வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 182 

கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை  தரும்  உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 182 


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை  தரும்  உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள்.  அப்போது noisome என்ற சொல் குறித்து விவாதம் திரும்புகிறது.

கார்த்திக்: This room is so noisome?

(நடாஷா நமட்டுச் சிரிப்புடன் மூக்கை பொத்திக் கொள்கிறாள்)
கார்த்திக்: ஏன் என்னாச்சு?
(சேஷாச்சலம் வாயைப் பொத்தி
சிரிக்கிறார்)
கார்த்திக்: தப்பா சார்?
புரொபஸர்: நீ சொன்ன வாக்கியத்தில் இலக்கணப் பிழையோ சொற்பிழையோ
இல்லைடா. ஆனா?
கார்த்திக்: ஆனா என்ன சார்?
புரொபஸர்: பொருள் பிழை தான்...
கார்த்திக்: புரியல சார்.
புரொபஸர்: அதாவது தம்பி நீ noisy என்கிற பொருளில் பயன்படுத்தி இருக்கே.
கார்த்திக்: ஆமா
புரொபஸர்: ஆனால் அச்சொல்லின் பொருள் வேறு. Noisome என்றால் கப்படிக்கிறது என அர்த்தம். Having an extremely offensive smell. Noisome vapours emerged from the rotting solid waste in the dump yard. 

கார்த்திக்:  ஓ... அவ்வளவு கப்பா? சாரி சார்.
புரொபஸர்:  இன்னொரு பொருளும்  உண்டு. அது இதை விட மோசம். Very 
disagreeable or unpleasant. உதாரணமா, the activist, who wanted to bring to light the noisome truth about the involvement of the government in the people’s affected problems, has gone missing.  அதாவது, அரசும் பொதுமக்களும் அறிய விரும்பாத ஒரு சேதியை எழிலன் சொல்லத் துணிந்தார் என்பதை நாம் இப்படி ய்ர்ண்ள்ர்ம்ங் என குறிப்பிடலாம். ஆனால் இன்று இந்த சொல் அவ்வளவாய் புழக்கத்தில் இல்லை என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
சேஷாச்சலம்: After a while the constant attention from his newly wed wife was turning into quite noisome for Aravind. 

கார்த்திக்:  அது யாரு சார் அரவிந்த்?
சேஷாச்சலம்:  என் பக்கத்து வீட்டுப் பையன். அவனுக்கு போன மாசம் தான் கல்யாணம் ஆச்சு.  மனைவிக்கு அவன்னா கொள்ளை பிரியம். எழுந்தேளா, சாப்டேளா, தூங்கினேளான்னு? டார்ச்சர். அவளைப் பார்த்தாலே பையன் பதறுறான்.
கார்த்திக்:  ஜாலி தானே, அதை ஏன் கேவலங்கிறீங்க?
சேஷாச்சலம்: அது கேவலம் இல்லை, ரொம்பவே எரிச்சல் மூட்டுற காரியம் -extremely annoying. இந்த பொருளிலும் noisome என்பதைப் பயன்படுத்தலாம்.
கார்த்திக்:  ஓ... annoying!
சேஷாச்சலம்:  யெஸ், கவனிச்சேன்னா இந்த சொல்லின் வேர்ச்சொல் noye. இது பதினாலாம் நூற்றாண்டில் இருந்தே harmful அல்லது misfortune எனும் பொருளில் விளங்கி வந்தது. இதுவே பின்னர் சற்றே மிதமான annoy, annoyance எனும் சொற்களாக தோன்றி உருமாறின. இந்த வேர்ச்சொல்லின் மற்றொரு அவதாரமாகவே  noisome பழங்கால ஆங்கிலத்தில் விளங்கியது. துர்நாற்றமடிக்கிற, அசூயையான, அருவருப்பான எனும் அர்த்தங்களில் பயன்பட்டது. ஆனால் நாம் சிலநேரம் noisome, noisy ஆகியவற்றை  ஒரே  அர்த்தம்  கொண்ட  இரு சொற்கள்  என தவறாகப்  புரிந்து  கொள்கிறோம்.  ஆனால் இரண்டு சொற்களின் வேர்களும் வேறு வேறு. 13ஆம் நூற்றாண்டு பிரஞ்சு மொழியில் புழங்கின சொல்லே noise.  இது din, disturbance, brawl, uproar எனும் பொருட்களில் புழங்கியது. அதாவது மிகுதியான இரைச்சல், தொந்தரவூட்டும் சத்தம், அடிதடி, அமளி எனும் பல்வேறு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருந்தன. பதினாலாம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் சத்தமாய் எதைப் பற்றியாவது உரையாடுவது, ஒருவரைப் புகழ்வது எனும் பொருளில் noising எனும் ஒரு வினைச்சொல் நிலவியது. ஆனால் இச்சொல் இன்று இல்லை. மேற்சொன்ன அர்த்தங்களும் கழன்று போய், வெறுமனே உரக்க ஒலிக்கும் சத்தம் ய்ர்ண்ள்ங் என்று ஆகி விட்டது. அதாவது இச்சொல்லின் அர்த்தம் என்பது ஆரம்பத்தில் இருந்தே, ஆறு, ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இரைச்சல் என்பது தான்.
கார்த்திக்: சார் எனக்கு ஒரு சந்தேகம் - Brawl என்றால் குடிச்சிட்டு தகராறு, அடிதடியில் ஈடுபடுறது தானே?
புரொபஸர்: இல்லை, ஆனால் drunken brawl என ஜோடியாகச் சேர்த்து வழக்கமாக சொல்வார்கள். ஆழ்ஹஜ்ப் என்றால் ஜஸ்ட் அடிதடி. அதாவது பொதுவிடத்தில் கட்டிப் புரண்டு அடிப்பது. A physical fight involving a group of people in a public place.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com