இளமை என்பது...

"எனக்கு எழுபது வயது முடிந்துவிட்டது. அப்பொழுது கூட முதுமைக்குரிய நிதானத்திற்கு ஊறு செய்யும் வகையிலே குறும்புக்குணம் என்னிடம் காணப்படுவதாக என் நண்பர்கள் குறை கூறுகிறார்கள்.
இளமை என்பது...

"எனக்கு எழுபது வயது முடிந்துவிட்டது. அப்பொழுது கூட முதுமைக்குரிய நிதானத்திற்கு ஊறு செய்யும் வகையிலே குறும்புக்குணம் என்னிடம் காணப்படுவதாக என் நண்பர்கள் குறை கூறுகிறார்கள். இதைவிடக் கண்டிப்பாக என்னால் இருக்க இயலாதென்று அஞ்சுகிறேன். மணியோசை ஒலிக்க, சங்கொலி முழங்க, உயர்ந்த பீடத்தில் என்னை இருத்த விரும்புவோர்க்கு நான் கூறுவேன், நான் பிறந்தது அடித்தளத்திலே, நான் ஒரு கவியே தவிர வேறொன்றுமில்லை.
 இளமை என்பது வாழ்வில் ஒரு கட்டமல்ல. அது ஒரு மனநிலை. உணர்ச்சிகளின் இயல்பு. ஆன்மாவின் பண்பு. ஒரு சில ஆண்டுகள் கழிவதால் நாம் முதுமை பெற்றுவிடுவதில்லை. நம்முடைய இலட்சியங்களை இழந்து மாறுதலை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற நிலையை அடையும்போதுதான் முதுமை பெறுகின்றோம். ஆண்டுகள் செல்லச் செல்ல தோலில்சுருக்கம் விழலாம். அன்பும் விசுவாசமும், புதுமை காணும் ஆர்வமும், வியப்புக் கொள்ளும் திறனும், வாழ்வில் சோதனைகளை விரும்பி ஏற்கும் உறுதியும், செயலில் இன்பத் துடிப்பும் நம் இதயத்தில் இருக்கும் வரை, நாம் இளைஞர்கள்தாம். எவ்வளவு இளமை என்று உள்ளத்தில் எண்ணுகிறோமோ, அதுவே நம் உண்மையான வயது என்று சொல்வதின் பொருள் இதுதான்' என்று தாகூர் கூறுகிறார்.
 தா.ஸ்ரீனிவாசன் எழுதிய
 "பாரத ரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன்'
 என்ற நூலிலிருந்து...
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com