இளைஞர்களுக்கு புதுமையான வேலைவாய்ப்பு!

கரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருப்பவர்களின் பொழுதுபோக்கு என்றால் செல்போன் , தொலைக்காட்சி மட்டுமே.
இளைஞர்களுக்கு புதுமையான வேலைவாய்ப்பு!


கரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருப்பவர்களின் பொழுதுபோக்கு என்றால் செல்போன் , தொலைக்காட்சி மட்டுமே. குறிப்பாக ஆன்லைன் விஷயங்களுக்கு தற்போது செல்போன் மற்றும் தொலைக்காட்சி பெரிதும் உதவுகிறது.

எவையெல்லாம் வேண்டாம் என்று குழந்தைகளிடம் சொல்லி வளர்த்தோமோ இன்று அந்த பொருட்களை நாமே குழந்தைகளிடம் கொடுக்கும் அளவிற்கு காலம் நம்மை மாற்றிவிட்டது. குறிப்பாக இன்றைய இளைஞர்களின் வாழ்வில் செல்போனும், தொலைக்காட்சியும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதனை தொழிலாக பயன்படுத்தும் புத்திசாலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். யூகே-வின் ஆன்லைன் சந்தைப்பகுதியான OnBuy இந்த வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இனி வீட்டில் யாராவது டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, உங்களிடம் "ஏன் டி.வி பார்த்துக் கொண்டு இருக்கிறாய்' என்று கேள்வியை யாராவது கேட்டால் நீங்கள் பெருமையாக "நான் ஒரு டெக் டெஸ்டர்' என்று சொல்லி மார்தட்டிக் கொள்ளலாம். ஆம். "டெக் டெஸ்டர்' என்பது ஒரு புதிய வேலை.

டெக் டெஸ்டர் வேலை பற்றி தெரியுமா? டிவி பார்ப்பதுதான் டெக் டெஸ்டரின் வேலையே. அதுவும் சும்மா பார்க்க வேண்டாம். ஊதியம் வாங்கிக்கொண்டு பார்க்கலாம். கரும்பு சாப்பிடுவதற்கு கூலி. என்ன நம்பமுடியவில்லையா? "டெக் டெஸ்டர்' என்ற வேலைக்குத் தயாராக இருப்பவர்கள், கூர்மையான பார்வையும், தங்களின் கருத்தை எழுத்து வடிவில் எழுதத் தெரிந்தவராக இருக்கவேண்டும்.

டி.வியில் ஒரு சம்பவத்தை பார்க்கும் போது அதனை உள்வாங்கி கொண்டு அது தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகளை எழுதிக்கொடுக்க வேண்டும்.

டிவி மட்டுமல்லாது ஸ்மார்ட் வாட்ச், செல்போன், காமிரா, ஹெட்ஃபோன் போன்ற சாதனங்களையும் பயன்படுத்தி சோதனை செய்து 200 வார்த்தைகளில் அந்த சாதனம் குறித்த மதிப்பீட்டை வழங்கவேண்டும். ஒவ்வொரு தயாரிப்பையும் முழுமையாக ஆராயவேண்டும். அதன் வடிவமைப்பு, திறன், நீடிப்புத்தன்மை ஆகியவற்றை சோதிக்கவேண்டும். அத்துடன் ஒலி, காட்சியமைப்பு, செயல்பாடு, பணத்திற்கான மதிப்பு போன்ற அம்சங்களையும் ஆராயவேண்டும்,” என்று ஞய்ஆன்ஹ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 பவுண்ட் அதாவது நம்முடைய இந்திய மதிப்பில் சுமார் ரூ.3200 ஊதியமாக கொடுக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்தால் 700 பவுண்ட் வரை சம்பாதிக்கலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ஒரு வாரத்திற்கு 64,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறுமா? என்று ஞய்ஆன்ஹ் நிறுவனத்தின் கேஸ் பேடனின் கேள்வி எழுப்பப்பட்டது. "எங்களுடைய தயாரிப்புகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்க விரும்புகிறோம். எனவே இந்த சாதனங்களைப் பயன்படுத்திய ஒரு தொழில்நுட்ப நிபுணரிடமிருந்து கருத்துகளை சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தகவல்களாக வழங்க விரும்புகிறோம்,' என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்பும்கூட பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இதேபோன்று தூங்குவதற்கு சம்பளம் கொடுக்கும் பணி வாய்ப்பை அறிவித்தது. 100 நாட்கள் 9 மணி நேரம் தூங்கினால் 1 லட்ச ரூபாய் சம்பளம் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா பொதுமுடக்கத்தில் வேலை பறி போய்விட்டது என்ற கவலை இனி வேண்டாம். ஞய்ஆன்ஹ் போன்ற நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க தயாராக இருக்கின்றன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றிப்பாதையில் பயணிப்பது இளைஞர்களின் தேடலில் தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com