குழந்தைகள் பகிரலாம்! பெற்றோர் தடுக்கலாம்!

குழந்தைகளையும், ஸ்மார்ட் போனையும் பிரிப்பது என்பது பெற்றோரால் இயலாத காரியமாகிவிட்டது. போனும் கையுமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளின் தொல்லை சற்று குறைவாக இருப்பதால்
குழந்தைகள் பகிரலாம்! பெற்றோர் தடுக்கலாம்!

குழந்தைகளையும், ஸ்மார்ட் போனையும் பிரிப்பது என்பது பெற்றோரால் இயலாத காரியமாகிவிட்டது. போனும் கையுமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளின் தொல்லை சற்று குறைவாக இருப்பதால் சில பெற்றோரும் இதைக் கண்டு கொள்வதில்லை. வீடியோ கேம், யூ டியூப் வீடியோ என போனில் சார்ஜ் காலியாகும் வரை விளையாடும் குழந்தைகளின் வாழ்நாள் பேட்டரியும் குறைகிறது என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 இது நம்நாட்டு குழந்தைகளின் பிரச்னை என்றால், மேற்கத்திய நாடுகளில் உள்ள குழந்தைகள் ஒரு கட்டத்துக்கு மேலே சென்று மெசஞ்சர் ஆப்களைப் பயன்படுத்துகின்றனர். 13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்காக 2017-ஆம் ஆண்டு "மெசஞ்ஜர் கிட்ஸ்' என்ற ஆப்பை ஃபேஸ் புக் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் குழந்தைகள் தங்களின் குறும்பு வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பகிரலாம். இது குழந்தைகளை சிறு வயதில் இருந்தே ஃபேஸ்புக்குக்கு அடிமையாக்கும் செயல் என்றும் இதில் பகிரப்படும் படங்கள், தகவல்கள் ஆகியவை பாதுகாப்பாக இருக்காது என்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தடுக்க, குழந்தைகள் "மெசஞ்ஜர் கிட்ஸ்' ஆப்பில் பகிரும் தகவல்களை அவர்களது பெற்றோர் ஃபேஸ் புக்கில் இருந்தவாறு கவனிக்கும் புதிய சேவையை ஃபேஸ் புக் நிறுவனம் கொண்டு வர உள்ளது.
 இதன்படி, குழந்தைகள் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள், சாட் பதிவுகள் ஆகியவற்றைத் தேவையற்றதாக கருதினால் பெற்றோர்களே கண்காணித்து அவற்றை நீக்கி விடலாம் என்று ஃபேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ் புக்கில் சர்சைச்குரிய வகையில் தகவல்களைப் பகிர்வதால் பல பிரச்னைகளில் இளைஞர்களே சிக்கிக் கொள்ளும் தற்போதைய காலச் சூழலில், இந்திய குழந்தைகளுக்கு இதுபோன்ற "மெசஞ்ஜர் கிட்ஸ்' ஆப் சேவை இல்லை என்பதை நினைத்து சற்று ஆறுதல் அடையலாம்.
 அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com