இணைய வெளியினிலே...

எங்கோ ஒலிக்கும்  உன் குரல்...எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும் வரைதலையசைத்துக் கொண்டிருப்பேன்...
இணைய வெளியினிலே...

முகநூலிலிருந்து...

எங்கோ ஒலிக்கும்  உன் குரல்...
எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும் வரை
தலையசைத்துக் கொண்டிருப்பேன்...
சிறுகிளை  ஒடியாது...
ஆடு  பறவையே ...  ஆடு!

உமா மோகன்

எங்கிருந்து கற்றேன்...
என்னை மட்டுமே பூட்டிக் கொள்ள.

செந்தில் பாலா

வயிற்றில் இருந்து உருவான நாம்,
அந்த வயிற்றுக்காகவே 
வாழ்நாள் முழுக்க உழைப்பதற்குப் 
பெயர்தான்... வாழ்க்கை.

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

தேவையான அளவு சம்பாதித்துவிட்டு,
வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள்...
அதன் எல்லைக்கோடு தெரியாததால்,
சம்பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் வாழாமலேயே...!

தீக்குச்சி மனிதம் 

சுட்டுரையிலிருந்து...


ஒரு போதும் அன்பை யாசித்துப் பெறாதே...
ஏனெனில் எஞ்சியதைத்தான் இங்கு பிச்சையிடுவார்கள். 

முகிலன்



"இயற்கையான'  உறவுகள் கூட,
"செயற்கையான' "ஈகோ'விடம்தோற்றுப் போகிறது.

சீனு பாரதி

உன் நம்பிக்கை சிறகை விரிக்காத வரை...
உன் வெற்றியின் உயரத்தை
அளக்க முடியாது.

ஐஸ்வர்யா செந்தில்

அன்பு எனும் மிருகம் அங்கங்கே இல்லாமல் இருந்திருந்தால்...
இந்த மனிதக்காடு எப்போதோ அழிந்திருக்கும்!

ஈரோடு கதிர்


வலைதளத்திலிருந்து...

ஸ்மார்ட் போன் இல்லா பெருவாழ்வு!

நம்முடைய சுற்றத்தை அதிகம் கவனிக்க ஆரம்பிப்போம். மன அமைதி கிட்டும். ரயிலில், பஸ்ஸில், ஷேர் ஆட்டோவில் யாரெல்லாம் வழக்கமாக உடன் பயணிக்கிறார்கள், என்ன உரையாடுகிறார்கள் யார் எங்கே இறங்குகிறார்கள் எல்லாமே கவனத்தில் வரும்.  

ஃபேஸ் புக் இருக்காது. நிமிடத்திற்கு ஒரு முறை notification பார்க்க வேண்டிய அவசியமில்லை. நியூஸ் பீடில் யார் வானத்தை வில்லாய் வளைக்கிறார்கள் என்றெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. Virtual சாதனைகளை விட, வாழ்வின் யதார்த்த தருணங்கள் அதிக சந்தோசம் அளிக்கும்.  

மூன்று மாதம் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பில் இல்லாமல் போனால் புரஃபைல் தன்னாலேயே “க்ங்ஹஸ்ரீற்ண்ஸ்ஹற்ங்’ ஆகி எல்லா குரூப்பில் இருந்தும் விடுதலை கிடைத்துவிடும். தேவையில்லாத குரூப், அளவுக்கதிகமான ச்ர்ழ்ஜ்ஹழ்க்ள்  போன்ற தொந்தரவுகள் இருக்காது. நேரம் குடிக்கும் ஸ்ரீர்ய்ஸ்ங்ழ்ள்ஹற்ண்ர்ய்ள் இருக்காது. ப்ளூ டிக் பிரச்னை இருக்காது.   செல்ஃபி எடுக்கும் ஆர்வம் குறைந்து போகும். பயணிக்கும் இடங்களை எல்லாம் ஃபோட்டோ எடுக்க தோணாது. சீனரிகளை போட்டோ ஃப்ரேம் வைத்து பார்க்காமல்,  கண்களால் ரசிக்கத் தொடங்குவோம்.

ஆனால் "ஸ்மார்ட் போனைத்' தவிர்ப்பது எல்லாருக்கும் எல்லா வேளைகளிலும் சாத்தியமில்லை. சிலருக்கு உடனுக்குடன் மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கலாம். சில அத்தியாவசிய வேலைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படலாம். அதனால் ஸ்மார்ட் போனை விட்டொழிக்க வேண்டிய அவசியமில்லை. அதன் பயன்பாட்டைக்  குறைத்து கொள்ள முடியும். தேவை இல்லாத app- களை delete செய்துவிடலாம். சோஷியல் நெட்வர்க்கிங்கை கணினியோடு நிறுத்திக் கொள்ளலாம். மூளையை சோர்வடைய வைக்கும் கேம்களை, app-களைத் தவிர்க்கலாம். உறங்கும் நேரத்தில் கைக்கு எட்டாத தூரத்தில் போனை வைத்துவிடலாம். போனிற்கு வெளியே, குடும்பம் நண்பர்கள் என நிஜ மனிதர்களோடு அதிக நேரம் செலவிடுவோம். கொஞ்சம் அதிக ஸ்மார்ட்டாக, மனநிறைவோடு வாழ்வோம்!

https://aravindhskumar.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com