வாழ்வில் உச்சத்தை எட்ட உணர்வு நுண்ணறிவுத் திறன் வேண்டும்

நுண்ணறிவுத் திறன் (intelligence quotient).. உணர்வு நுண்ணறிவுத் திறன் (emotional quotient)..
வாழ்வில் உச்சத்தை எட்ட உணர்வு நுண்ணறிவுத் திறன் வேண்டும்

நுண்ணறிவுத் திறன் (intelligence quotient).. உணர்வு நுண்ணறிவுத் திறன் (emotional quotient)..

இது குறித்து எத்தனையோ பேர்எத்தனையோ விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான விவாதங்களும் இணையத்தில் பரவலாக காணப்பட்டாலும் கூட ஒருவரின் வெற்றிக்கு மிகவும் துணையாக இருப்பது IQவா அல்லது EQவா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வரத்தான் செய்கின்றன. ஆனால் இரண்டு திறன்களும் இருந்தால்தான் அதிகபட்ச உயரத்தை, எல்லையைநம்மால் அடைய முடியும்.

பொதுவாக எல்லோருக்குமே வயதுக்கு ஏற்ற அறிவு இருக்கும். இருவருக்கு இடையில் பிரச்னை என்று வரும்பொழுது, "ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலயே.' என்பார்கள்.

அப்படி என்றால் நமது வயதுக்கு ஏற்ப அறிவின் திறன் இருக்கும் என்பதற்காக இதை குறிப்பிடுவார்கள். ஆனால் வயதைத் தாண்டி சிலருக்கு அறிவுத்திறன் இருக்கும் இவர்களை முன்னொரு காலத்தில் அதிமேதாவி என்று சொல்லுவார்கள். அதைத்தான் நாம் இப்பொழுது IQ திறன் மிக்கவர் எனக் கூறுகிறோம் . அப்படி என்றால் ஒருவரின் வயதிற்கு ஏற்ற அறிவுத்திறனை தாண்டி நுண்ணறிவுத் திறன் இருக்குமேயானால் அவர் அதிக அறிவுத் திறன் உடையவர் என கருதப்படுகிறார்.

மனதிற்கான வயது மற்றும் உடலுக்கான வயது ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கணக்கிட்டு IQ அளவு கண்டறியப்படுகிறது. இதற்கென்று நுண்ணறிவுச் சோதனைகள் நடத்தப்பட்டு உலகத்திலே இவர்தான் IQ லெவலில் உச்சபட்சமாக இருக்கிறார். இந்த சிறுவன் இந்த விஞ்ஞானியை விட IQ லெவலில் அதிகமாக இருக்கிறான் என்றெல்லாம் அவ்வப்போது நாம் செய்திகளைக் காண முடிகிறது.

உலகளவில் எத்தனையோ பேர் ண்வ் சோதனை தொடர்பான பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வில்லியம் ஸ்டேன் என்பவர்தான் முதன் முதலில் IQ விஷயத்தை கண்டறிந்து உலகிற்கு தெரிவித்தவர் எனவும் கூறப்படுகிறது. ஒரு மனிதனுடைய சிந்திக்கும் திறன் மற்றும் செயல்படும் திறன் போன்றவைகளே IQ திறனின் காரணிகளாக அமைகின்றன என்கிறார் அவர். உலகிலுள்ள பெரும்பாலோனோருக்கு தங்களது உணர்வுகளை மட்டுமே முன்னிலைப் படுத்தத் தெரியும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி அற்றவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

தன்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்வது போல் மற்றவருடைய உணர்வுகளை புரிந்து கொள்வதே உணவின் வரையறையாக கூறப்படுகிறது. 1995 வாக்கில் தான் இது தொடர்பான வார்த்தைகளும் அளவீடுகளும் உருவாக்கப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. நம்முடன் இணைந்து உள்ளவர்கள், நெருக்கமானவர்கள், சமூகத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளிட்டோரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் இந்தத் திறன் அவசியப்படுகிறது. நண்பர்கள் கூட்டாக ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கும் போது நண்பரின் எண்ண ஓட்டத்தை புரிந்து செயல்பட்டால் எளிதில் வெற்றி பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில் நண்பரின் எண்ணத்தை தெரிந்து கொள்ள இது உதவும்.

பிரச்னையான காலகட்டத்தில் நம்மைச்சுற்றி இருக்கும் நபர் எத்தகைய எண்ண ஓட்டத்தில் இருந்தார்? அவர் எப்படி தனது எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார் அல்லது அந்த உணர்ச்சிகளை கையாண்டு எப்படி வெற்றி கொண்டார் என்பதை நாம் தெரிந்து கொண்டால் அது போன்ற கஷ்டங்கள் வரும் போது அதை எளிதில் கடக்க முடியும் என்பதால் உண என்பது இப்பொழுது முக்கியமான விஷயமாக மாறிவிட்டது.

