இணைய வெளியினிலே...

மனிதர்கள் வயது முதிர்வதால் கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை...கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதால் அவர்களுக்கு வயது முதிர்கிறது.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


மனிதர்கள் வயது முதிர்வதால் கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை...
கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதால் அவர்களுக்கு வயது முதிர்கிறது.


துரை பாரதி

உண்மையான இரக்க உணர்வு என்பது எதையாவது கொடுப்பதோ அல்லது
எதையாவது வாங்குவதோ அல்ல...
எது தேவையானதோ... அதை... அந்த நேரத்தில் செய்வதுதான்.

மாரியப்பன்

"அருமை', "சிறப்பு', "சூப்பர்', "வாழ்த்துகள்'
இதைவிடப் பெரிதாக எந்த விமர்சனம் உங்களைப் பாதித்துவிடப் போகிறது!


கூகுள் பார்த்து எழுதினால்... தகவல்களைத்தான் அடுக்க முடியும்.
நாவல் எழுத முடியாது.

ராம சுரேஷ்

அன்பு இதயத்தில் இருக்கட்டும்.
அறிவு செயலில் இருக்கட்டும்.
ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும்.
நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்.

திருப்பதி ராஜா

தீர்மானமுள்ள மெளனம், புகார்களை நிராகரிக்கிறது.

கவிதைக்காரன் இளங்கோ

சுட்டுரையிலிருந்து...

கோலங்கள் மீது கால்படுவது வன்முறை...
கண்படுவது அணுகுமுறை...
வாழ்த்துசொல்வது உறவுமுறை.

நீச்சல்காரன்

அதியமான்களற்ற இந்தப் பெரு நகரத்தில்..
விற்றுத் தீராத இந்த இந்த பெரும் நெல்லிக்கனிகள்...
அவ்வையின் பசித்தலை பார்த்து சிரித்தது...

கஜலட்சுமி

துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி... அவர்கள் மனம்தான். 
அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப் போல வளர்ந்தபடியே இருக்கிறது 

பொன். வாசுதேவன்

சில நேரங்களில் உண்மைகளைத் தக்க வைத்திருப்பதை விட... கக்கிவிடுவது தான், அதி மேதாவித்தனம்.

தமிழ் உதயா

வலைதளத்திலிருந்து...


ஒரு காலத்தில நான் நடுநிலைவாதி என்று கூறிக் கொள்வதில் ஒரு வசதி இருந்தது. காலம் போகப் போக காட்சிகள், தேவைகள், அனுபவங்கள், வாழும் சூழல் என்று நம்முடைய அறிதலின்றியே ஒர் சார்பு நிலை நம்மை இயக்கியே வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. 

இன்று எனக்கான சார்பு நிலையை எடுத்துக் கொண்டேன். அதற்கான வலுவான காரணங்களுடன். அது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உலக பொது நெறிக்கு பொருந்துமொரு தத்துவ நோக்கில் அமைந்த சார்பு நிலை. 

பிழைப்பு வாதத்திற்கென சில நேரங்களில் இந்த நடுநிலை அரிதாரம் மிக்க வசதியாக இருந்து போய்விடுவதுமுண்டு. இதனில் இன்னொரு வகையான மனிதர்களுடனான அதாவது "காலத்தை வாங்கிப் போட்டு திரிதலை கவனிப்பவர்களுடைய' அணுகு முறையுடன் இந்த சந்தர்ப்ப வாத நடுநிலையும் ஊடுருவ வசதியாக இருப்பதால் பிழைப்பு வாத பேச்சுக்களுக்கு இடம் அமைத்து கொடுத்து விடுகிறது. 

எதன் பொருட்டும் கருத்து இல்லாத மனிதர்கள் இருக்கக் கூடுமா? இடம், பொருள் வைத்து பேசுவதையன்றி வேறு என்ன நம்மை தடுத்து விட முடியும்? இல்லைன்னா குறள் சொன்ன "சொல்லுக சொல்லிற் பயனுடைய... சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்' நெறியை நடுநிலைவாதிகள் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? இல்லை கள்ள மௌனம் is being practiced for convenience

காகன்னு எடுத்துக்கலாமா?
http://thekkikattan.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com