இணைய வெளியினிலே...

பேசுங்க... அலைபேசி இல்லாம.கனவு காணுங்க... போதை வஸ்துகள் இல்லாம.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

பேசுங்க... அலைபேசி இல்லாம.
கனவு காணுங்க... போதை வஸ்துகள் இல்லாம.
புன்னகையுங்க... கேமரா இல்லாம.
அன்பு செய்யுங்க... எந்த 
நிபந்தனையும் இல்லாம.
நட்பென்றால் நாம் என்போம்


பருவ மழையல்ல...
வெப்பச் சலனத்தால் பிழைத்துக் கிடக்கிறோம்
கொஞ்சமேனும் வறட்சியை வென்று. 

 சோழ. நாகராஜன்

கூர்ந்து பாருங்கள்...
கூழாங் கல்லின் மீதும் 
படிந்திருக்கலாம்
காலம் நடந்த தொலைவு.

ஆரூர் தமிழ்நாடன்


நதி போல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை தான்... ஆனாலும், 
சமயத்தில் படிந்து விடுகிறது பாசி...
இதயங்களில் இன்னமும் இங்கு ஈரம் இருப்பதால். 

கிரிதரன்


சுட்டுரையிலிருந்து...


ஒரு விரைவுப் பயணத்தில் 
சாலையில் விழுந்து
சதைகள் கிழிந்து
குருதி வெள்ளத்தில்
குற்றுயிராய்க் கிடந்தவரை 
வேடிக்கையாய்க் கடந்து
விட்டபோது...
முதலுதவியும் அறுவைச் சிகிச்சையும்
தேவைப்பட்டதென்னவோ 
என் மனசாட்சிக்குத்தான்.

ச.முத்துப்பாண்டி 

சிறகுகள் விரியத் தொடங்கியதும்... 
எல்லைகளற்று வானமும் சேர்ந்தே நீள்கிறது. 

நிலா

குழம்பியிருக்கிறோம் எனப் புரிந்துகொள்ள முடிதலே ஒருவகை தெளிவுதான்.

தற்குறி



பறக்கவியலா பறவைக்கு உயரம் என்றால் பயம்.!

யாது



இல்லாத ஒன்றில் நிம்மதி இருப்பதாய் தேடுவது தான் மனிதனின் மனம்.

அதியந்த காமன்


வலைதளத்திலிருந்து...

போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதனே மனிதன் மீது அன்பு காட்ட சிரமப்படுகிறான். ஒரு பிராணி மீது அன்பு காட்ட கற்றுக் கொண்டால் மனித நேயம் தானாக வந்துவிடும்.


சிறு வயதில் பிராணிகள் மீது அன்பு கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் பெற்றோர் மீதும் பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பிராணிகள் செய்யும் தவறுகளைச் சகித்துக் கொள்ள கற்றுக் கொண்டால் எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியும்.

பிராணிகள் செய்யும் குறும்புகளை இரசிக்க கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் மன அழுத்தம் தானாகக் குறைந்து விடும். 

வளர்ப்புப் பிராணிகள் மீது அன்பு காட்டத் தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது. 

அதனால் தான் இன்றைய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி  வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணர வேண்டும். இன்றிலிருந்து இனி யாரையும் "நாயே' என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.

http://santhyilnaam.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com