வாங்க இங்கிலீஷ் பேசலாம் 209 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 209 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் வரும் பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அதற்கான உதாரணங்களில் ஒன்றாக many years back his name was Dileep எனும் வாக்கியத்தை முன்வைக்கிறார்கள். இதில் பிழை என்ன? Many years back என்பது தப்பென்றால் வேறெப்படி சொல்வது? அறிவோம் வாங்க...
கணேஷ்: இதிலென்னங்க தப்பு? Two days back I was at the bank அப்டீன்னு சொல்லக் கூடாதா?
புரொபஸர்: ம்ஹும்... கூடாது.
கணேஷ்: அதான் ஏன்? 
புரொபஸர்: Back என்றால் என்ன? 
கணேஷ்: பின்னாடி 
புரொபஸர்: ஆமாம். நம் உடம்புக்கு பின்னாடி. நமது முதுகு இதையெல்லாம் back என சொல்வோம். He lay on his back. அதாவது நேராக (குப்புற அல்லாமல்) படுத்துக் கிடந்தான். ஓர் இடத்துக்கும் இதைச் சொல்லலாம். There was a pan shop at the back of the hotel in a bylane. அதே போல பின்னாடி செல்வது எனும் பொருளிலும் இது வரும். அதாவது Backwards. She ran back a few miles to meet her friend என சொல்லலாம். "திரும்ப" எனும் பொருளிலும் வரும். He kept the phone back in the pocket after fishing it out. இங்கே எங்கேயும் "முன்பு, "முன்னால்" எனும் பொருள் வரவில்லை என்பதைக் கவனித்தாயா? Back என்பதை ஒரு வெளியில் பின்னால் செல்வதை குறிக்கவே அதிகமும் பயன்படுத்துகிறோம். ஆனால் நேரத்தில் பின்னால் செல்வதை சொல்ல வேறொரு சொல் உள்ளது. அதென்ன தெரியுமா? 
கணேஷ்: ம்ம்ம்? 
நடாஷா: ஈஸி... நான் சொல்லவா? 
புரொபஸர்: இல்ல, கணேஷே சொல்லட்டும். யோசிச்சு பொறுமையா சொல்லு கணேஷ். 
கணேஷ்: ம்ம்ம்... back என்றால் பின்னால். முன்பு, முன்னால் என்றால் ... ஆமா ... ago... சரியா? 
புரொபஸர்: கரெக்ட். 
கணேஷ்: சார், fish out the phone என்று சொன்னீங்களே, அப்படி என்றால் மீனை வெளியே எடுத்தார்கள் எனப் பொருளா? 
புரொபஸர்: Fish out என்றால் ஒரு பொருளை அல்லது ஆளை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்துப் போடுவது அல்லது ஒரு பையில் இருந்து ஒரு பொருளை எடுப்பது. Just take something out என்பதற்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இதில் ஒரு மீனை தூண்டிலில் மாட்டி வெளியே தூக்கிப் போடும் சித்திரம் தோன்றுகிறது. அதற்கு இணையாக ஒரு பொருளையோ உயிருள்ள பிராணியையோ மனிதரையோ வெளியே எடுப்பதைச் சொல்ல இதைப் பயன்படுத்தலாம். 
நடாஷா: சரி... புரொபஸர் let us discuss about this fishing out business later. திரும்ப அந்த இந்தியனிசத்துக்கு வாங்க. 
புரொபஸர்: ரைட். நீ இப்போ சொன்னியே that is also an instance of Indianism. 
நடாஷா: எது?
புரொபஸர்: Discuss about.
நடாஷா: அதிலென்ன தப்பு? நாம வழக்கமா சொல்றது தானே?
புரொபஸர்: Discuss என்றால் என்ன?
நடாஷா: விவாதிப்பது.
புரொபஸர்: விவாதிப்பது என்றால் என்ன?
நடாஷா: ஒன்றைப் பற்றி பல கோணங்களில் பரிசீலிப்பது.
புரொபஸர்: ஆமாம், எளிமையாக சொல்வதானால் ஒன்றைப் பற்றி பேசுவது. இந்த பற்றி தான் ஆங்கிலத்தில் about. அதாவது to 
discuss is to talk about something. 
நடாஷா: எனக்குப் புரியல சார்? 
புரொபஸர்: அந்த about என்பது discuss எனும் சொல்லுக்குள்ளே புதைந்திருக்கிறது. அதன் பொருளிலே அது வந்து விடுகிறது. ஆக to discuss about something என்றால் to talk about about something என இருமுறை ஹக்ஷர்ன்ற் வந்து பொருள் அபத்தமாகி விடுகிறது. 
சேஷாச்சலம்: நமது அலுவலக கடிதங்களில் வரும் மற்றொரு Indianism தெரியுமா? 
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com