இளம் தூதராக விருப்பமா?

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயில்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றிட இளம் தூதர் பணி வாய்ப்பை ஜெர்மனி நாடு வழங்குகிறது.
இளம் தூதராக விருப்பமா?

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயில்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றிட இளம் தூதர் பணி வாய்ப்பை ஜெர்மனி நாடு வழங்குகிறது.

ஜெர்மனியில் கல்வி கற்கவும், தொழில்நுட்பங்களைப் பயிலவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஆய்வுகளைச் செய்து முடிக்கவும் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு ஜெர்மனியின் DAAD என்ற கல்வி ஆராய்ச்சி தொடர்புடைய அமைப்பு உதவுகிறது.

ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் ஜெர்மனியில் கல்வி கற்று அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள நினைப்பவர்களுக்கும் ஜெர்மனி மிகப் பெரும் வாய்ப்பை வழங்குகிறது. அதில் மிகப் பெருமையாக பேசப்படும் விஷயமாக இருப்பது இளம் தூதர் (யங் அம்பாஸடர்) என்பதுதான்.

ஜெர்மனியில் கல்வி கற்கவோ ஆராய்ச்சி செய்யவோ ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் கேட்கும் பலவிதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து அவர்களை ஜெர்மனியில் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இந்த இளம் தூதர்களுக்கு தான் இருக்கிறது.

மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலமும் தங்கள் சொந்த தரவு மற்றும் தகவல் தொகுப்புகளை ஒழுங்கமைத்து மாணவர்களுக்கு தெரிவிப்பதன் மூலமும் ஜெர்மனியில் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவது இளம் தூதர்களின் பணியாகும்.

அத்துடன் தொடர்ந்து நடத்தும் கண்காட்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலமும் ஜெர்மனின் கல்வி வாய்ப்புகளையும், ஆய்வு தொடர்பான வாய்ப்புகளையும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜெர்மனியில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குவதும் அவர்கள் பணியாகும்.

இளம் தூதராக தகுதிகள்: இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் அல்லது இலங்கை நாடுகளைச் சேர்ந்த 32 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். மேலும் அவர்கள் ஜெர்மனியில் ஆராய்ச்சிப் படிப்பை படித்தோ அல்லது தற்போது படித்துக் கொண்டோ அல்லது ஏதேனும் ஆய்வுகளைச் செய்தோ இருக்க வேண்டும். முக்கியமாக உங்கள் வட்டாரத்திலுள்ள மாணவர்களை ஜெர்மனியில் கல்வி கற்பதற்கு ஊக்கம் அளிப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் ஜெர்மனியில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை மிகவும் தெளிவாகவும், ஆர்வமூட்டும் வகையில் வெளிப்படுத்துவதாக இருப்பது மிக அவசியம். இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறுகிறது அதில் மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள்: ஜெர்மனியில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து குறைந்தது இரண்டு நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கேற்கவும் தயாராக இருக்க வேண்டும். மேலும் மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும். இது குறித்து DAAD வழங்கும் விளம்பரம் மற்றும் துண்டு பிரசுரங்களைத் தொடர்புடையவர்களுக்கு வழங்கவும் வேண்டும்.

இளம் தூதர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தவறாமல் அறிக்கை அளிக்க வேண்டும்.

பதவிக் காலம்: தேர்ந்தெடுக்கப்படும் இளம் தூதர்கள் புதுதில்லியில் உள்ள DAAD அலுவலகத்தால் கெளரவப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். ஒரு கல்வி ஆண்டு வரை நியமிக்கப்படுபவர்கள் மேலும் தங்களின் பணி வாய்ப்பை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.

தேர்வு செய்யப்படும் விதம்: தூதர்களின் சுயவிவரங்கள் மற்றும் புகைப்படங்கள் www.daad.in இல் வெளியிடப்படும். அவர்கள் மூலம் ஜெர்மனியில் கற்க விரும்புபவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

விண்ணப்பம் மற்றும் காலக்கெடு: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் சுய விவரத்துடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் https://forms.gle/fL1evNtgmu4yyuMS9. என்ற இணைய முகவரியின் மூலமாக ஆன்லைனில் ஆகஸ்ட் 9- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Any Queries - project@daaddelhi.org
Regional Office New Delhi
c/o DLTA Complex, R.K. Khanna Stadium,
1 Africa Avenue110029 New Delhi
Telephone: +91 (11) 6646}5500 Fax: +91 (11) 6646}5555
E}Mail: infodaaddelhi.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com