சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 64

1921-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூரினால் விஸ்வபாரதி என்ற கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டு 1951 -ஆம் ஆண்டு மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 64

1921-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூரினால் விஸ்வபாரதி என்ற கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டு 1951 -ஆம் ஆண்டு மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் நேஷனல் இம்பார்ட்டன்ஸ் (INI) என்ற தகுதி அதற்கு வழங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, இசை, ஓவியம் ஆகியவற்றை இணைத்து கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இந்த பல்கலைக்கழகத்தில் இசை, ஓவியம், நாடகக் கலை மற்றும் பிற நிகழ்த்துகலைகள் ஆகியவை இணைந்த புதியமுறையிலான கல்வித் திட்டம் இங்கு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இங்கு இளங்கலைப் பட்டப்படிப்பாக சங்கீத் பாவனா என்ற துறையின் கீழ் இசை, நடனம் மற்றும் நாடகம் கற்றுத் தரப்படுகிறது. இளங்கலை 3 ஆண்டு பட்டப்படிப்பு (பி.ஏ. மியூசிக்) ரவீந்திர சங்கீத் மணிப்புரி நடனம், கதகளி நடனம், நாடகம் மற்றும் நிகழ்த்துகலைகள் கற்றுத் தரப்படுகின்றன. பி.ஏ. மியூசிக் படிப்பில் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் மியூசிக் வாய்ப்பாட்டு, சிதார், எஸ்ராஜ், தபலா, பகவாஜ் (Pakhawaj) ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன. 
இந்தப் பட்டப்படிப்புகளில் சேர பிளஸ் டூ தேர்வில் 45 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இங்கு மாஸ்டர் ஆஃப் மியூசிக் என்ற முதுகலைப் பட்டப்படிப்பும் உள்ளது. இது உலகிலேயே புகழ்பெற்ற இசை, நடன மற்றும் நாடக கல்விநிறுவனம் ஆகும். இங்கு படித்த மாணவர்கள் இத்துறைகளில் உலக அளவில் தனிமுத்திரையைப் பதித்து உள்ளனர். 
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் "டிபார்ட்மென்ட் ஆஃப் வோகல் மியூசிக்’ உள்ளது. 1950 -ஆம் ஆண்டு பண்டிட் கோவிந்த் மால்கரால் தொடங்கப்பட்டது. கிளாசிக்கல் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ், வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் சார்ந்த இசை, நடனம் ஆகிய நான்கு துறைகளில் சிறந்த கலைஞர்களைக் கொண்டு இந்தக் கல்லூரி அதன் தொடக்கக் காலத்திலிருந்தே உருவாக்கப்பட்டது. இங்கு பயில்வதற்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், ஸ்ரீ லங்கா, மொரிஷியஸ் ஆகியவற்றிலிருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். இங்கு பயின்ற மாணவர்கள் இந்திய மற்றும் உலக அளவிலான இசைக்கான பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்கள். இங்கு இசை சார்ந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்த பல்கலைக்கழகத்தில் செளத் இண்டியன் கிளாசிக்கல் மியூசிக், டான்ஸ் மற்றும் மியூசிக்காலஜி (இசையியல்) என்ற இசை பற்றிய ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவை சொல்லித் தரப்படுகின்றன. சைக்கலாஜி, சோசியலாஜி, நியூராலஜி ஆகியவற்றின் அடிப்படையில் இசை பற்றிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இங்கு பல்வேறு பட்டயப் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. Dance diploma, Instrumental Diploma, Musicology diploma, Vocal Music Diploma ஆகிய முழுநேரப் பட்டயப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. பகுதி நேர மூன்றாண்டு பட்டயப் படிப்புகள் இசை மற்றும் நடனம், வாய்ப்பாட்டு, ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, சிதார், வயலின், புல்லாங்குழல், தபலா, கதக், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன. "ரவீந்திர சங்கீத் சாஸ்த்ரா’ என்ற இரண்டாண்டு முதுநிலை பட்டயப்படிப்பும் வழங்கப்படுகிறது. 
இளங்கலைப் பட்டப்படிப்பாக இசை மற்றும் நிகழ்த்துகலைகளில் Vocal, Sitar, Violin,Flute,
Tabla,  Sitar, Violin, Flute,  Tabla, 
Kathak,  Bhartnatyam ஆகிய பிரிவுகளில் சொல்லித் தரப்படுகின்றன. மேற்கண்ட பிரிவுகளில் முதுகலைப் பட்டப் படிப்புகளும் உள்ளன. மாஸ்டர் ஆஃப் மியூசியாலஜி என்ற படிப்பும், இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.
