அரசு வேலை வேண்டுமா...!

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

நபார்டு வங்கியில் வேலை

மொத்த காலியிடங்கள்: 91
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Development Assistant - 82 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Development Assistant (Hindi)  - 09
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 18 வயது  முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
சம்பளம்: மாதம் ரூ.14,650 - 34,900 + இதர சலுகைகள் வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.450. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1409191823Final%20Advertisement%20DA%20-%202019.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.10.2019


ஆவின் நிறுவனத்தில்   வேலை

 பணி: Heavy Vehicle Driver

காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Light Vehicle Driver

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: 8 ஆம்  வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Villupuram - Cuddalore District, Co-operative Milk Producers Union Limited, Vazhudhareddy, Kandamanadi post, Villupuram - 605 401. 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 03.10.2019


தமிழக நீதிமன்றங்களில் வேலை

மொத்த காலியிடங்கள்: 176
பணி: Civil Judge
சம்பளம்: மாதம் 27,700 - 44770
தகுதி: சட்டப் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டு. வயது வரம்பு சலுகை பெற விரும்புவோர் வழக்குரைஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி சட்ட பட்டதாரிகள் 27 வயதிற்குள்ளும், சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்குரைஞர்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அனைத்து
பிரிவைச் சேர்ந்த விதவைப் பெண்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்
முதன்மைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
 கட்டணம்:  பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_25_CIVIL_JUGDE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.10.2019


பொதுத்துறை வங்கிகளில்  வேலை

பணி: Clerks
காலியிடங்கள்: 12,075 (இதில் தமிழகத்திற்கான காலியிடங்கள் 1379)
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700
வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.10.2019


ரிசர்வ் வங்கியில் வேலை

 மொத்த காலியிடங்கள்: 196
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Officers in Grade  B (DR) - General
காலியிடங்கள்: 156
பணி: Officers in Grad B (DR) - DEPR
காலியிடங்கள்: 20
பணி: Officers in Grade B (DR) - DSIM  
காலியிடங்கள்: 23
மேற்கண்ட 3 பணியிடங்களில் பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான துறையில் 20 பணியிடங்களும், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறையில் 23 பணியிடங்களும், பொதுப் பிரிவில் 156 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.   
தகுதி: பொதுப் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். DEPR மற்றும் DSIM பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறைசார்ந்ச பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதிற்குள்இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவிர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எம்.பில் முடித்தவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 32 .  முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 34 ஆகும். 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.    
விண்ணப்பக்கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:  ஜ்ஜ்ஜ்.ழ்க்ஷண்.ர்ழ்ஞ்.ண்ய் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.rbi.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் எழுத்துத் தேர்வு  நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு,  மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DEPRDSIM2019AA522FF4E0AA4
A7982C43E9845E217E7.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.10.2019 

தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com