இணைய வெளியினிலே...

நிழலும் ஒடுங்கட்டுமென இரவில் தியானித்தால்...மனதின் நிழல் ஒடுங்க மறுக்கிறது.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....

நிழலும் ஒடுங்கட்டுமென இரவில் தியானித்தால்...
மனதின் நிழல் ஒடுங்க மறுக்கிறது.

ஆரூர் சுப்பு

உலகத்துல நல்லவன்எப்பவும்கடைசிலதான்ஜெயிக்கிறான்...
அதுக்குள்ள கெட்டவன்நல்லா வாழ்ந்துட்டுப்போயிடுறான்.

அகரை பொன்.கெளதமன்

அதிகாரம் மனிதர்களை சமூகத்திலிருந்து பிரித்து...
சக மனிதனைப்போட்டியாளனாக்கிவிட்டது.

செல்வன் நடேசன்


பறவையின் மொழியே...
சிறந்த கவிதை

புன்னகை அம்சப்ரியா

என்னதான் திறமையா கெட்டவனாகக் காட்டிக்கிட்டாலும்...
நான் நல்லவன்னுஎல்லாரும் கண்டுபிடுச்சிடுறாங்கப்பா.

கவிதா பாரதி


சுட்டுரையிலிருந்து...

சூடா குடிக்கிற டீக்குகைப்பிடி இல்லாத கிளாஸ்...
கூலா குடிக்கிறஜூஸூக்கும், பீருக்கும்கைப்பிடியோட கிளாஸ்...
இதுதான் வாழ்க்கை .

பூனைக்குட்டி

பேசும் வார்த்தைகளைக்கவனமுடன் உபயோகித்தால், வாழ்க்கையை ஜெயிக்கலாம்!
நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர,
எந்தவித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனந்தி செல்வன்


நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால்...
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை.
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால்...
கண்ணீருக்கு அவசியமில்லை.

சுகுமார்

வலைதளத்திலிருந்து...


என்ன? தலைநகரம் தானேன்னு இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க! ஒரு தலைநகருக்காக தெலுங்கு பேசுற ஒரு மாநிலமே ஒரு பெரிய சண்டை போட்டு, அத்தலைநகரை மறந்து இன்னொரு தலைநகர் கிடைத்து, அதிலேயும் அதிகாரச் சண்டை வலுத்து, அப்புறம் இன்னொரு தலைநகருக்கு மாறி, அதையும் பங்கு பிரிக்கப் பெருஞ்சண்டை வந்து, இன்னிக்குத் தெலுங்கு மக்களே ரெண்டு மாநிலமா ஒடைஞ்சதா இல்லியா? எங்கேயும் எப்போதும் தலைநகரம் தலைநகரம் தான்.

தலைநகருக்கென்று ஒரு தனிமொழி. மொத்த மாநிலமும் 16 மணி நேரம் இருட்டில் கிடந்தாலும், தலைநகரத்திற்கு மின்வெட்டே கிடையாது. ஓடும் இரயில்களை நிறுத்தி ஒரு மாவட்டமே கழிவறைகளில் தண்ணீர் பிடித்தாலும் கூட, தலைநகரத்திற்குப் பக்கத்து மாவட்டத்து ஏரியில் இருந்தோ, பக்கத்து மாநிலத்து ஆற்றில் இருந்தோ தண்ணீர் "டான்டான்' என வந்துவிடும்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்குத் தன் கடும் எதிர்ப்பைக் காட்ட தலைநகரையே ஒருநாள் பெல்காம் நகரத்திற்குக் கர்நாடகா மாற்றிக் காட்டியது. வெள்ளைக்காரன் மட்டும் அன்று கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றாவிட்டால், இன்று பெங்காலி தேசிய மொழியாகி இருக்கும்.
தண்ணீரைக் காசிற்கு வாங்கியாவது சிங்கப்பூர் என்கிற சிங்கம் சிங்கிளா நிக்கிதா இல்லியா! தண்ணீரால் பிளவுபட்டுக் கிடக்கும் இஸ்தான்புல் தான் துருக்கியின் தலைநகரம் என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் பலர். தண்ணீரே இல்லாத ஜெருசலேமைத் தலைநகராக்கிப் பார்க்கத் தான் உலகம் முழுவதும் எத்தனை போர்கள்! அதனால், தலைநகரம் தானே என்று சாதாரணமாகச் சொல்லாதீர்கள்!

http://jssekar.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com