இதுதான் அடிப்படை!

கலை சம்பந்தமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவே கூடாது என்பது அதைவிடவும் முக்கியம். எதுவுமே கிடைக்காத நிலையில்தான் கலைப்பாடங்களில் சரணடைய வேண்டும் எனும்
இதுதான் அடிப்படை!

கலை சம்பந்தமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவே கூடாது என்பது அதைவிடவும் முக்கியம். எதுவுமே கிடைக்காத நிலையில்தான் கலைப்பாடங்களில் சரணடைய வேண்டும் எனும் எண்ணம் நிலவுகிறது. அப்படியானால், பாடப்பிரிவிலேயே இது உயர்ந்தது, அது தாழ்ந்தது எனப் பிரிக்கப்படும் நிலை உள்ளது என்றுதானே பொருள்? இது சரியா? அறிவியல் படிப்புகள் மட்டுமல்ல, கலைப் படிப்புகளைப் படித்தாலும் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உள்ளது. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைக் காட்டிலும் அந்தத் துறை சார்ந்து நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வமும் திறனும்தான். 
ஒரு மாணவர் எதைப் படிக்கலாம் என்பதை மதிப்பெண்களை வைத்து முடிவு செய்யாமல் அவருடைய விருப்பம், தனித்திறன்களை வைத்து முடிவு செய்வதுதான் சரி. அதற்கு முதலில் என்னுடைய இலக்கு என்ன? நான் என்னவாக விரும்புகிறேன்? எனக்கு மிகவும் பிடித்த பாடம் எது? எனக்கு மிகவும் கடினமான பாடம் எது? குடும்பத்தின் நிதிநிலவரம் என்ன? நான் தேர்ந்தெடுக்க நினைக்கும் படிப்புக்கான வேலை வாய்ப்புகள் என்ன? என்பது போன்ற கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் மனம் சொல்லும் விடையை பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களோடு கலந்துரையாடி உங்களின் அடுத்த கட்டப் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
வடகரை செல்வராஜ் எழுதிய 10 th / +2 - க்கு பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு? என்ற நூலிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com