வாங்க இங்கிலீஷ் பேசலாம் 230 - ஆர்.அபிலாஷ்

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 230 - ஆர்.அபிலாஷ்

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வீரபரகேசரி வரலாற்றுப் புதினங்களைத் தொடர்ந்து எழுதிமனம் பேதலித்துப் போனவர். தன்னை சோழப் பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அவருடன் பேசும் போது தன் நாட்டில் இனிமேல் தேர்தல்களே நடக்காது, அரசியலமைப்பு சட்டம் விரைவில் nullify ஆகும் என பறைசாற்றுகிறார். அந்த சொல்லின் பொருள் என்ன என கணேஷ் புரொபஸரிடம் வினைவுகிறான்.
புரொபஸர்: Nullification is an act by which you can declare another rule null and void. 
கணேஷ்: சார் அப்படி ஒரு சட்டம் போட்டு என் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து பண்ண முடியாதா? 
புரொபஸர்: மன்னர் மன்னர் மனம் கனிய வேண்டும் அதற்கு... 
கணேஷ் இரு கரமும் கூப்பி: மன்னா என்னை மன்னித்தருள மாட்டீரா? 
வீரபரகேசரி: நான் மன்னரான பிறகு அதை மட்டும் தானே பண்ணுகிறேன்? இந்த முறை ஒரு தலையையாவது கொய்யாமல் விடப்போவதில்லை. இந்த சிறுவனிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கப் போகிறேன். அவன் சரியாகப் பதில் சொன்னால் அவன் மீதான தண்டனை குறைக்கப்படுவதை பரிசீலிப்பேன். 
கணேஷ்: நன்றி மன்னா. கேளுங்கள். ஈஸியா கேளுங்க ப்ளீஸ். சாய்ஸ் உண்டுமா? பதில் தெரியாம இருந்தா வெளியே கேட்டுக்கலாமா? lifeline உண்டுமா? 
வீரபரகேசரி: இந்த காலத்துப் பையன்கள் எவ்வளவு வசதிகளைக் கோருகிறார்கள்? சரி போகட்டும். எல்லாம் உண்டு. ஆனால் தப்பான பதில் சொன்னால் உன் lifelineகளின் life உம் போய் விடும். சரியா? 
கணேஷ்: அது பரவாயில்ல. என் தலையோடு அதையும் இலவச இணைப்பா வச்சுக்குங்க மன்னா. 
புரொபஸர்: நான் இந்த விளையாட்டில் கலந்துக்கல. 
கணேஷ்: ஜூலி உன்னை நம்பித் தான் களம் இறங்குறேன். 
ஜூலி: ஜமாய்ச்சுருவோம். எனக்கு சூப்பும் இடியாப்பமும் காலையில வாங்கிக் கொடு. 
கணேஷ்: தாராளமா. நைட்டே வாங்கித் தர்றேன். 
ஜூலி: செம... நான் தயார். 
வீரபரகேசரி: நாயும் பேயும் நரியும் பரியும் நாட்டில் பேசுவது நல்ல சகுனமா அமைச்சரே? 
அமைச்சர்: ....
வீரபரகேசரி: அமைச்சரே?
அமைச்சர்: மன்னியுங்கள் மன்னர் மன்னா... சற்றே கண்ணசந்து விட்டேன். 
வீரபரகேசரி: உன் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவ ஏற்பாடு பண்ணவா? 
அமைச்சர்: மன்னவா, நேற்று நீங்க தூவின மிளகாய்ப் பொடியினால் இரவெல்லாம் தூங்கவில்லை. அதனால் தான் பகலில் தூக்கம் சொக்குகிறது. 
வீரபரகேசரி: பகலிலும் தூங்க முடியாதபடி தூவினால் போச்சு. அது போகட்டும். சகுனம் பார்த்தீரா? 
அமைச்சர்: நல்ல சகுனம் மன்னவா. பேயும் வந்து பேசி விட்டால் சிறப்பாக இருக்கும். 
வீரபரகேசரி: பேய்ன்னு உன்னைத் தான் சொன்னேன்.
(கணேஷிடம்) If my ministers do not pull their weight I will have to pick up the slack. Is it good or bad? And why? இது தான் முதல் கேள்வி.
கணேஷ்: ஆரம்பமே திகிலா இருக்குதே. மன்னா, மொத்தமா எவ்வளவு கேள்விகள்? 
வீரபரகேசரி: பத்து. பத்தில் ஒன்பது கேள்விகள் சரியாகப் பதிலளித்தால் மட்டுமே உன் தலை தப்பும். உனக்கான ப்ண்ச்ங்ப்ண்ய்ங்ள் மொத்தமாக ஐந்து மட்டுமே. சீக்கிரம். எனக்கு பொறுமையில்லை. 
கணேஷ் ஜுலியிடம்: முதல் lifelineI பயன்படுத்த வேண்டியது தான். ஜூலி நீ இல்லாட்டி நான் காலி.
ஜூலி: The answer is ‘bad' 
வீரபரகேசரி: ஏன்? 
ஜூலி: when your ministers do not pull their weight they do not do their portion of the work. அப்படீன்னா ஒரு மன்னராக அந்த தீர்க்கப்படாத வேலைகள் உங்களோட பொறுப்புகளில் வந்து சேரும். அதனால் உங்க தலைவலி அதிகமாகும். So you need to then pick up the slack. நீங்க தான் கூடுதல் வேலையை, அடுத்தவங்க வேலையை எடுத்து சுமக்கணும். அப்படி சுமப்பது தான் picking up the slack. That is, doing the extra work because of the irresponsibility of your co-workers. 
வீரபரகேசரி: வெரி குட். இப்போ சொல்லு கணேஷ்... lifeline என்றால் என்ன? அந்த சொல் எப்படித் தோன்றியது?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com