சொற்கள்!

பொதுவாகவே, பொது மனிதர் ஒருவர் பேசும் ஒவ்வொரு சொல்லையுமே அதன் பொருள் காண பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஒரு செய்தித்தாளின் தலைப்புச் செய்திபோல சூழலிலிருந்து பிரித்தெடுத்துப் போடப்படும் சொற்கள்
சொற்கள்!

பொதுவாகவே, பொது மனிதர் ஒருவர் பேசும் ஒவ்வொரு சொல்லையுமே அதன் பொருள் காண பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஒரு செய்தித்தாளின் தலைப்புச் செய்திபோல சூழலிலிருந்து பிரித்தெடுத்துப் போடப்படும் சொற்கள், குறும்பு செய்ய விரும்பும் யாருக்கும் விளையாட்டுப் பொருளாக ஆகிவிடுகின்றன. மேலும் வேறு இடங்களில் பொதுவாகப் பயன்பாட்டிலிருக்கும் சொற்களும், பழ
 மொழிகளும் இன்னும் மோசம். ஏனென்றால் அவற்றை எளிதாக, வேண்டுமென்றே திரித்துப் பொருள் கொள்ளலாம். பொதுவான ஓர் உரையாடல் வேண்டுமென்றால் சொற்களை அவற்றின் சூழலிலிருந்து பிரித்து எடுக்காமல், படிக்க வேண்டும்.
 .... நாம் எல்லாருமே பொது உரையாடல்களைச் சிறப்பாக்க வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். பேச்சாளர்கள் தங்களது சொற்களைக் கவனமாகக் கையாள வேண்டும். மனதைப் புண்படுத்தும் சொற்களைத் தவிர்க்க வேண்டும். அதேசமயம் எல்லா இடங்களிலுமே, பேசுவோர் அவமானம் தரும் சொற்களைப் பேசுகிறாரோ என்று கேட்போர் பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. என்ன நோக்கத்தோடு பேசுகிறார் என்பதைச் சொற்களைச் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டும். அதாவது பயனுள்ள செய்திப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாம் பார்க்கும் கோபமான சொற்பரிமாற்றத்திற்குப் பதிலாக மரியாதையும் பொறுத்துப் போதலும் வேண்டும்.
 ரகுராம் ஜி.ராஜன் எழுதிய "நான் செய்வதைச் செய்கிறேன்'
 நூலிலிருந்து...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com