வேலை...வேலை...வேலை...

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை, இந்திய இராணுவ பொதுப் பள்ளிகளில் வேலை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் வேலை 
வேலை...வேலை...வேலை...

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 477
பணி: Developer, System / Server Administrator JMGS,  Database Administrator, Cloud Administrator, Network Engineer,Tester, WAS Administrator MMGS, Infrastructure Engineer, UX Designer, IT Risk Manager, IT Security Expert MMGS, Project Manager, Application Architect, Technical Lead, Infrastructure Architect, Infrastructure Engineer JMGS, IT Security Expert, IT Risk Manager Infrastructure Architect, Deputy Manager, Security Analyst MMGS, Chief Manager, Vulnerability Mgmt. & Penetration Testing- SMGS மற்றும் இதர பணிகளும் உள்ளடங்கும். 
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல் முடித்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 
வயது வரம்பு: 30.06.2019 தேதியின்படி 30 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-Advertisement%20SCO-2019-20-11.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.09.2019

இந்திய இராணுவ பொதுப் பள்ளிகளில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 8000
பணி: PGT 
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 
பணி: TGT  
தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 
பணி: PRT
தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2019 

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் வேலை
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 வழங்கப்படும். 
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ஆம் தளம், சென்னை 108 என்ற முகவரியில், அலுவலக நேரங்களில் இலவசமாகப் பெற்றுக்கொண்டு, அதனை தெளிவாகப் பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் காத்திருப்போர் பட்டியிலில் உள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்தேர்வு அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.09.2019

ஆவின் நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 15
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technician (Boilerman) - 01
தகுதி: 8- ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சென்னை கொதிகலன்கள் இயக்கத்தின் இயக்குநரால் வழங்கப்பட்ட கொதிகலன் உதவியாளர் சான்றிதழ் Gr.II / Gr.III  பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Electrician) - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து "பி' உரிம தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ மற்றும் "சி' உரிம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Heavy Vehicle Driver  - 07
தகுதி: 8- ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 
3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 வழங்கப்படும். 
பணி: Private Secretary Grade III - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் மற்றும் சுருக்கெழுத்துப் பிரிவில் தமிழில் இளநிலையும், ஆங்கிலத்தில் உயர்நிலையும் முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை. அனைத்து பணியிடங்களுக்கும் ஒசி பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500 வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழி தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை கோவையில் 
மாற்றத்தக்க வகையில், The General Manager, The Coimbatore District Co - operative Milk Producers என்ற பெயரில் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager,
The Coimbatore District Cooperative Milk Producers’ Union Limited,
Pachapalayam, Kalampalayam (Post),
Coimbatore - 641 010.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdcbe3008191.pdf/767c311c-98d4-abff-e924-9453974d46ce என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.09.2019

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் வேலை 
பணி: Assistant Professors 
காலியிடங்கள்: 2,340
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 55 சதவீத மதிப்பெண்களுடன் NET, SLET, SET, SLST, CSIR, தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 
நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற லிங்கிகை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.09.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com