வேலை... வேலை... வேலை...

01.08.2019 தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு  வயதுவரம்பில் சலுகை உண்டு.
வேலை... வேலை... வேலை...


வனத்துறை அதிகாரி வேலை

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination - 2019

காலியிடங்கள்: 90
வயது வரம்பு:  01.08.2019 தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு  வயதுவரம்பில் சலுகை உண்டு.
தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology ApXÕ Agriculture, Forestry போன்ற ஏதாவதொன்றை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 
முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர் முதன்மைத் தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும்.   
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை  ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_IFoS_2019-NN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2019

இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு

தேர்வு: UPSC-Civil Services Examination in 2019

மொத்த காலியிடங்கள்: 896
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி  21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு   வயது வரம்பில் தளர்வு வழங்கப் படும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு எனும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வான இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். பின்னர்
நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_CSPE_2019_N.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2019


எல்.ஐ.சி-இல் வேலை


மொத்த காலியிடங்கள்: 590
பணி: AAO (Generalist) - 350  
பணி: AAO (IT) - 150 
பணி: AAO (CA) - 50
பணி: AAO (Actuarial) - 30
பணி: AAO (Rajbhasha) - 10 

தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்தவர்கள், எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  தகுதியானவர்கள்.  ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரையுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும்  முடித்தவர்கள் ஆக்சுவரியல் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலை  பட்டம்  பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின் படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இருகட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி
கள் ரூ.100 செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.licindia.in/getattachment/59fa2d3e-40ad-4c4b-916d-95a58ee64123/Recruitment-of-Assistant-Administrative-Officer-20 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.03.2019


சாகித்ய அகாதெமியில் வேலை

பணி: Deputy Secretary (Sales) - 01

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Senior Accountant - 01

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant - 01

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Publication Assistant - 01

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-இல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 

விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi110001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com