வேலை...வேலை...வேலை...(14/01/2020)

மத்திய அரசில் வேலை, காதி மற்றும் கிராம தொழில்ஆணையத்தில் வேலை, கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை  
வேலை...வேலை...வேலை...(14/01/2020)

மத்திய அரசில் வேலை 
பணி:  Data Processing Assistant - 02
தகுதி: Computer Application, Information Technology, Computer Science போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது மேற்கண்ட துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி: Deputy Central Intelligence Officer (technical) - 27
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், மென்பொருள் பொறியியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjE4YK1WLPAXZOL2CXHIA7AKKUDMIFJC5Q6AQXAVSADS9CN3CIGCNI என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.01.2020

காதி மற்றும் கிராம தொழில்ஆணையத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 108
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1.Senior Executive (Economic Research)- 02
வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
2.Executive (Village Industries) - 56
3.Executive (Khadi)-06
4.Junior Executive (FBAA)-03
5.Junior Executive (Adm. & HR)-15
6. Assistant (Village Industries)-15
7.Assistant (Khadi) -08
8.Assistant (Training) -03
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, சிஏ, டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ, அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.kvic.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.kvic.org.in/kvicres/update/others/Detailed_Advertisement_20122019.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.01.2020

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 1326
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Mining - 288 
2. Electrical - 218 
3. Mechanical - 258 
4. Civil - 68
5. Coal Preparation - 28 
6. Systems - 46 
7. Materials Management - 28 
8. Finance & Accounts - 254 
9. Personnel & HR - 89 
10. Marketing & Sales - 23 
11. Community Development - 26 
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: ஓர் ஆண்டுக்கு மாதம் ரூ.60000. பின்னர் மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
தேர்வு கட்டணம்: ரூ1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.01.2020

தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலை
தேர்வு: Delhi Higher Judicial Service Examination
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.1,31,100 - ரூ.2,16,600
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: தில்லி உயர்நீதிமன்றத்தால் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  http://delhihighcourt.nic.in/writereaddata/upload/Recruitments/OpenPositions/CurrentJobFile_J5QET5M73I3.PDF என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.01.2020 

மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில் வேலை 
பணி: Young Professionals
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பயோடெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி., அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை:  www.dbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.dbtindia.gov.in/whats-new/vacancies என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.01.2020
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com