இணைய வெளியினிலே...(14/01/2020)

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்கேடாகும் வாட்சாப் சுவை
இணைய வெளியினிலே...(14/01/2020)

முக நூலிலிருந்து....
• பல புள்ளிகளை இணைத்தால்தான் 
கோலம் முழுமை பெறும்...
அதுபோல...
பல தோல்விகளை இணைத்தால்தான் 
வெற்றியைப் பெற முடியும்.
வைகை ராமசந்திரன்

• கவனமாய் அழி... 
என் குறுஞ்செய்திகளில் ஏதோ ஒன்றில்
நான் என் உசிரை அனுப்பக் கூடும்.
இரா எட்வின்

• நிம்மதி இல்லாத 
புத்திசாலியை விட,
சந்தோஷமான 
பைத்தியக்காரன்...
எவ்வளவோ மேல். 
மாமல்ல வாசன்

• சிலந்திக்கு
வலையே பேருலகம்...
நட்சத்திரத்திற்கு
வானமே பேருலகம்...
வலையுமல்ல...
வானுமல்ல...
கவிஞனுக்கு
உள்ளங்கை அளவே உலகம்.
துரை பாரதி

சுட்டுரையிலிருந்து...
• வாழ்க்கை எனும் மாய புதினத்தில்
எத்தனையோ பக்கங்கள்...
திருப்பிட முடியாமல் 
திரும்பத் திரும்பப் படித்திடும் வகையில் சில...
முடியாத வகையில் பல... 
இருந்தும் படித்திடுவோம், 
முடிவெல்லாம் சுபமே. 
மாதொருபாகன்

• மனிதனே மனிதனை நம்பாமல்
கதவைப் படைத்தான்...
கதவை நம்பாமல்
பூட்டைப் படைத்தான்...
பூட்டை நம்பாமல்
மனிதனையே காவலுக்கு வைத்தான்...
மீண்டும் மனிதனை நம்பாமல்
கேமராவைக் காவலுக்கு வைத்தான்.
ஹர்ஷா 

• கடவுளுக்குப் பயந்து வேலை செய்பவனை விட
எனக்குப் பயந்து வேலை செய்பவனே அதிகம்...
- சிசிடிவி
முகமூடி

வலைதளத்திலிருந்து...
1. அகர முதல எழுத்தெல்லாம் அன்று- இன்று 
வாட்சாப் முதற்றே உலகு
2. வேண்டுதல் வேண்டா எலாமுள்ள வாட்சாப்பை
யாண்டும் நோண்டார் இலர் 
3. எப்பொருள் வாட்சாப்வாய் கேட்பினும் அப்பொருள்
கப்சாவா வென்றாய்ந் துணர்
4. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் வாட்சாப் 
கருமமே கட்டளைக் கல்.
5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையவாட் சாப்
6. உழைப்பதற்கு இல்லாத நேரம் சிறிதளவு
வாட்சாப்க்கும் ஈயப் படும்
7. இனிய உளவாக இன்னாத கூறிவிட்டு
சாந்துணையும் சச்சரவு ஏன்?
8. பீலிபெய் வாட்சாப்பும் போரடிக்கும் ஃபார்வர்ட்கள்
சால மிகுத்துப் பெயின்
9. மோப்பக் குழையும் அனிச்சம் தலைகுனிந்து
நோக்கக் குழையும் கழுத்து
10. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்
கேடாகும் வாட்சாப் சுவை
http://mosibalan.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com