இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி!

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் தன்னார்வ அமைப்பு, உலகம் முழுவதிலுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய "இளைஞர்
இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி!

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் தன்னார்வ அமைப்பு, உலகம் முழுவதிலுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய "இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி - 2019' ஒன்றினை அறிவித்திருக்கிறது.  

அமைதி மற்றும் மனிதத்துவத்திற்காகத் தனது வாழ்வினைச் சமர்ப்பித்து வாழ்ந்த ஜப்பானிய அறிஞர் மசாகிஷா கோய்  என்பவரின் அமைதிக் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் 1999-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோய் அமைதி அறக்கட்டளை  எனும் அமைப்பு, 2004-ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) சிறப்பு ஆலோசகருக்கான நிலையினைப் பெற்ற ஓர் அமைப்பாகும். 

இந்த அமைப்பு உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களின் ஆற்றல், கற்பனை மற்றும் முன்முயற்சிகளைப் பயன்படுத்தி, சமூக வளர்ச்சிக்குத் தேவையானவற்றை இளம் உள்ளங்களில் இருந்து கற்றுக் கொள்வதற்கும், இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் எப்படி தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்பது குறித்த அவர்களது சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குமான நோக்கத்துடன் இப்போட்டி அமைக்கப்பட்டுள்ளது.   

இந்தக் கட்டுரைப் போட்டிக்கு "இரக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குதல்' (Creating a Society Full of Kindness) எனும் கருத்துரு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரக்கம் என்பதை என்ன பொருளில் நீங்கள் காண்கிறீர்கள்? இரக்கம் மிகுந்த சமுதாயத்தை எப்படி உருவாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இரக்கம் குறித்த செயல்பாடுகளில் பத்து செயல்களைக் குறிப்பிட்டு, அவற்றுடன் இரக்கம் பற்றிய உங்கள் அனுபவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு  கட்டுரையினை உருவாக்கி அனுப்பிட வேண்டும்.

பங்கேற்புக்கான வழிமுறைகள்:

1.    இக்கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களின் வயது 15-6-2019 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்களுக்கான பிரிவிலும், 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்களுக்கான பிரிவிலும் பங்கேற்கலாம்.
2.    கட்டுரை ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன்  மொழிகளில் 700 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜப்பானிய  மொழியாக இருப்பின், 1600 எழுத்து
களுக்கு மிகாமல் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
3.    கட்டுரையுடன் 1. பிரிவு (சிறுவர் அல்லது இளைஞர்), 2. கட்டுரைத் தலைப்பு, 3. பெயர், 4. முகவரி, 5. தொலைபேசி எண், 6. மின்னஞ்சல், 7. தேசியம், 8. 15-6-2019 அன்று வயது, 9. பாலினம், 10. பள்ளியின் பெயர் (தேவையிருப்பின்), 11. சொற்களின் எண்ணிக்கை போன்றவற்றைக் கட்டுரைக்கான தலைப்புப் பக்கத்தில்  குறிப்பிட வேண்டும்.
4.    கட்டுரைகளை அஞ்சல் வழியிலோ அல்லது இணையம் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.
5.    கட்டுரை முழுவதும் சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதழ்களிலோ, இணையத்திலோ வெளியானவையாகவோ அல்லது அதைத் தழுவியோ எழுதப்பட்டு இருந்தால் அக்கட்டுரை நிராகரிக்கப்படும்.
6.    கட்டுரையை ஒருவரே எழுத வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட குழுவினரால் எழுதப்பட்டிருக்கக் கூடாது.
7.    போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்டுரைகளின் பதிப்புரிமையும் போட்டி அமைப்பாளருக்குரியதாகும்.

கட்டுரைகளைச் சமர்ப்பிக்க:

இப்போட்டிக்கான கட்டுரையினைத் தனியாகவோ அல்லது தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் வழியாகவோ http://www.goipeace}essaycontest.org/ எனும் இணையமுகவரிக்குச் சென்று பதிவு செய்து சமர்ப்பிக்கலாம். அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புபவர்கள் “International Essay Contest c/o The Goi Peace Foundation, 1-4-5 Hirakawacho, Chiyoda-ku, Tokyo 102-0093 Japan” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இணையத்தில் சமர்ப்பிக்கவும், அஞ்சல் வழியில் அனுப்பப்பட்ட கட்டுரைகள் சென்றடையவும் கடைசி நாள்: 15-6-2019.  

பரிசுகள்: 

இப்போட்டிக்கு வரப்பெற்ற கட்டுரைகளிலிருந்து, சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இந்திய ரூபாய்  மதிப்பில் ரூ.63000  பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக இருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.31500  பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ஐந்து நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுப்பொருளும் அளிக்கப்படும். இது தவிர, சிறப்புக்குரியவர்களாக (Honorable Mention) 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுப்பொருளும் வழங்கப்படும்.  

இப்போட்டிக்கான முடிவுகள் அனைத்தும் 31-10-2019 அன்று இந்த அமைப்பின் www.goipeace.or.jp எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் பரிசு பெறுபவர்களுக்கு மட்டும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 அன்று ஜப்பானில் நடைபெறும் பரிசளிப்பு விழா நிகழ்வில் பங்கேற்பதற்கான பயணச் செலவினை இந்த அமைப்பு ஏற்றுக் கொள்ளும். மற்றவர்களுக்கான பரிசும்,  பாராட்டுச் சான்றிதழும் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்படும்.

இப்போட்டியைப் பற்றிய மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://www.goipeace.or.jp/en/work/essay-contest/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பாருங்கள்.     

(தகவல் உதவி - தேனி மு. சுப்பிரமணி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com