1915 -ஆம் ஆண்டு கொல்கத்தா ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் வாழும் இளம் மாணவர்களுக்கு இசையில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு இசைக் கருவிகளைக் கொண்டு இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், ஒடிசி, கதக் போன்ற நடனங்களை இளம் மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார்கள். டிபார்ட்மென்ட் ஆஃப் இண்டியன் மியூசிக் 1975 ஆம் ஆண்டு பண்டிட் ரவிசங்கரால் உருவாக்கப்பட்டது. இந்த ஒரு கல்லூரி மட்டுமே இந்தியன், வெஸ்டர்ன், கிளாசிக்கல், கான்டெம்பரரி மியூசிக், டிராமா, ஸ்பீச் ஆகிய 104 பிரிவுகளுக்கும் மேலாக இளம் வயதினருக்கு கற்றுத் தருகிறது. இந்தக் கல்லூரி கல்கத்தா சேம்பர் ஆஃப் ஆர்கெஸ்ட்ராவை உருவாக்கியுள்ளது. இதில் எண்ணற்ற தொழில்முறைக் கலைஞர்களை வைத்து நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இசைக் கலைஞர்கள் பயிற்சி செய்வதற்கும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவர்கள் கொல்கத்தாவில் உள்ள சிறந்த ஹோட்டல்களில், அரசு சார்ந்த விழாக்களுக்கு வருகை புரியும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க இந்த இசைக்குழு பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற முயற்சிகள் தமிழகத்தில் அதிமாக இல்லை. இந்தக் கல்லூரியின் பேட்டர்ன் இன் சீஃப்பாக எப்போதுமே மே.வங்க கவர்னர் இருந்து வருவது வழக்கமாக உள்ளது. 
இங்கு மேற்கத்திய இசை மற்றும் நிகழ்த்துகலைகள் தொடர்பான படிப்புகள் இளம் வயது மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. 
இதேபோன்று யுனிவர்சிடி ஆஃப் மும்பையில் டிபார்ட்மென்ட் ஆஃப் மியூசிக் 1857 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் இசைக்கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இதில் குறிப்பாக 19 -ஆம் நூற்றாண்டில் பண்டிட் விஷ்ணு திகாம்பார் பனுஷ்கார், பண்டிட் விஷ்ணுநாராயணன் பட்கண்டே என்ற இரு கலைஞர்கள் பேராசிரியர்களாக மாறி இசை கல்வியையும், இசை ஆராய்ச்சிகளையும், தற்போதுள்ள நவீன இசையைப் பாரம்பரிய இசையுடன் இணைப்பது என்ற புதிய அணுகுமுறையையும் உருவாக்கினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இங்குள்ள பாடத்திட்டம் நெறிப்படுத்தப்பட்டு சிறந்த முறையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இன்றும் பயிற்றுவிக்கும் முறை, பழைய கல்விமுறையான குரு -சிஷ்ய முறையிலேயே உள்ளது. 
நடனம், இசை, நாடகம் மற்றும் பாரம்பரிய கலைகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள் , முதுநிலை பட்டயப் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. சான்றிதழ் படிப்புகளில் Certificate Course in Music Composition and Direction,  Certificate Course in Studio Singing Technique, Certificate Course in Music Appreciation and Music Journalism, Certificate Course in Sound Recording and Sound Reproduction,  Advanced Certificate Course in Sound Recording and Reproduction,  Certificate Course in Light Music ஆகியவை நவீன இசைத்துறை சார்ந்த படிப்புகளாக உள்ளன. நாட்டுப்புறக் கலைகளில் பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன. 
இதுபோன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் (University of Delhi) டிபார்ட் மென்ட் ஆஃப் மியூசிக் உள்ளது. இசை சார்ந்த படிப்புகள் இங்கே சொல்லித் தரப்படுகின்றன. 1960 -ஆம் ஆண்டு டாக்டர் வி.கே.ஆர்.வி.ராவ் என்ற பொருளாதார பேராசிரியர் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது இந்தத் துறை தொடங்கப்பட்டது. ஹிந்துஸ்தானி இசையில் வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள், கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் முதலில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் பன்னிரண்டுதான். 
பி.ஏ. மியூசிக், பி.ஏ.ஹானர்ஸ் இன் மியூசிக், ஹிந்துஸ்தானி கிளாசிக்கல், இன்ஸ்ட்ரூமென்டல், கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு ஆகியவை வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ படித்தவர்கள் இதில் சேரலாம். இங்கே முதுகலைப் பட்டப்படிப்புகளும் உள்ளன. எம்.ஏ. மியூசிக், எம்ஃபில் மியூசிக் படிப்புகளும் உள்ளன. 
இங்குள்ள மியூசிக் லைப்ரரியில் ஏறத்தாழ 16 ஆயிரம் இசை சார்ந்த கிடைத்தற்கரிய புத்தகங்கள் உள்ளன. இசை தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் பழைய தகவல்களைத் திரட்ட ஏதுவாக இவை உள்ளன. 304 பிரெய்லி புத்தகங்கள் கண்பார்வையற்றவர்களுக்கு உள்ளது. இதுதவிர 2643 ஆடியோ கேசட்ஸ் மற்றும் 695 சிடிகள் உள்ளன. 
தற்போது டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு இந்திய பாரம்பரிய இசையையும், உலகம் முழுவதும் இசை மாறுபட்டு வளர்ந்திருப்பதையும் பயிற்றுவித்து வருகிறார்கள். பழைய காலத்திலிருந்து இசை வளர்ந்த வரலாற்றை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். அமெரிக்கா, ஜப்பான், மொரிஷியஸ், ஈரான், தாய்லாந்து, சீனா, நெதர்லாந்து, தென்கொரியா, நேபாளம், பிஜி, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்து மாணவர்கள் பயில்கிறார்கள். 
இத்துறையின் கீழ் இயங்கிவரும் நூலகத்தில் 2300 முதுமுனைவர் பட்ட ஆய்வேடுகள், 16000 புத்தகங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, உலகில் யார் வேண்டுமானாலும் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் மூலமாக படிக்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com