பொதுவாக பணியிடங்களில் பணிக்கு ஆட்களைத் தேடும்பொழுது எல்லாவிதமான திறன்களையும் பெற்று இருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது .அந்த வகையில் IQ மற்றும் உண என்பதும் முக்கியம். ஆனால் இந்த இரண்டு திறன்களில் எந்த திறன் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 10 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே IQ திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் மீதி EQவிற்கு முக்கியம் அளிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தர்க்க ரீதியிலான பகுத்தறிவு திறனை பொறுத்தே (Logical) EQ கணக்கிடப்படுகிறது. நுண்ணறிவு திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். IQ அளவு அதிகமாக இருப்பவரால் கல்வி சார்ந்த விஷயங்களில் சிறப்பாக ஜொலிக்க முடியும். அதிக அளவுக்கு திறன் உடையவரால் எல்லா விஷயங்களையும் எளிதில் அணுக முடியும். அதில் சிறப்பிடமும் பெற முடியும். ஒரு விஷயத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் தெளிவுபடுத்துவதற்கு அவரால் மட்டுமே முடியும்.

அதிக புத்திக் கூர்மையும் அதிக பொது அறிவுத் திறனும் உடைய ஒருவரால் மட்டுமே சிறந்த IQ levelI பெற முடியும். ஒருவர் சமூகத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார் என்பதைப் பொருத்தே EQ அளவிடப்படுகிறது. சமூகத்திலுள்ள மற்றவர்களின் எண்ணங்கள், சூழ்நிலைகள் போன்றவற்றை அறிந்து செயல்படும் பொழுது ஒருவருடைய வளர்ச்சி மேம்படுகிறது. சமூகத்துடன் நாம் தொடர்ந்து ஒருங்கிணைப்பில் இருக்க வேண்டுமானால் அதைப்பற்றி நமக்கு புரிதல் அவசியம். அத்தகைய புரிதல் நமக்கு வந்துவிட்டால் வாழ்க்கையில் உயரத்தை நம்மால் எட்டிப்பிடிக்க முடியும். ஐக்யூ என்பது பிறப்பிலேயே அமைந்து விடுகிறது. EQ என்பது நாம் வாழும் போதே வளர்த்துக் கொள்ள முடிவதாய் இருக்கிறது.

எந்த இடத்தில் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் EQ. இதை சரியாக கற்றுக் கொண்டு விட்டால் அனைத்தும் நம் வசமாகும். நிறுவனத்தில் நம்முடன் பணியாற்றுபவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவதற்கு EQ உதவுகிறது. இதனால் நிறுவனத்தையும் திறம்பட செயல்படுத்த முடியும். அவர்களிடத்தில் இருந்து நாம் யோசிப்பததற்கான வாய்ப்பையும் EQ தருவதால் பெரிய வெற்றிக்கு துணை புரிகிறது.

உதாரணமாக பெரிய போராட்டக் களத்தில் பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் தெரிவிப்பார்கள். அந்த போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக அறிவுத்திறனை கையில் எடுப்பதற்கு பதிலாக அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி போராட்டக்காரர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு செயல்படும் நபரால் மட்டுமே அங்கு சமரசத்தை உருவாக்க முடியும்.

பல இடங்களில் எமோஷனல் பிளாக்மெயில் என்பது எளிதாக வெற்றி அடைவதை நாம் பார்த்திருப்போம். இருந்தாலும் இரண்டையும் தனித்தனியாக பெற்றிருப்பதை விட இரண்டும் ஒரு சேர பெற்றிருக்கும் ஒருவரால் உலகத்தையே நம் கைக்குள் கொண்டு வரமுடியும். பொதுவாக IQ 20 சதமும் EQ 80 சதவீதமும் உள்ள ஒருவரால் எல்லா சூழ்நிலைகளிலும் தனது திறன்களை திறம்பட பயன்படுத்தி வெற்றி கொள்ள முடியும் என்பதை உலகத்தில் உயர்ந்த நிலையிலிருக்கும் பலரின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

IQ மற்றும் உண திறன் உள்ளவர்களால் நிறுவன ஊழியர்களை தன் வசமாக்கி நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். அதே போல் அத்தகைய திறன் உடையவர்கள் வாழ்க்கையின் உச்சத்தை விரைவில் தொட்டு விடுவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com