக் கொள். ஆனால் மயங்கிவிடாதே.

விடியலைத் தேடி

மெத்தையில் உறங்குபவருக்கும், 
சாலையில் உறங்குபவருக்கும்
வரும் தூக்கம் ஒன்றுதான்... 
ஆனால் காணும் கனவுகள்தான் வேறு, வேறு.

சிலந்தி

வலைதளத்திலிருந்து...

சத்தியத்தின் வெளிப்பாடு


"வெளியை' சூன்யமாகப் பார்க்கின்றவர்களுக்கு அது "வெறுமை'யாகத்தான் தோன்றும். ஆனால் அது நிரப்பப்பட வேண்டிய ஒன்று என்று பார்க்கும்போது, அது சாத்தியக் கூறுகளின் எல்லை நிலம். 
மைக்கலேன்கலோ கூறினார்: "சலவைக் கற்களை நான் வெறும் கற்களாகப் பார்ப்பதில்லை. அவற்றுள் பொதிந்து கிடக்கும் உருவங்களாகக் கண்டு  அவற்றைச் செதுக்கி எடுக்கிறேன்' 
பிரபஞ்சத்தில் " சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்த முடிவில் வெறும் பாழ்' என்று எதுவுமில்லை. அனைத்தும், "சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் ஜோதி' என்று நம்மாழ்வார் வாக்கில் கூற முடியும்.  இதற்கு "உள்பார்வை' வேண்டும். "உள்பார்வையின்' இன்னொரு பெயர் கற்பனை. இது சிந்திப்பதால் வராது. இதயத்தின் வெளிச்சம். பிரபஞ்சத்தில் எதுவுமே எதேச்சையாக உருவாவதில்லை. அனைத்தும் சத்தியத்தின் வெளிப்பாடுகள். 
https://indiraparthasarathy.wordpress.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com