100 ஆண்டுகளுக்கு முன்...

இன்று கரோனா தீநுண்மி உலகை ஆட்டிப்படைக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1918-ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடியும் தருவாயில் உலகைப் பாதித்த "ஸ்பானிஷ் ஃபுளூ' தீநுண்மியின் தாக்கம் இதைப் போன்றதுதான்.
100 ஆண்டுகளுக்கு முன்...


இன்று கரோனா தீநுண்மி உலகை ஆட்டிப்படைக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1918-ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடியும் தருவாயில் உலகைப் பாதித்த "ஸ்பானிஷ் ஃபுளூ' தீநுண்மியின் தாக்கம் இதைப் போன்றதுதான். இந்நோய்த்தொற்றின் பாதிப்பு 1920-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 2 ஆண்டுகள் நீடித்தது. உலக அளவில் ஐந்து கோடி பேர் இந்நோய்க்கு பலியானது சோக வரலாறு. அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. 

"ஸ்பானிஷ் ஃபுளூ' நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு  அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், நாடக அரங்குகள், திரைப்பட அரங்கங்கள், நீச்சல் குளம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கும் சுவரொட்டி. 

புலம் பெயர்ந்தோர் நடைப்பயணம்.

சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட வார்டு.

சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட வார்டு.பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொலைபேசி மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டதற்கான அறிவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com