இணைய வெளியினிலே...

உயிர் பொம்மைகளைக் காக்க,மண் பொம்மைகள் விற்பனை!
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

ஒவ்வொருவரும் ஒரு தீப்பந்தத்துடன்
ஓடிக் கொண்டிருக்கிறோம்... 
ஒப்படைக்கத் தயாரில்லை...
எப்படிச் சாத்தியம் தொடரோட்டம்?

நா.வே.அருள்


எதுவும் நிலையில்லை.
ஒவ்வொரு துன்பமும்
ஒரு பாடத்தைக்
கற்றுத் தரவே வருகிறது.

சரஸ்வதி ராமநாதன்


தண்ணீரைப் போல் இருப்போம்.
அதனால்ஒதுங்கிச் செல்லவும் முடியும்...
உடைத்தெறியவும் முடியும்.

ஹேமவந்தனா


உயிர் பொம்மைகளைக் காக்க,
மண் பொம்மைகள் விற்பனை!

ராமசாமி மணி

முழுக்க அறைந்து மூடவும்தெரியவில்லை
முற்றிலுமாகத் திறந்து வைக்கவும்இயலவில்லை
பாதித்திறந்தும்மீதி மூடியும்நிற்கும்
கதவின் பின் இருக்கிறதுகொள்ள முடிந்ததும்
தள்ள முடியாததுமானதொருகாலம்.

சக்திஜோதி

சுட்டுரையிலிருந்து...

தெளிவாக யோசித்தால்
தெளிவற்ற குட்டையிலும்
தெளிந்த நீர் கிடைக்கும்.

செல்வ பாரதி


இது என்னுடையது என்று நினைக்கும் வரை
எதையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை...
எதுவும் என்னுடையதல்ல எனும் பக்குவம் வரும்போது...
விட்டுக் கொடுக்க நம்மிடம் எதுவும் இருப்பதில்லை.

மாரியப்பன்


கோபத்தைக் காட்டுவதற்கும்,
வெறுப்பை உமிழ்வதற்கும்
ஆகச் சிறந்த சந்தர்ப்பம் அமைந்தும்...
அமைதியாக இருப்பதேபக்குவம்.

கார்த்திக் தமிழன்


கவனிக்கப்படவேண்டுமென்றால்குப்பையில் கூட புரளலாம்...
கெளரவிக்கப்பட வேண்டும்எனும் போதுதான்இடம் பார்த்து அமர வேண்டும்.

மெந்நிலா


வலைதளத்திலிருந்து...


8 -ஆம் நூற்றாண்டில்தான் இந்திய நாணயம் காகிதத்தில்வெளியிடப்பட்டது. முதலாம் உலகப்போரின் (28 ஜூலை 1914-11 நவம்பர் 1918) போது வெள்ளிக்குத் தட்டுப்பாடுஏற்பட்டது. வெள்ளி நாணயத்திற்குப் பதிலாக ஜார்ஜ் மன்னர் படம் போட்ட ஒரு ரூபாய் காகித நோட்டு நவம்பர் 30, 1917 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

1926 -ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி அன்று இந்த ரூ. 1/- நோட்டு திரும்பப் பெறப்பட்டது. 1940 ஆகஸ்டு மாதம் ரூ. 1/- நோட்டு திரும்ப அறிமுகப்படுத்தப்பட்டது. 1944 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு.

ஒரு ரூபாய் நோட்டிற்கு வயது நூற்றி இரண்டு ஆண்டுகள்.
1917 - ஆம் ஆண்டு, ரூ.1 என்பது அமெரிக்க டாலரை விட வலிமையாக இருந்துள்ளது. 1917 -ஆம் ஆண்டு ரூபாய் பரிமாற்ற மதிப்பு 1 = $ 13 அமெரிக்க டாலர்கள். 19 மே 2020 -ஆம் தேதி அன்று பரிமாற்ற மதிப்பு 1 = $ 0.013 அமெரிக்க டாலர்; 1 = 0.012 யுரோ.

இன்றைய ரூபாய் 100 பைசாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய நாணயங்கள் 5, 10, 20, 25 மற்றும் 50 பைசா ஆகிய மதிப்புகளிலும் இந்திய ரூபாய் நாணயங்கள் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் மதிப்புகளிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்திய நாணயங்கள் டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. 10 நாணயத்தை
அச்சிடுவதற்கான செலவு 6.10 ஆகிறதாம்

இந்திய ரூபாய் நோட்டுகள் 1, 2, 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 2000 ரூபாய் ஆகிய மதிப்புகளில் அச்சடிக்கப்படுகின்றன.

https://agharam.wordpress.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com