முகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி
மருந்து
By DIN | Published On : 14th July 2020 06:00 AM | Last Updated : 14th July 2020 06:00 AM | அ+அ அ- |

மருத்துவத் துறையில் மருந்து என்பது ஆங்கிலத்தில் Medicine எனப்படுகிறது. Medicine என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்.
"மருந்து மருத்துவத்துறை; மருத்துவக்கலை உட்கொள் மருந்து' ( ப.627) எனப் (ப.627) பொருள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிலையைத்தான் "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்' என்று (குறள்: 950) கூறுகின்றது.
மருந்தென வேண்டாவாம்
மருந்தே இல்லாத வாழ்வு வாழ்வதற்காகத்தான் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு' (குறள்: 942) என வரையறுத்துக் கூறியுள்ளார். நாம் உணவு உண்ணும் பொழுது கொள்ளுவதும், தள்ளுவதும் சரியாக இருந்தால் உடல், நோய் இல்லாமல் செம்மையாக உள்ளது என்பது அறியத் தக்கதாகும்.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்' ( குறள்: 35)
என்ற குறளில் தனது நல்வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் முன்னரே பாதுகாத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பினருகில் உள்ள வைக்கோல்போர் போல கெட்டழியும். ""எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு''
( குறள்: 429) என்ற குறள்கள் வழி நடந்தால் மருந்தில்லா வாழ்வு வாழலாம்.
லலிதா சுந்தரம் எழுதிய "திருவள்ளுவர் ஒரு பன்முக மருத்துவர்' என்ற நூலிலிருந்து...