தொழில் தொடங்க வேண்டுமா?

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும்.
தொழில் தொடங்க வேண்டுமா?

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.

கடனுதவி பெறத் தகுதியான தொழில்கள்: இக்கழகத்தில் நிதியுதவி பெறத் தகுதியான தொழில் நிறுவனங்கள், கீழ்காணும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது ஈடுபட வேண்டும். பொருட்கள் 

உற்பத்தி செய்தல், பக்குவப்படுத்தல், சுரங்கத் தொழில், மின்சாரம் அல்லது வேறு திறன் உற்பத்தி செய்தல், மருத்துவ இல்லம் அமைத்தல், பராமரிப்புத் தொழில், பழுது பார்த்தல், சோதனை செய்தல், மரக்கலங்கள், மோட்டார் படகுகள், டிராக்டர்கள் பழுது பார்த்தல், தங்கும் விடுதிகள், வாகனங்கள் வாங்குதல், மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடிப்பு சாதனங்கள் தயாரித்தல்.
எவ்வளவு கடன்?: இந்த நிதிக்கழகம் தனியார் 

மற்றும் பொது நிறுவனங்களுக்கும், கூட்டுறவு இணையத்திற்கும் ரூபாய் 90 லட்சம் வரை நிதி வழங்குகிறது. ஒருவரால் நடத்தப்படும் தொழிலுக்கும், கூட்டணி முறையில் நடத்தப்படும் தொழிலுக்கும் ரூபாய் 60 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. பிற சேவை நோக்கமுடைய நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. தொழிலின் திட்ட மதிப்பு ரூபாய் ஐந்து கோடிக்கு மிகாமல் இருந்தால் அந்நிறுவனங்களுக்கு இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது.

இந்த நிதிக்கழகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏற்கெனவே இயங்கி வரும் அல்லது இனிமேல் தொடங்கவுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கும். இக்கழகம் கைவினைஞர்கள், கிராமக் குடிசைத் தொழில்கள் போன்றவைகளுக்கு மூலதனமும், உபகரண நிதியுதவியும் அளிக்கிறது. 

மேலும் விவரங்களுக்கு: The Tamilnadu Industrial Investment Corporation Limited, 692, Anna Salai, Nandanam, Chennai - 600035. Tamilnadu, India.  இணையதளம் : ho@tiic.org. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com