Enable Javscript for better performance
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் !- Dinamani

சுடச்சுட

  
  im10


  மும்பையிலுள்ள  அரசு சட்டக்  கல்லூரியில்   சட்டத்துறையில் அடிப்படையாக உள்ள நெறிமுறைகளைப்  பின்பற்றுவதற்கு  மாணவர்களுக்கு ஆழமாகப் பயிற்றுவிக்கிறார்கள். 

  இங்குள்ள நூலகம் 1952 - ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.  200 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட சட்டநூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1886 - ஆம் ஆண்டு லார்ட் மெக்காலேவால் உருவாக்கப்பட்ட இந்தியன் பீனல் கோட்  சட்டத்தின் மூல நகல் இந்த நூலகத்தில் உள்ளது.   42 ஆயிரம் சட்டம் தொடர்பான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன.  எல்லா புத்தகங்களும் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  அதுமட்டுமல்ல,  இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பற்றிய விவரங்கள் இங்குள்ள கணினியில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே  ஒரு நூல் எங்கிருக்கிறது என்று  கணினியிலேயே  தேடிக் கண்டுபிடித்து
  விடலாம்.  மேலும்  உலக அளவில் வெளிவரும் சட்டம் தொடர்பான இதழ்கள், ஆவணங்களை இந்த நூலகத்தில் ஒருவர்  பார்வையிட முடியும்.  குறிப்பாக England Law Reporter, Chancery & Probate Division Law Reports, Lawyers Collective, U.N. Weekly News Letter, Journal of Criminal Law ஆகியவற்றுடன் கூட  ஹார்வார்டு லா ரிவ்யூ, யேல் லா ரிவ்யூ உள்ளிட்ட பல்வேறு சட்ட  மதிப்புரைகளையும்  இந்த நூலகத்தில் ஒருவர் படிக்க முடியும்.  இந்தியாவில் வேறு எந்த  சட்டக் கல்லூரியிலும்  இது போன்ற  நூலகம் இல்லை என்றே சொல்லலாம். 

  சட்டப்படிப்பு என்பது கிரிமினல் லா, சிவில் லா என்ற எல்லைக்குள் மட்டும் தற்போது இல்லை.  உலக அளவில் உள்ள பல்வேறு சட்டக் கல்லூரிகளில் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத பல்வேறு பிரிவுகளில் சட்டப் படிப்புகளை வழங்கி வருகிறார்கள். உதாரணமாக சிலவற்றைப் பார்ப்போம்:

  அட்மினிஸ்ட்ரேட்டிவ் லா,  ஆல்கஹால் லா,  அனிமல் லா,  ஆர்ட் அண்ட் கல்ச்சர் லா,  ஏவியேஷன் லா,  பயோ எத்திக்ஸ் லா,  கம்ப்யூட்டர் லா,  கம்பெட்டிஷன் லா, கன்ஸ்ட்ரக்ஷன் லா, கல்ச்சுரல் புராபர்ட்டி லா,  காப்பி ரைட் லா, டிஃபேமேஷன் லா,  என்டர்டெயின்மென்ட் லா,  ஹெல்த் அண்ட் சேஃப்டி லா,  இன்டர்நெட் லா, மீடியா லா, மைனிங் லா,  மியூசிக் லா,  பப்ளிக் ஹெல்த் லா,  ரியல் எஸ்டேட் லா, ஸ்பேஸ் லா,  ஸ்போர்ட்ஸ் லா,  டெக்னாலஜி லா,  வாட்டர் லா உள்ளிட்ட பல புதிய  80-க்கும் மேற்பட்ட   சட்டப்படிப்புகள்   உலகின் பிறநாடுகளில்  கற்றுத் தரப்படுகின்றன. 

  இவ்வளவு சட்டப்படிப்புகளுக்கான தேவை என்ன?  உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது.  வளர்ச்சிக்கு ஏற்ற பொருத்தமான சட்டங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. 

  தற்போது  உலக அளவில் சொல்லித்தரப்படும் சட்டப்படிப்புகளைப்  படிக்கக் கூடிய மாணவர்கள், பல்வேறு துறைகளில் ஏற்படக் கூடிய  சட்டரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் காண முடியும்.  நமது நாட்டில்  அதிகபட்சமாக நான்கைந்து  துறை சார்ந்த சட்டப் படிப்புகளே சொல்லித் தரப்படுகின்றன. இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். 

