கரோனா பரிசோதனையில் ரோபோ!

பூமி சுற்றுவதையே கரோனா தொற்று நோய் நிறுத்திவிட்டதைப் போன்ற நெருக்கடியான சூழலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்று மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனினும், மன
கரோனா பரிசோதனையில் ரோபோ!

பூமி சுற்றுவதையே கரோனா தொற்று நோய் நிறுத்திவிட்டதைப் போன்ற நெருக்கடியான சூழலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்று மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனினும், மன தைரியத்துடன் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மனித உயிர்களைக் காப்பாற்றும் பணியில் களத்தில் செயலாற்றி வருகின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் சோதனை செய்யும்போது தெரிந்தோ, தெரியாமலோ மருத்துவர்களும் இந்த நோய்த் தொற்றுக்கு 
ஆளாகின்றனர். 

கரோனா நோயின் கடும் பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது நாடான ஸ்பெயினில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேர் மருத்துவ பணியாளர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டபோதுதான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், இந்தப் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு நாளும் சுமார் 20 ஆயிரம் பேரை கரோனா பரிசோதனை செய்யும் ஆற்றல் ஒரு ரோபோவுக்கு உண்டு. நான்கு ரோபோக்களை வாங்கி சுமார் 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ரோபோக்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன என்ற விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. ஆனால், இந்த ரோபோக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஸ்பெயின் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை மருத்துவமனைகளில் விநியோகிக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள்  ஏற்கெனவே ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இக்கட்டான கரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை உலக நாடுகள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com