புகை... அதிக பாதிப்பு!

புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
புகை... அதிக பாதிப்பு!

புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கரோனா தொற்று உலகெங்கும் அதிகமாகி உள்ள இக்காலத்தில், புகைபிடிப்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,590 நோயாளிகளை ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக உள்ளன.

கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் புகைபிடிக்காதவர்களைக் காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கு நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்று அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். நோயின் பாதிப்பு அதிகமாகும்போது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்கிறார்கள்.

தற்போது புகைபிடித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது ஏற்கெனவே புகைபிடித்து நிறுத்தியவர்கள் என புகைபிடிப்பதுடன் தொடர்புடைய எல்லாரையுமே கரோனா வைரஸ் கடுமையாகத் தாக்குகிறது.

சாதாரணமாகவே சிகரெட் மற்றும் இ - சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் சார்ந்த தொற்று நோய்கள் எளிதில் ஏற்படும். குறிப்பாக புகைபிடிப்பவர்களின் மூச்சுக்குழாய்களில் ஏற்படும் சேதங்கள் கிருமிகள், வைரஸ் தொற்றுகளை அதிகப்படுத்துகின்றன. கரோனா வைரஸ் புகைபிடிப்பவர்களை எளிதில் தொற்றிக் கொள்கிறது.

யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் நடத்திய ஆய்வு முடிவு மட்டுமல்ல, அமெரிக்கா, சீனா, கொரியா ஆகிய நாடுகளில் உள்ள கரோனா நோயாளிகளை ஆய்வு செய்து டன்க்ஷஙங்க் என்ற மருத்துவ ஆராய்ச்சி வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலும் கூட "புகை... கரோனாவுக்குப் பகை' என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com