வாங்க இங்கிலீஷ் பேசலாம் 211

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 211

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்கிற பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். 
இந்தியர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில் வரும்  பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களை தொடர்ந்து பயன்
படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அப்போது prepone என்பது உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படாத, ஆனால் இந்திய ஆங்கிலத்தில் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல் என புரொபஸர் சொல்கிறார். அப்படி எனில் prepone என்பதன் மாற்றுச் சொல் என்ன என கணேஷ் கேட்கிறான். அதன் பதில் என்ன என்பதை அறிவோமா?
புரொபஸர்: Prepone என்பதை விட சரியான துல்லியமான பிரயோகம் advance. ஒரு கூட்டத்தை நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு முன்னால் நடத்த வேண்டும் என்றால் Shall we please advance the meeting by such a date  என கேட்கலாம். அது சரியான பயன்பாடு.
நடாஷா: சார் நீங்க a few years back என்பது தவறு, a few years before எனத் தான் சொல்லணுமுன்னு சொன்னீங்க. 
புரொபஸர்: சரி
நடாஷா: Backside window என்பது சரியா? என் அத்தை ஒருத்தங்க அப்படித்தான் சொல்வாங்க. இல்லை back window என்று சொல்லணுமா?
புரொபஸர்: நமது பின்புறத்தையும் ஒரு இடத்தோட பின்பகுதியையும் குழப்பிக்கிற தப்பு இது. Rear window எனச் சொல்வதே சரி. Rear view glass என்றால் நம் பைக்கில் பின்னால் நடப்பதை காண்பிக்கும் ஹேண்டில் பார் கண்ணாடி. அதை நாம் back view glass  என சொல்வதில்லை. அதே போல சிலர் backside entrance என தவறாகப் பயன்படுத்துவார்கள். Backside என்றால் நமது பிருஷ்டம் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. Rear entrance என்பது தான் சரி. அதே போல பின்னால் உள்ள பகுதியை rear என பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தலாம்.
நடாஷா: என்னைக் குழப்புகிற இன்னொரு பிரயோகம் - give an exam. When are you giving your TOEFL 
exam என நேற்று கூட ஒரு தோழி கேட்டாள். அதன் பொருள் எனக்குப் 
புரிகிறது. ஆனால் ஒரு தேர்வை நாம் யாருக்கும் அளிப்பதில்லையே, தேர்வை எதிர்கொள்கிறோம் என்பது தானே சரி.
புரொபஸர்: யெஸ், கரெக்ட். தேர்வு என்பதை நாம் யாருக்கும் கொடுப்பதில்லை. நாம் அதில் பங்கேற்கிறோம், அங்கு நாம் வாங்கிக் கொள்ளும் இடத்திலேயே இருக்கிறோம். நமக்கு படிப்பதற்கான பாடம் வழங்கப்படுகிறது. எதைப் படிக்க வேண்டும் என பாடத்திட்டம் வகுக்கப்படுகிறது. வகுப்பில் விளக்கங்கள் தரப்படுகின்றன. இறுதியாக பரீட்சைக்கான நாள், இடம் ஆகியவை நமக்கு அறிவிக்கப்படுகின்றன; அங்கு போனதும் நமக்கு கேள்வித்தாள் அளிக்கப்படுகிறது; தேர்வெழுதிய பின் நமக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆக நாம் எதையும் கொடுக்கிற இடத்தில் இல்லை, தேர்வுத்தாளைத் தவிர. அதனால் give an exam என்பது தவறு. அது இந்திய ஆங்கில பேச்சுவழக்கில் உள்ள ஒரு ஐய்க்ண்ஹய்ண்ள்ம். 
கணேஷ்: அப்போ சரியான பிரயோகம் என்ன சார்?
புரொபஸர்: To take an exam என்பதே சரி. Last year I took the SLET exam என சொல்லலாம். 
சேஷாச்சலம்: You can also sit an 
exam. He sat the qualifying exam for medicine last month and cleared it.
சேஷாச்சலம்: இல்லடா, sit for an 
exam தானே சரி?
புரொபஸர்: இல்லை நான் கேள்விப்பட்ட வரையில் sit an exam தான் சரி.
ஜூலி: நான் குறுக்கிடலாமா?
புரொபஸர்: ஓ... தாராளமா.
ஜூலி: என் சிற்றறிவுக்கு எட்டின வரையில் ரெண்டுமே சரி தான். சின்ன வித்தியாசங்கள் உண்டு. Sit an exam என்பது பிரிட்டீஷ் ஆங்கில பயன்பாடு. ஆனால் அமெரிக்க ஆங்கிலத்தில் take an exam என சொல்வது தான் வழக்கம். இந்த sit an exam என்பதில் அதிகமும் குறிப்பிட்ட பாடத்தின் தேர்வு என்பதன் இடத்தில் சொல்வார்கள். He sat his maths last month என சொல்வாங்க. Sit for an exam என்பது கொஞ்சம் பழைய வழக்கு.

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com