வேவு பார்க்கும் வைரஸ்!

செல்போன்களில் இணைய பயன்பாடு இல்லாதபோது, குறுஞ்செய்திகளை அனுப்ப எஸ்எம்எஸ்ஸை மட்டும்  பயன்பாட்டாளர்கள் நம்பி இருந்தனர். பின்னர் செல்லிடப்பேசியில் இணையவழி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப்
வேவு பார்க்கும் வைரஸ்!

செல்போன்களில் இணைய பயன்பாடு இல்லாதபோது, குறுஞ்செய்திகளை அனுப்ப எஸ்எம்எஸ்ஸை மட்டும் பயன்பாட்டாளர்கள் நம்பி இருந்தனர். பின்னர் செல்லிடப்பேசியில் இணையவழி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் வந்ததில் இருந்து பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து மக்களைக் கவர்ந்துவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு உலகம் முழுவதும் வாட்ஸ் அப்புக்கு வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர்.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானவை அல்ல என்பது தெரிந்திருந்தும், முக்கிய அரசுத் துறை தகவல்களை அதிகாரிகள் பகிர்ந்து வந்தனர். அதிலும், தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் 1,400 முக்கியப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் வேவு பார்க்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் "பெகாசஸ்' ( Pegasus) எனும் வேவு பார்க்கும் வைரஸை உருவாக்கியது. பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைக்காக இந்த வேவு பார்க்கும் வைரஸை விற்பனை செய்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனினும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரஸை பயன்பாட்டாளருக்கே தெரியாமல் வெறும் வீடியோ கால், சாதாரண எஸ்எம்எஸ் மூலம் ஸ்மார்ட்போனில் புகுத்திவிடலாம். அப்படி இந்த வைரஸை ஸ்மார்ட் போனில் புகுத்திவிட்டால் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே போட்டோ, வீடியோ, தொலைபேசி எண்கள், இ-மெயில்கள், தொலைபேசி உரையாடல்கள், பகிரப்பட்ட தகவல்கள் என அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொள்ள முடியும். நமது ஸ்மார்ட்போனில் இந்த வேவு பார்க்கும் வைரஸ் உள்ளதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

எப்படி நமக்குத் தெரியாமல் இந்த "பெகாசஸ்' புகுத்தப்படுகிறதோ, அதேபோல் அதை நமக்கு தெரியாமலேயே இந்த வைரஸை நமது செல்போனிலிருந்து நீக்கிவிடலாம். "பெகாசஸ்' வேவு பார்க்கும் வைரஸில் இருந்து தப்பிக்க வேறு ஸ்மார்ட்போனுக்கு மாறுவதுதான் ஒரே வழி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com