இலவச ஆன்லைன் படிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான 12 வார இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என்ற இலவச ஆன்லைன் படிப்பை ஐஐடி - காரக்பூர்  நடத்துகிறது. 
இலவச ஆன்லைன் படிப்பு!


பொறியியல் மாணவர்களுக்கான 12 வார இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என்ற இலவச ஆன்லைன் படிப்பை ஐஐடி - காரக்பூர் நடத்துகிறது.
வணிகரீதியாகவும், கல்விக்காகவும் பயன்படும் வகையில் புதிய வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ். சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகளில் முன்
மாதிரியான வணிகரீதியான தீர்வுகளுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்தப் படிப்புஉள்ளது.
இந்த படிப்பில் சென்சார், ஆக்சுவேட்டர்ஸ், இயந்திரங்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், ஃபாக் கம்ப்யூட்டிங், ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் கிரிட் ஆகியவை குறித்தும் இந்தப் படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். விவசாயம், சுகாதாரம் மற்றும் செயல்பாடு கண்காணிப்பு ஆகியவை குறித்த ஆய்வுகளும் இந்த படிப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
கணினி பொறியியல், இளங்கலை, முதுகலை படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், இன்டஸ்ட்ரியல் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் படிக்கும் மாணவர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்.
இந்த படிப்பானது நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னாலஜி என்ஹாஸ்டு லேர்னிங் (என்பிடிஇஎல்) மூலம் நடத்தப்படுகிறது.
இந்த படிப்புக்கான கட்டணம் ஏதும் இல்லை. இலவசமாக நடத்தப்படுகிறது. தேர்வு கட்டணம் மற்றும் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 மட்டும் செலுத்த வேண்டும்.
இந்த படிப்பில் சேருவதற்கானகடைசித் தேதி: 25.01.2021. இதற்கான தேர்வு 14.04.2021 அன்று நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு : https://onlinecourses.nptel.ac.in/noc21_cs17/preview என்ற வலைதளத்தில் சென்று பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com