  தற்போது உலகின் சிறந்த சட்டக் கல்லூரியான ஸ்டான்போர்ட் லா ஸ்கூலை (Stanford Law School) எடுத்துக் கொண்டோமானால் அவர்கள் கீழ்க்காணும் துறைகளில்  மிக அதிக ஆர்வத்துடன் சட்டப்படிப்பை வழங்கி  வருகிறார்கள். சட்டரீதியான கல்வித்துறை,   கிளினிக்கல் எஜுகேஷன், கிரிமினல் லா, ஹெல்த் லா அண்ட் பாலிசி, இன்டர்நேஷனல் லா அண்ட் கம்பேரேட்டிவ் லா, லா அண்ட் பப்ளிக் பாலிசி - லா, எக்னாமிக் அண்ட் பிசினஸ் - லா,  சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி- பப்ளிக் சர்வீஸ் அண்ட்  பப்ளிக் இன்டெரஸ்ட் லா ஆகிய முதன்மைப் பிரிவுகளில் சட்டக் கல்வியை அளித்து வருகிறார்கள்.  

  எனினும் இந்த முதன்மைப் பிரிவுகளில் அளிக்கப்படும்  சட்டக் கல்வியானது, மேலும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு    பல்வேறு படிப்புகளாகச் சொல்லித் தரப்படுகின்றன. 

  உதாரணமாக   Law, Science & Technology (LST)) பிரிவை எடுத்துக் கொண்டோம் என்றால்,  அது Center for E-Commerce, Center for Internet and Society(CIS), Center for Law and the Biosciences,  CodeX, Transatlantic Technology Law Forum ஆகிய  உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேன்மேலும் நுட்பமாக சட்டம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.  

  தற்போது உலகமயமாக்கல் காரணமாக ஒரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனமானது பல்வேறு நாடுகளில் தங்களுடைய வணிகம், சேவையை விரிவாக்கம் செய்கின்றன. அப்படி விரிவாக்கம் செய்யும்போது பல்வேறு நாடுகளின் சட்ட திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  

  லகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள வழக்கறிஞர்களுடனும்,நீதிபதிகளுடனும், சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து   செயல்பட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பல நாடுகளின் சட்டங்களை ஒரு சட்டத்துறை சார்ந்தவர் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  அதற்காகவே ஸ்டான்போர்ட்  லா ஸ்கூலில்   உயர்கல்வியில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறார்கள்.  உதாரணமாக இன்டர்நேஷனல் அண்ட் குளோபல் லா என்ற  சட்டப்படிப்பை வழங்கி வருகிறார்கள்.  இதில்  இன்டர்நேஷனல் ஹியூமன் ரைட்ஸ் அண்ட் கான்ஃபிளிக்ட் ரிசல்யூஷன்,  கிளினிக்: கிளினிகல் பிராக்டிஸ் என்ற பிரிவு உள்ளது.  அதேபோன்று, ஆப்கானிஸ்தான் லீகல் எஜுகேஷன் புராஜெக்ட் , இன்டர்நேஷனல் கமர்சியல் ஆர்பிட்ரேஷன், கம்பேரேட்டிவ் கார்பரேட் லா அண்ட் கவர்னன்ஸ்,  ஈரோப்பியன் யூனியன் லா, இன்டர்நேஷனல் இன்வெஸ்ட் மென்ட் லா, இன்டர்நேஷனல் புராபர்ட்டி: இன்டர்நேஷனல் அண்ட் கம்பேரேட்டிவ் காப்பி ரைட் , இன்டர்நேஷனல் டாக்ஸ், இன்டர்நேஷனல் டிரேடு லா,  இன்டர்நேஷனல் பிசினஸ் டிரான்ஸ்சேக்ஷன் அன்ட் லிட்டிகேஷன் உட்பட பல பிரிவுகள் உலகமயமாக்கலின் விளைவாக எழுந்த தொழில், வணிக, சேவைகளுக்கான சட்டங்களைச் சொல்லித் தருகிறார்கள்.

