இணைய வெளியினிலே...

ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது,கலி காலமாம்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
* எல்லா பக்கங்களிலிருந்தும்
எறியப்படுகின்ற 
சொற்களையெல்லாம்
பொறுக்கியெடுத்து...
விளையாட ஆரம்பித்துவிடுகின்றன
குழந்தைகள்.
சுதா மாணிக்கம்

* வேஷம் போடுவதற்கோ...
ஏராளமான மேக்கப் சாதனங்கள்.
வேஷம் கட்டுபவருக்கோ...
ஒரே முகம்.
நா.வே.அருள்

* எவ்வளவு அன்போடு அணைத்தாலும், 
கத்திக்கு வெட்டத்தான் தெரியும்.
அதுபோல்தான் சில உறவுகளும்...
எவ்வளவு அன்பாக இருந்தாலும்,
காயப்படுத்திவிடுவார்கள்.
செளந்தர் ராஜன் 

* உங்களை விட ஒரு படி தெளிவாக இருப்பவர்களோடு...
ஒருபோதும் உங்களால் பயணிக்க முடியாது. 
அவர்களை நீங்கள் 
அந்நியமானவர்களாக உணர்வீர்கள்.
இலங்கைவேந்தன் சுப்பையா

சுட்டுரையிலிருந்து...
காசு கொடுத்து வாங்காத
பொருள் தண்ணீர் தான்.. 
இங்கே அதையே நாங்கள்
காசு கொடுத்து வாங்குறோம்...
அப்புறம் எப்படி உன் தாகத்தை தீர்க்க போறேன்
தெரியலை.
குட்டி பொண்ணு 

* பொய் சொல்வது
சட்டை பட்டன் போடுவது போலத்தான்...
ஒரு பட்டன் தப்பா போட்டா
அடுத்து எல்லாம் தப்பாகிடும்! 
ஒரு பொய் சொன்னா
அடுத்து அடுத்து பொய் சொல்லணும்.
கடைநிலை ஊழியன்

* எதை வேணாலும் 
சுறுசுறுப்பா
பண்ணிப் பார்க்கத் தயார்...
உடற்பயிற்சியைத் தவிர
விமலாதித்த மாமல்லன்

* மரண ஓலமிட்ட 
சிட்டுக்குருவியின் குரல்...
கடைசி வரை கேட்கவேயில்லை,
மரம் வெட்டும் சத்தத்தில்!
வந்தித்தன்

வலைதளத்திலிருந்து...
ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது,
கலி காலமாம்.
தொடர்வண்டி நீராவியில்லாமல் ஓடுகிறது,
மின்சாரத்தின் உதவியாம்.
தொடர்பில்லாமல் தொலைக்காட்சியும் தொலைபேசியும்...
தகவல்தொடர்பின் 
புதுப் பரிணாமமாம்.
கடல் நீரைக் குடி நீராக்கி குடிக்கப்
போகிறோம்...
சுழற்சி மாற்றமாம். 
ஆமாம், இவையெல்லாம்
கலியுகத்தின் மாற்றம் பலியுகத்தின் தோற்றம்.
மறந்து விட்டோம் பண்பாட்டை
இழந்து விட்டோம் செயல்பாட்டை
அறிவியல் ஆடுகிறது வேட்டை
ஓசோனில் போடுகிறது ஓட்டை
தெரிகிறதா அதுகாட்டும் நடைபாட்டை?
அடையப் போகிறோம் விரைவில் சுடுகாட்டை.
http://arasooraan.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com