சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 80

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் 1209 - இல் தொடங்கப்பட்டது. இங்கு முதுகலைப் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் 1209 - இல் தொடங்கப்பட்டது. இங்கு முதுகலைப் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. முதுகலைப் பட்டப் படிப்புகளில் எம்எஸ்டி பில்டிங் ஹிஸ்டரி (MSt BUILDING HISTORY) என்ற படிப்பு உள்ளது. இது இரண்டாண்டு பகுதி நேர பட்டப் படிப்பாகும். 
இது தவிர, Archaeology, Assyriology, Egyptology, Archaeological Research, Human Evolutionary Studies, Heritage Studies, Archaeological Science, Classics ஆகிய பிரிவுகளில் MPhil படிப்புகள் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் MPhil  Archaeology T¥l©p Archaeology of the Americas, Egyptian  Archaeology, European Prehistory, Medieval Archaeology, Mesopotamian Archaeology, Palaeolithic and Mesolithic Archaeology,  South Asian Archaeology, African Archaeology ஆகிய முதன்மைப் பிரிவுகளை எடுத்துப் படிக்கலாம். 
இதில் MPhil Human Evolutionary Studies என்பது 10 மாத முழுநேரப் படிப்பாகும். MPhil Classics படிப்பு 9 மாத முழுநேரப் படிப்பாகும். பிற எம்.பில் படிப்புகள் 11 மாத முழுநேரப் படிப்பாகும். 
இந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர இளம்நிலைப் பட்டப்படிப்பில் வரலாறு படித்த யார் வேண்டுமானாலும் சேரலாம். வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஓராண்டுக்கு ஏறக்குறைய ரூ.37.5 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். நன்கு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு அதற்கு உரிய சான்றுகள் இருந்தால் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 
பி.எச்டி ஆராய்ச்சிப் படிப்பில் Phd Archaeology,  Phd Antarctic Studies,  Phd Classics ஆகிய படிப்புகள் உள்ளன. 3-4 ஆண்டுகள் முழுநேரப் படிப்பாகும். 
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல், ஆராய்ச்சி ஆகிய இரண்டையும் சொல்லித் தருகிறார்கள்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைப் போன்றே இங்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர TOEFL தேர்வு எழுத வேண்டும். The Test of English as a Foreign Language என்பதன் விரிவுதான் TOEFL ஆங்கில மொழியில் படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் ஆகியவற்றில் மாணவர்களுக்கு உள்ள திறனைக் கண்டறிய இந்தத் தேர்வு உதவுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர இந்த TOEFL தேர்வில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெற மொத்த மதிப்பெண்கள் 120 ஆகும். ஆங்கிலத்தில் படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய ஒவ்வொன்றிலும் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். மொத்தம் 110 மதிப்பெண்கள் பெற வேண்டும். 
இதே போன்று, அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை படிப்புகள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தகவல்களை நன்கு தெரிவிக்கின்றனர். எத்தகைய சூழ்நிலையிலும் தொல்லியல்துறை சார்ந்த சவால்களை மாணவர்கள் எதிர்கொள்வதற்கும், இந்தத் தொல்லியல்துறையில் உள்ளஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுவதுடன், அவர்களை ஆராய்ச்சி செய்வதற்கான பயிற்சிகளையும் தருகிறார்கள். 

இங்கு தொல்லியல்துறை படிப்பில் சிக்கலான சமூக அமைப்புகளைப் பற்றியும், இனங்களைப் பற்றியும், மொழிகளைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் கற்றுத் தர சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர்.
இங்கு ஆர்க்கியாலஜிக்கெனவே தனி அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு மியூசியங்கள் உள்ளன. இங்கு படிக்கக் கூடிய மாணவர்கள் உலகெங்கிலும் சென்று தொல்லியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். 
ஆர்க்கியாலஜி, சோசியல் ஆந்த்ரோபாலஜி ஆகிய இரு பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 
ஆர்க்கியாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா என்ற நிறுவனத்தில் உலகெங்கிலும் எங்கெல்லாம் தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; உலகின் பல இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எந்தவிதமான திறமைகள் மாணவர்களுக்குத் தேவைப்படுகின்றன என்பன போன்ற தகவல்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் இதன் மூலம் தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். இங்கு பணிபுரியக் கூடிய, தொல்லியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடக் கூடிய மாணவர்களுக்கு அவர்கள் ஏராளமான கல்வி உதவித் தொகைகளை வழங்குகிறார்கள். 
தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் இடங்களைக் கண்டுபிடித்து பாதுகாப்பதற்கு, அங்கு கிடைத்த ஆதாரங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு என உதவித் தொகைகள் இங்கு வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு தொல்லியல்துறை சார்ந்த பணிகளுக்கும் உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. 
வெளிநாடுகளில் உள்ள தொல்லியல்துறையில் உள்ள பணிகளைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. மாணவர் ஒருவர் தானாக முன்வந்து தொல்லியல்துறை சார்ந்த பணிகளை அவரே திட்டமிட்டு ஈடுபடுவதற்கும், ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொல்லியல்துறை சார்ந்த பணிகளில் சேர்ந்து பணி செய்வதற்கும் 1400 முதல் 1700 பவுண்ட் வரை (இந்திய மதிப்பில் ரூ.1, 34, 000) பெரு, ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு- அதிலும் 1- 2 வாரம் வேலை செய்பவர்களுக்கும் கூட மேற்சொன்ன உதவித் தொகை கிடைக்கிறது. 
ஆர்க்கியாலஜி ஸ்கில்ஸ் பாஸ்போர்ட் (http://www.archaeologyskills.co.uk/) என்ற இணையத்தின் வாயிலாக தொல்லியல்துறை சார்ந்த பணிகளுக்குத் தேவைப்
படும் திறன்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திறன்களை CORE SKILLS, SECONDARY SKILLS, TERTIARY SKILLS, CAREER PATHWAYS, THE SKILLS PASSPORT, TEACHING SKILLS என வகைப்படுத்தியுள்ளார்கள். 
இதில் CORE SKILLS பகுதியில் அகழ்வராய்ச்சிகள் செய்யும்போது கிடைத்த ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் தேவைப்படும் பல திறன்கள் (Handtools (Trowel etc), Handtools (Spade, Mattock etc), Site Formation Processes, Stratigraphic Excavation, Context Sheet Recording, Site Photography, Site Grid and Trench Layout, Dumpy Level and Staff Planning, Section Drawing, Collection of Samples, Artefact Recovery, Recording & Storage, Site Safety) அடையாளம் காட்டப்பட்டுள்ளதோடு, அத்திறன்களை வளர்த்துக் கொள்வதற்குமான வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. 
Secondary Skills பகுதியில் Survey (Total Station), Geophysics, Landscape Walkover Survey, Field Walking, Environmental Processing Finds Processing,  GIS & Data Management, Data Entry/Archiving, Excavation and Lifting Skeleton ஆகிய திறன்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோன்று பிற திறன்கள் பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. 
Tertiary Skills பகுதியில் ஒரு தொல்லியல் ஆய்வுப் பகுதியைக் கண்டறிந்து அது தொடர்பாக எழுதுவது (Report and Article Writing), அவற்றைப் பற்றிய வரைபடங்களை, ஓவியங்களை உருவாக்குவது (Illustration and Graphics), தொல்லியல்துறை பணிகளைப் பற்றிய தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது (Public Outreach), தொல்லியல்துறை சார்ந்த பகுதிகளை சட்டப்பூர்வமான தொல்லியல்துறை சார்ந்த பகுதிகளாக (Heritage Legislation) அறிவிக்கச் செய்யப்படும் பணிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பிறதுறைத் திறன்களை தொல்லியல்துறை சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பான (Transferable Skills) திறன்கள் பற்றியும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. 
Career Pathways என்ற பிரிவில் தொல்லியல்துறை சார்ந்த பணிகளை உயரமான இடத்திலிருந்து புகைப்படம் எடுப்பது, அவற்றை கணினியில் பயன்படுத்துவது, கிடைத்த காட்சிவழி தகவல்களை பரீசிலனை செய்வது, தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த சான்றுகளைப் பற்றிய விவரங்களை உருவாக்கி அவற்றைப் பாதுகாப்பது, ஏற்கெனவே உள்ள வரைபடங்கள், தகவல்கள், சான்றுகளைப் பயன்படுத்திக் கொள்வது, தொல்லியல்துறை சார்ந்த பணிகளின் சிறப்பு அம்சங்களை, அமைப்புமுறைகளை ஆவணப்படுத்துவது உட்பட பல பணிகளைப் பற்றிய தகவல்களைத் தருவதை, அவர்களுக்குப் பயிற்சியளிப்பதை இந்த ஆர்க்கியாலஜி ஸ்கில்ஸ் பாஸ்போர்ட் இணையதளம் தனது பணியாகக் கொண்டிருக்கிறது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com