வேலை...வேலை...வேலை...(11/02/2020)

தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை, இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வேலை 
வேலை...வேலை...வேலை...(11/02/2020)

தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை 
மொத்த காலிடங்கள்: 320 
பணி: Forest Guard - 227
பணி: Forest Guard with Driving Licence - 93
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.forests.tn.gov.in/pages/view/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.02.2020

இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 56
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: ITI Apprentice - 26
பணி: P&O Professional - 04
பணி: Audiologist - 25
பணி: Team Leader - 01
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI, பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: பரிசீலிக்கத் தகுதியானவர்களின் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: alimco.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (Personnel & Administration), Artificial Limbs Manufacturing Corporation of India, Naramau, G. T. Road, Kanpur-209217
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://alimco.in/WriteReadData/Recruitment_Document/AD-3M-011/1_Apprenticeship.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.02.2020

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: சென்னை 
பணி: Urban Planner/ Town Planning Specialist - 02
Housing Finance & Policy Specialist - 01
MIS Specialist -10
Social Development Specialist - 05
IEC Specialist - 02
பணியிடம்: மதுரை
பணி: MIS Specialist -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist - 02
பணியிடம்: கோயம்புத்தூர்
பணி: MIS Specialist - 03 
பணி: Social Development Specialist - 01
பணி: IEC Specialist - 01
சம்பளம்: மாதம் ரூ. 25,000
தகுதி: இளநிலைப் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சென்னை: Superintending Engineer, Chennai Circle II, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chennai-5
கோயம்புத்தூர்: Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Coimbatore Circle, 397A, North Housing Unit, Selvapuram, Coimbatore-26
மதுரை: Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Madurai Circle, 169, K.K Nagar Main Road, Madurai-625020
மேலும் விவரங்கள் அறிய: http://www.tnscb.org/recruitment லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: கோயம்புத்தூர்- 17.02.2020,
சென்னை மற்றும் மதுரை - 20.02.2020

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 50 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: உதவிப்பேராசிரியர் - 47
பணி: துணைப் பேராசிரியர் - 21
பணி: பேராசிரியர் - 10
பணி: முதல்வர் - 1
பணி: நூலகர் - 1 
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: ஃபைன் ஆர்ட்ஸ், பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி, வரலாறு, அரசியல் மற்றும் பொது நிர்வாகம், இதழியல், பயோ டெக்னாலாஜி, தாவரவியல், மைக்ரோ பயோலாஜி என 22 துறைகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
தகுதி: உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், நெட், ஸ்லெட் தேர்ச்சி அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நூலகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நூலக அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் நூலகராகப் பணி அனுபவம் வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பாபுரம், காரைக்குடி 630 003.
மேற்கண்ட பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://alagappauniversity.ac.in/docs/recruitment/Notification.pdf  என்னும் அதிகாரப்பூர்வ வலைதள லிங்கைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.02.2020
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com