வேலை... வேலை... வேலை...

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை
வேலை... வேலை... வேலை...

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை

மொத்த காலியிடங்கள்: 181
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Fire Officer - 01
பணி: Economist- 06
பணி: Security Officer - 19
பணி: Integrated Treasury Officers - 15
பணி: Credit Officers -122
பணி: Forex Officer -18
வயதுவரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வயது வரம்புகள் உள்ளன. அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் ஃபயர் இன்ஜினியரிங்கில் பிரிவில் பி.இ. முடித்தவர்கள், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், MBA, PGDBA, PGDBM, PGPM,  PGDM, CA, ICWA, CFA, FRM முடித்து 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முழுமையான விவரங்களை இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ன்ய்ண்ர்ய்க்ஷஹய்ந்ர்ச்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீர்.ண்ய்  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கல் அறிய: https://www.unionbankofindia.co.in/pdf/DETAILED-NOTIFICATION-ENGLISH-recruitment-110319.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.03.2019


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை

பணி: ஓட்டுநர் - 05
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை "பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி' என்ற பெயருக்கு காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.  
ஓட்டுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் தின ஊதிய அடிப்படையில்(நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர்
அப்பணியாளர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் பதவியில் அப்பதவிக்குரிய ஊதியக்கட்டு மற்றும் தரஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப்பேரூர், திருச்சிராப்பள்ளி -620 024 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.bdu.ac.in/docs/employment/driver-2019/driver-appointment-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.03.2019

தேசிய வீட்டு வசதி வங்கியில்  வேலை

மொத்த காலியிடங்கள்: 15
பணி: Assistant Manager (Scale I)

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.CA, ICWAI, CS, இந முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 21வயது  முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு  வயது வரம்பில் விலக்கு உண்டு.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:  www.nhb.org.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://nhb.org.in/wp-content/uploads/2019/03/Final-Advertisement_Asst.-Managers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2019


பரோடா வங்கியில் வேலை

பணி: Senior Relationship Manager

காலியிடங்கள்: 96
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Territory Head
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இரு பணியிடங்களுக்குமே ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டத்துடன் பணி அனுப்பவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.03.2019


வருமான வரித்துறையில் வேலை  

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Income Tax Inspectors - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tax Assistants - 18

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Stenographer Grade - II - 08

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: MultiTasking Staff - 08

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
விளையாட்டு தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டுப்பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுப் பிரிவுகள் எவையென்று அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ண்ய்ஸ்ரீர்ம்ங்ற்ஹஷ்ண்ய்க்ண்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதி
விறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy Commissioner of Income -Tax (Hqrs-Personnel), Room No.378 A, C.R.Building, I.P.Estate, New Delhi - 110 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.03.2019

தொகுப்பு:  இரா.வெங்கடேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com