வாங்க இங்கிலீஷ் பேசலாம் 229 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி ஆஸ்பத்திரியை விட்டு வரும் போது ஊரடங்கு உத்தரவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாய் தெரிய வருகிறது. அவர்கள் புரொபஸரின் நண்பர் வீரபரகேசரியின் வீட்டுக்கு வருகிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 229 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி ஆஸ்பத்திரியை விட்டு வரும் போது ஊரடங்கு உத்தரவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாய் தெரிய வருகிறது. அவர்கள் புரொபஸரின் நண்பர் வீரபரகேசரியின் வீட்டுக்கு வருகிறார்கள். ஒரு காவலன் வீட்டுக்கு வெளியே வந்து மரியாதை தொனிக்க சத்தமாக அறிவிக்கிறான். 
காவலன்: மன்னாதி மன்னர், சோழர் வம்சத்திலகம், மக்களின் நாயகன் அரசர் பரகேசரி தன் பொற்பாதங்களைப் பதித்து நம்மிடையே பிரசன்னம் ஆகிறார். பராக் பராக் பராக் ...
கணேஷ் புரொபஸரிடம்: சார்...க்கு பயமா இருக்குது.
புரொபஸர்: ...ச்சூ...
வீரபரகேசரி அங்கு தோன்றுகிறார்.
வீரபரகேசரி புரொபஸர் மற்றும் கணேஷை நோக்கி: நாட்டில் மும்மாரி பொழிகிறதா? மக்கள் மகிழ்ச்சியாக என் நாமத்தை மனத்தில் உச்சரித்தபடி வயிறார உண்டு என் புகழைப் பாடி வாழ்கிறார்களா? ராஜ விசுவாசமும் என் அரியணை மீதான நம்பிக்கையும் மக்களிடையே வலுக்கிறதா?
புரொபஸர்: ஆம். உம்மைப் போல சதா இந்நாட்டு பிரஜைகளின் நலனைப் பற்றி மட்டும் கவலைப்படுகிற ஒரு மன்னரைப் பெற இந்த தேசம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் வீர 
பரகேசரியே?
வீரபரகேசரி: மக்களின் நாவின் நுனியில் உள்ள சொற்களை நீர் வெளிப்படுத்தி விட்டீர்கள். ஒரு சீனப் பழமொழி நினைவுக்கு வருகிறது - When a king makes a mistake, all the people suffer. 
கணேஷ்: உண்மை மன்னவா. மன்னரின் சின்னச் சின்ன தவறுகள் கூட நாட்டில் பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணும். 
வீரகேசரி: யார் இந்தப் பொடியன்?
புரொபஸர்:  My protege. 
கணேஷ்: சார் நான் உங்க மாணவன். நீங்க வேறென்னமோ மாற்றி சொல்றீங்களே. ப்ரொட்டே... என்னவோ?
புரொபஸர்: நீ இந்த வார்த்தையை உன்னோட பரீட்சைத் தாளில் ஒருமுறை குறிப்பிட்டிருந்தியே: p - r - o - t - e - g - e   
கணேஷ்: அதுவா சார்? அது புரொட்டீஜி
வீரகேசரி தன் வாளை உருவி: என்னது? பிடியுங்கள் அந்தப் பையனை.
கணேஷை நோக்கி நான்கு காவலர்கள் ஓடி வந்து சூழ்கிறார்கள். அவன் நடுங்குகிறான்.
புரொபஸர்: டேய் அதை புரொட்டீஜி என்று உச்சரிக்கக் கூடாது.
கணேஷ்: பிறகு?
புரொபஸர்: புரொட்டேஷெ. கடைசி ஒலி க்ஷ் மற்றும் ஷ் ஆகிய ஒலிகளுக்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
கணேஷ்: ஏன் சார் அதை எழுதற மாதிரியே உச்சரிக்க விடாம இவ்வளவு குழப்பணும்?
புரொபஸர்: அது ஒரு பிரஞ்சு சொல். அதனால் பிரஞ்சு உச்சரிப்பை பின்பற்றணும். புரியுதா?
கணேஷ்: சரி. ஆனால் என்னை ஏன் அப்படி நீங்க அழைக்கணும்? அதோட அர்த்தம் என்ன?
புரொபஸர்: இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்டவன் எனும் பொருளில் இது தோன்றியது. Protect எனும் சொல்லின் வேரும் இங்கிருந்து தான் வருகிறது. Protege என்றால் குருவின் தலையான சீடன், சிஷ்யப்பிள்ளை, ஒரு பெரிய மனிதரின் ஆதரவின் கீழ் உள்ள ஓர் இளையவன். நீ என்னுடைய மாணவன் என்றால் கல்லூரிக்கு வெளியே உனக்கும் எனக்கும் தொடர்பில்லை. ஆனால் நாம் அப்படியா இருக்கிறோம்? We are like Krishna and Arjuna. Arjuna was the protege of Krishna in Mahabharata.
வீரபரகேசரி (கோபம் தீராமல் வீரநடை போட்டபடி): என் நாட்டில் ஆங்கிலச் சொற்களை இவ்வளவு அவலமாக உச்சரிப்பவர்களை சிரச்சேதனம் பண்ணாமல் விட மாட்டேன். இவன் தலையை நாளை ஒரு ஈட்டியில் சொருகி நம் கோட்டை வாயிலில் வைத்து விடுங்கள்.
புரொபஸர்: மன்னியுங்கள் மன்னர் மன்னா. ஏதோ தவறு நேர்ந்து விட்டது. டேய் கணேஷ், மன்னிப்புக் கேளுடா.
கணேஷ்: இந்த எளிய பிரஜையை மன்னித்தருளுங்கள். I am a nobody. 
வீரபரகேசரி: Three are powerful: the Pope, the King and the man who has nothing. கடைசிப் பிரிவினர் ரொம்ப ஆபத்தானவர்கள்.
புரொபஸர்: யார் அவர்கள்?
வீரபரகேசரி: நம் நாட்டின் வாக்காளர்கள்.
புரொபஸர்: நீங்கள் மன்னாதி மன்னன் எனும் போது ஏன் இன்னும் தேர்தல் நடத்துகிறார்கள்? 
வீரபரகேசரி: என்ன செய்வது? அரசியல்அமைப்புச் சட்டம் என ஒன்றை என் முன்னோர் உருவாக்கி விட்டுப் போயிருக்கிறார்களே. இருங்கள் I will pass a new act and nullify that noseblock of a  constitution. அதாவது என் மூக்குச்சளியைப் போல இந்த அரசியலமைப்பை நான் வெளியேற்றுவேன். நானே ஒரே மன்னனாகி விடுவேன். தேர்தல் கிடையாது. 
கணேஷ் (புரொபஸரிடம்): அதென்ன சார் nullify?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com