வேலை... வேலை... வேலை... 

எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வேலை... வேலை... வேலை... 


தேசிய நெடுஞ்சாலை

ஆணையத்தில் வேலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மேனேஜர் (டெக்னிகல்) - 54
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,08,700
டெபுடி ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்) - 97
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200
ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்) - 10
மேனேஜர் (பைனான்ஸ்) - 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 - ரூ.67,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து அனுபவம் உள்ளவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் எம்பிஏ, ஐசிஏஐ, ஐசிடபுள்யுஏஐ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து DGM(HR & Admn,)-I A, NATIONAL Highways of India, Plot No: G - 5 & 6, Sector -10, Dwarka, New Delhi - 110075 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விரிவான விவரங்கள் அறிய: https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 15.01.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01.01.2021

புதுச்சேரி மின்சாரத்துறையில் வேலை

பணி: ஜூனியர் என்ஜினியர்
காலியிடங்கள்: 42
தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.33,000
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://recruitment.py.gov.in/recruitment/JE2020/notification என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.01.2021


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை


பணி: உதவிப்பேராசிரியர்
காலியிடங்கள்: 22
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. அக்வாகல்ச்சர் - 07
2.ஃபிஷ் பிராசசிங் டெக்னாலஜி - 02
3. ஃபிஷ்ஷிங் டெக்னாலஜி அண்ட் ஃபிஷெரிஸ் என்ஜினியரிங் - 03
4. அக்வாடிக் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட் - 03
5. ஃபிஷெரிஸ் பயாலஜி அண்ட் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்- 03
6. ஃபிஷ் பேதாலஜி அண்ட் ஹெல்த்
மேனேஜ்மென்ட்- 02
7. ஃபிஷெரிஸ் எக்ஸ்டென்ஷன்- 01
8. ஃபிஷெரிஸ் எகானாமிக்ஸ் - 01
சம்பளம்: மாதம் ரூ.57, 700 - ரூ.1, 82,400
பணியிடம்: நாகப்பட்டினம்
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பி.எஃப்.எஸ்ஸி முடித்து முதுகலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர்
ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் நாட்டுமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்
பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnjfu.ac.in. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002
மேலும் விவரங்கள் அறிய: https://www.tnjfu.ac.in/downloads/carrers/ANNEXURE,%20INSTRUCTIONS%20&%20TERMS%20AND%20CONDITIONS.pdf Utßm https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf ஆகிய லிங்க்களில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 05.01.2021


ஆவின் நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 30
பணி:
மேனேஜர் (பி&1) -03
மேனேஜர் (பைனான்ஸ்)-01
சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,19,500
பணி: மேனேஜர் (மார்க்கெட்டிங் -01
சம்பளம்: ரூ.55,500 - ரூ.1,75,700
பணி: டெபுடி மேனேஜர் (டெய்ரிங்)-02
டெபுடி மேனேஜர்(டெய்ரிங் கெமிஸ்ட்) -01
சம்பளம்: ரூ.35,900 - ரூ.1,12,500
பணி: டெபுடி மேனைஜர் (சிஸ்டம்ஸ்) -01
சம்பளம்: ரூ.35,900 - ரூ.1,13,500
பணி: எக்ஸ்டென்சன் ஆபிஸர் கிரேடு -ஐஐ -02
சம்பளம்: ரூ.20,000 - ரூ.63,500
பணி: எக்ஸிகியூட்டிவ் (ஆபிஸ்) -09
எக்ஸிகியூட்டிவ் (லேப்) - 01
சம்பளம்: ரூ.20,600 - ரூ.65,500
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
(ஆபிஸ் ) -03
பிரைவேட் செக்ரட்டரி கிரேடு - ஐஐஐ -01
சம்பளம்: ரூ.19,500- ரூ.62,000
பணி: சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட் -05
சம்பளம்: ரூ.15,700- ரூ.50,000
தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் உள்ளன. அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு: ஓசி பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிறவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250க்கான
டிமாண்ட் டிராஃப்ட்டைதேசியமயமாக்கப் பட்ட வங்கியில் ஜெனரல் மேனேஜர், தி திருப்பூர் டிஸ்டிரிக்ட் கோ - ஆப்ரேட்டிவ் மில்க் புரடியூசர்ஸ் யூனியன் லிமிடெட் என்ற பெயரில் திருப்பூரில் செலுத்தத் தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: தி ஜெனரல் மேனேஜர், திருப்பூர் டிஸ்டிரிக்ட் கோஆப்ரேட்டிவ் மில்க் புரடியூசர்ஸ் யூனியன் லிமிடெட், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர் -641605.
மேலும் விவரங்கள் அறிய : https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/TPR+Revised+Application+form+-+Manager+-+SFA.pdf/56954bba-1f2f-93d3-2b5a-d8dcbef3af3b&noticeURL=/documents/20142/0/Mangers+paper+notification-+18.12.2020.pdf/b66fb13e-e844-8751-f0f3-cdab0287a4aa&noti என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 05.01.2021


தமிழக அரசில் வேலை


பணி: பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
வயது வரம்பு: 01.07.2020 ஆம் தேதியின்படி 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://kanchi.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவர், ஊரக வளர்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், காஞ்சிபுரம்.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவதற்கு: https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120871.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.01.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com