  மருத்துவத்துறையில் இந்த நூற்றாண்டில்  எண்ணற்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.  மனித உடலுக்குள் எதிர்காலத்தில் நானோ போட்ஸ் அல்லது நானோ ரோபோட்ஸ்  ஆகியவற்றை அனுப்பி,  அவற்றை வெளியிலிருந்து இயக்கி அவருடைய உடலில் சிகிச்சை செய்வதும் இப்போது நிகழ்கிறது. அவ்வாறு சிகிச்சை செய்யும்போது  ஏதேனும் தவறு  ஏற்பட்டால் அதன்மூலமாக அந்த மனிதர் வேறு ஓர்  உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம்.   உடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட நானோ போட்ஸ், நானோ ரோபாட் போன்றவை  உடலுக்குள் ஏதேனும் தீங்கு விளைவித்தாலோ ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து சட்டச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.  அத்தகைய சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கான  புதிய சட்டதிட்டங்களை  ஏற்படுத்தும் தேவை இருக்கிறது. அதை  இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. குறிப்பாக இவர்கள் இதற்காக ஏற்படுத்திய ஆராய்ச்சி மையங்கள்  Center For Law And The Bio Sciences, Stanford Program In Neuroscience And Society (Spins), Center For Health Policy/ Primary Care Outcomes Research, The Stanford Institute For Economic Policy Research (Siepr), Stanford Center For Biomedical Ethics, Stanford Center On Longevity, School Of Medicine Department Of Health Research And Policy, Clinical Excellence Research Center, Stanford Center For Innovation In Global Health ஆகிய 9 பிரிவுகளில் இயங்கி வருகின்றன.

  பயோ மெடிகல் எத்திக்ஸ் 1989 - ஆம் ஆண்டு  ஸ்டான்போர்ட் மெடிக்கல் ஸ்கூலுடன் இணைந்து பயோ மெடிக்கல் சயின்ஸ் அண்ட் கிளினிகல் மெடிசனில் நெறிமுறைகளை உருவாக்குவற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த மையமானது   கிளினிகல் டீச்சிங், கிளினிக்கல் பிராக்டிஸ், கிளினிகல் எத்திக்ஸ்,  கிளினிகல் கான்ஸன்ட்ரேஷன்,  கிளினிகல் ரிசர்ச் ஆகிய 5 துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது. 

  1995 - ஆம் ஆண்டு இங்கு உருவாக்கப்பட்ட எத்திக்ஸ் அண்ட் சொசைட்டி என்ற உயர்கல்வியில்    உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதி தருகின்ற நிறுவனங்கள் சட்டரீதியாக தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? இந்த ஆராய்ச்சிகளுக்கு சோதனைரீதியாகப் பயன்படுத்தப்படக் கூடிய   மனிதர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய தகவல்கள் எவை? என்பவை கற்றுத் தரப்படுகின்றன.   இந்த  ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொள்ளக் கூடிய ஆராய்ச்சியாளர்கள்,  கற்றுத் தரும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு பயோ மெடிகல் எத்திக்ஸ் லா கற்றுத் தரப்படுகிறது.  

  இவை தவிர,  இங்கு ஸ்டெம்  செல்ஸ் ஆராய்ச்சி தொடர்பான மருத்துவ நடவடிக்கைகளில் குறிப்பாக,    ஜெனடிக்ஸ், ஸ்டெம் செல்ஸ், நீரோ எதிக்ஸ் (Neuroethics),  என்ட் ஆஃப் லைப், உடல் உறுப்புகளைப் பொருத்துதல், ஹெல்த் டிஸ்பாரிட்டிஸ் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்காக  இவர்கள் சட்டதிட்டங்களை உருவாக்கியுள்ளார்கள்.  இந்த மருத்துவ நடவடிக்கைகளில் அங்கமாக உள்ள  அனைத்தையும் மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சிக்கான மாதிரிகள் உட்பட எல்லாவற்றிற்கும் உரிய சட்டதிட்டங்களை  வரையறுப்பதற்கு  இவர்கள் உலக  அளவில் செயல்பட்டு வருகின்றனர். 

  (தொடரும்)

  கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai