இணைய வெளியினிலே... (11/02/2020)

பிரச்னைன்னு யாராவது போன் பண்ணா நாம அவசரத்தில் இருந்தாலும் இரண்டு நிமிசம் ஒதுக்கி, நான் இருக்கேன் எதுவாக இருந்தாலும்
இணைய வெளியினிலே... (11/02/2020)

முக நூலிலிருந்து....
* இலக்கில்லாத பயணத்தில்
எதிர்ப்படும் நதியில் குளித்து...
நிழல் வனக்கனிகள் ருசித்து
பட்டாம்பூச்சியாய் 
பறந்த நாள்...
இறந்து போனது.
துரை பாரதி

* தேடித் தேடி சேர்த்தவை
தேவையற்றுப் போவதும்...
தேவையற்றது என நின்றவை
தேவையாகி கலப்பதுமே வாழ்க்கை!
கடற்கரய் மத்தவிலாச 
அங்கதம்

* எப்பொழுதுமே பெண்கள்
தெளிவாக இருக்கிறார்கள்.
or
எப்பொழுதுமே பெண்கள்
தெளிவாக இருக்கிறார்கள் என்று
ஆண்கள் நினைக்கிறார்கள்.
வேல் கண்ணன்

* பிளாஸ்டிக் தோடுகளின்
பென்சில் ரப்பர் திருகாணிகளை
திருவிழாவின் மாலை வேளையில்
கழற்றி வைக்கிறாள் சிறுமியொருத்தி...
ரப்பர் திருகாணியின் துளைகளை
நிமிண்டியபடி இருந்தவளுக்கு...
புதிய கவரிங் தோடொன்றை அணிந்து
தலை சுற்றி சொடக்கு போடுகிறாள்,
டவுன் அத்தை
ரமேஷ் கண்ணன்

சுட்டுரையிலிருந்து...
* அரிதாகவும் குறைவாகவுமே
கிடைத்தாலும்...
நெடிய இந்த வாழ்வின் தேடல்,
அன்பில் கரையும் தருணங்கள் மட்டுமே. 
மற்றவை எல்லாம்
வெறும் கானல் நீர்.
கரிசல்

* வென்றவனுக்கும் 
தோற்றவனுக்கும் 
வரலாறு உண்டு...
வேடிக்கை பார்த்தவனுக்கும்,
விமர்சனம் செய்தவனுக்கும்,
ஒரு வரி கூட கிடையாது. 
ஷைலு

* காரணம் இன்றி எதுவும் இல்லை. 
ஆனால்...
காரணம் தெரிந்து 
கொள்ளாமல்
நீ இருந்துவிடாதே.
மித்ரன்

* எந்த கோபமும் இல்லாமல்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
எந்த பொறாமையும் இல்லாமல் 
எந்த ஒரு வாக்குவாதங்களும் இல்லாமல் 
நமக்கு பிடித்தமானவரிடம் ஏற்படும் 
ஆரோக்கியமான நீண்ட உரையாடல் ஆனது
நமக்கு ஒரு தெளிவையும் 
மன நிம்மதியையும் தரும் என்பதே உண்மை. 
பக்கா வில்லன் 

வலைதளத்திலிருந்து...
கடைப்பிடிக்கணும்
1. பிரச்னைன்னு யாராவது போன் பண்ணா நாம அவசரத்தில் இருந்தாலும் இரண்டு நிமிசம் ஒதுக்கி, நான் இருக்கேன் எதுவாக இருந்தாலும் சமாளிச்சிக்கலாம்னு நம்பிக்கை கொடுக்கனும்.
2. கடன் கேட்டா இருந்தா கொடுக்கணும், இல்லைன்னா இப்ப இல்ல, நானும் ட்ரை பண்றேன் நீயும் ட்ரை பண்ணுன்னு சொல்லணும். அட்வைஸ்ங்குற பேர்ல வெந்த புண்ணுல வெந்நீர் ஊத்தக் கூடாது.
3. நமக்கு ஒரு விசயம் தெரியும்னு தெரியாதவரை ஏளனமா நடத்தக் கூடாது, ஏன்னா நமக்கே தெரியாத விசயங்கள் நிறைய இருக்கு.
4. தெரியாதுன்னு சொல்லலாம். முடியாதுன்னு சொல்லக்கூடாது. உலகில் யாரோ ஒருவரால் முடியுமானால் நிச்சயமாக உன்னாலும் முடியும்னு நம்பணும்.
5. நடந்து முடிந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவதோ/கோபப்படுவதோ கூடாது. அதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது.
6. ஒருத்தரைப் பத்தி மற்றவர்கள் சொன்னதை வச்சி ஒரு பிம்பம் கட்டமைக்கக் கூடாது. நம்ம கிட்ட எப்படிப் பழகுறாங்களோ அதை வைத்துத் தான் நட்பைக் கொண்டாடணும்.
7. எவ்ளோ முயற்சி பண்ணியும் ஒருத்தருக்கு நம்மைப் புரிய வைக்க முடியலைன்னா பிறகு எதற்கும் விளக்கம் கொடுத்துப் பயனில்லை. அதனால் ஆமா நான் அப்படித்தான்னு சொல்லிட்டு போயிறணும்.
8. எந்தச் சூழல்நிலையிலும் ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததை சொல்லிக் காட்டக் கூடாது.
9. நம் சுதந்திரம் அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே, மூக்கை தொடும் வேலை வச்சுக்கக் கூடாது.
10. ஒழுங்கின்மையே ஒழுங்கு. யாரும் இப்படித்தான் இருக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. அது வெட்டியா நம்மை டென்சன் பண்ணும்.
இதெல்லாம் நான் கடைபிடிக்கும்/பிடிக்க நினைக்கும் கோட்பாடுகள். முடிஞ்ச அளவு என் மனசாட்சிப்படி ஃபாலோ பண்றேன். எங்கேயேனும் சறுக்கியிருக்கலாம். ஆனாலும் இவை தான் என் வாழ்க்கைக் கோட்பாடுகள்.
http://valpaiyan.blogspot.com/
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com