"ஜோக்கர்' வைரஸ்!

பல்வேறு வகையிலான புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் அளிக்கும் மனிதனின் மூளையைப்போல், ஸ்மார்ட் போன்களின் மூளையாக செயலிகள் (ஆப்) செயல்படுகின்றன
"ஜோக்கர்' வைரஸ்!

பல்வேறு வகையிலான புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் அளிக்கும் மனிதனின் மூளையைப்போல், ஸ்மார்ட் போன்களின் மூளையாக செயலிகள் (ஆப்) செயல்படுகின்றன. சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரின் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஆப்கள் உள்ளன. இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 24 ஆப்களில் "ஜோக்கர்' என்ற வைரஸ் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்களில் உள்ள விளம்பரத்தின் மூலம் ஸ்மார்ட் போனில் ஊடுரும் ஜோக்கர் வைரஸ், தொலைபேசி எண்கள், எஸ்எம்எஸ், போனின் விவரங்கள் ஆகியவற்றைத் திருடிவிடும். பின்னர் ஆப்பின் படத்தை மட்டும் ஸ்கிரீனில் பெரிதாகக்காண்பித்து, இண்டர்நெட் விளம்பரங்களைத் தானாகவே சப்ஸ்கிரைப் செய்துவிடும். இதன் மூலம் அந்த ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளருக்கு தெரியாமலேயே விளம்பரத்தின் சந்தாதாரராக அவரை மாற்றிவிடும். இந்த வைரஸைக் கொண்ட 24 ஆப்களை 4,27,000 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஆப்களை உடனடியாக அழிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
24 ஆப்களின் விவரம்: Beach Camera 4.2, Mini Camera 1.0.2, Certain Wallpaper 1.02,  Reward Clean 1.1.6, Age Face 1.1.2, Altar Message 1.5, Soby Camera 1.0.1, Declare Message 10.02, Display Camera 1.02, Rapid Face Scanner 10.02,Leaf Face Scanner 1.0.3, Board Picture editing 1.1.2, Cute Camera 1.04, Dazzle Wallpaper 1.0.1, Spark Wallpaper 1.1.11, Climate SMS 3.5, Great VPN 2.0, Humour Camera 1.1.5, Print Plant scan, Advocate Wallpaper 1.1.9, Ruddy SMS Mod, Ignite Clean 7.3, Antivirus Security - Security Scan, App Lock Collate Face Scanner.
இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன் உள்பட 37 நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிரபல "கேமரா ஸ்கேனர்' ஆப் -இலும் வைரஸ் புகுந்துள்ளதால் அதனை அப்டேட் செய்ய வேண்டாம் என்றும் அதனை உடனடியாக அழிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
தப்பிக்க என்ன வழி?
கணினி, ஆன்ட்ராய்ட், ஐ போன் போன்றவற்றில் இதுபோன்ற வைரஸ் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஆப்களை கூகுள் பிளே, ஆப்பிள் ஆப் ஸ்டோர், வின்டோஸ் ஸ்டோரில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்; பிரபலமில்லாத நிறுவனங்களின் ஆப்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்; இமெயில் - எஸ்எம்எஸ்களில் வரும் தெரியாத லிங்குகளைக் கிளிக் செய்யக் கூடாது; மென்பொருள் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்; சிறந்த ஆன்டி வைரஸைப் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com