தேர்ந்தெடுங்கள்...வேளாண்மைப் படிப்புகளை!

தகவல் தொழில்நுட்பத்துறையில் பொறிறியல் படிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆர்வம் இப்போது குறைந்துள்ளது.
தேர்ந்தெடுங்கள்...வேளாண்மைப் படிப்புகளை!

தகவல் தொழில்நுட்பத்துறையில் பொறிறியல் படிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆர்வம் இப்போது குறைந்துள்ளது. மருத்துவம் பயில பலருக்கு ஆர்வம் இருந்தாலும் அதற்கான நுழைவுத் தேர்வு அச்சமூட்டுகிறது. பிற கலை, வணிகவியல் படிப்புகளிலும் பலர் ஆர்வமாகச் சேர காத்திருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் கடந்து வேளாண்மை சார்ந்த படிப்புகள் படித்தால் அது சார்ந்த பலதுறைகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதால் மாணவர்களிடையே வேளாண்மை படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமாக கோவையில் உள்ள "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திகழ்கின்றது. அது தரும் வேளாண்மை சார்ந்த படிப்புகளையும் அவற்றில் சேர தேவையான தகுதிகளையும் பார்ப்போம்.
வேளாண்மை சார்ந்த படிப்புகள்:
✦ B.Sc. (Hons.) (Agriculture)
✦ B.Sc. (Hons.) Horticulture
✦ B.Sc. (Hons.) Forestry
✦ B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics
✦ B.Tech. (Agricultural Engineering)
✦ B.Sc. (Hons.) Sericulture
✦ B.Tech. (Food Technology)
✦ B.Tech. (Biotechnology)
✦ B.Tech. (Energy and Environmental Engineering)
✦ B.Tech. (Bioinformatics)
✦ B.S. (Agribusiness Management)
✦ B.Tech. (Agricultural Information Technology)
இந்த இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ் டூ வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தொழில்நுட்பப் படிப்பு
களுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும். 
2019- ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். https://tnauonline.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
பல்கலைக்கழக கல்லூரிகள்:
கோயம்புத்தூர் வளாகம்:
1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
4. முதுகலை கல்லூரி
மதுரை வளாகம்:
1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
திருச்சி வளாகம்:
1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு
நிறுவனம், குமுலூர், திருச்சி.
2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
கிள்ளிக்குளம் வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்
கிள்ளிக்குளம், திருநெல்வேலி.
பெரியகுளம் வளாகம்:
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்,
பெரியகுளம், தேனி.
மேட்டுப்பாளையம் வளாகம்:
வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்
மேட்டுப்பாளையம்.
ஈச்சங்கோட்டை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்
ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.
குடுமியான்மலை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்
குடுமியான்மலை, புதுக்கோட்டை.
வாழவச்சனூர் வளாகம்:
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்
வாழவச்சனூர், திருவண்ணாமலை.
இவை தவிர, வேளாண்மைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்ற இருபதுக்கும் மேற்பட்ட பல தனியார் கல்லூரிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளன. 
மாணவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வேளாண் கல்விநிறுவனங்களில் சேர்ந்து பயன் பெறுங்கள்.
எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com