வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 251

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 251


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.  இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.  

அப்போது வீரபரகேசரியின் நாட்டில் எதிரி நாட்டுடன் போர் ஆரம்பிக்கிறது. என்ன முடிவெடுப்பது எனும் கவலையில் வீரபரகேசரி தன் புரவியான ஷாவிடம் ஆலோசனை கேட்க வருகிறார். 

ஷா: மன்னா, எதிரி நாட்டினர் ஒவ்வோர் ஆண்டும் சில அடிகள் எல்லைக்கோட்டை நம் நாட்டுக்குள் நகர்த்தி வருகிறார்கள். எது நம் நாடு, எது அவர்களின் நாடு என அவர்களுக்கே மறந்து விட்டது. என்ன செய்வது?

வீரபரகேசரி: ஆம், உண்மை. நம்முடைய ராணுவம் கடந்த பல பத்தாண்டுகளாய் அங்கு காவல்புரிகின்றன. ஆனாலும் போர் எனக்குப் பிடிக்காது.

கணேஷ்: மன்னா, இவ்வளவு வீரம் பேசும் உங்களுக்கு ஏன் போர் பிடிக்காது?
வீரபரகேசரி: அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஷா: அதை வெளியே சொல்லுங்கள். A penny for your thought. 
 
வீரபரகேசரி:  போர் என்றால் வந்து விட்டால் நிஜமாகவே சண்டை போட வேண்டும்; அடி வாங்க வேண்டும்; யுத்தத்துக்குப் போகாமல் வீரனாக மட்டும் இருப்பது எளிது. அதனால் தான்...

ஷா: எனக்கு ஓர் ஐடியா - நாம் எதிரி நாட்டின் வலசை போகும் பறவைகளை - migratory birds - வருவதைத் தடை செய்யலாம். அதாவது இந்த பறவைகள் இங்குள்ள இயற்கை எழில் ததும்பும் பகுதிகளுக்கு வரும் போது நாம் அவற்றை சிறைபிடிக்கலாம். இப்பறவைகளின் தடை, எதிரி நாட்டில் இயற்கை சமநிலையை அழித்து இறுதியில் அவர்களின் சமூக,  பொருளாதார வளத்தைப் பாதிக்கும். இது எதிரி நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறும்.

வீரபரகேசரி: Bang on. இதை நாம் வலசைத் தாக்குதல் - migratory strike என நாம் ஊடகங்களில் அறிவிக்கலாம். இதை ஒரு மகத்தான திட்டம் என சத்தமாய் விவாதிக்க டிவியில் நமது அடிமைகளிடம் ஆணையிடுங்கள். வாட்ஸ் ஆப்பில் நாளை இது தீ போல பரவ வேண்டும். அப்போதுதான் மக்கள் நாம் ஜெயித்ததாய் நம்புவார்கள்.

கணேஷ் ஜூலியிடம்: அதென்ன bang on. Bang என்றால் ஓங்கி அடிப்பதுதானே?
ஜூலி: ஆமாம். ஆனால் bang on என்றால் exactly என்று அர்த்தம். அடுத்தவர் சொல்லும் ஒரு கருத்து நமக்குப் பிடித்திருந்தால், மிகவும் ஏற்புடையதாக இருந்தால் bang on எனலாம். 

இது இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு phrase. இதே பொருளில் மற்றொரு சொற்றொடர் - spot on. ஒருவரது பார்வை உடன்பாடாக இருக்கும் போது நீங்கள் வர்ன் You are spot on எனச் சொல்லலாம். 

நம்முடைய தற்போதைய இந்திய அணி கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பிடித்தமான பிரயோகம் அது. அவர் வர்ணனையாளராக இருக்கும்போது சக வர்ணனையாளரிடம் “Spot on, in fact if you see... என அளந்து விடுவார். அதே போல சிலர் "வளவள' என பேசிக்கொண்டே போவார்கள். அவர்களைப் பற்றி சொல்லும் போது he loves cricket, so when it comes to a conversation on the game to would keep banging on எனச் சொல்லலாம். அதாவது அவருக்குக் கிரிக்கெட் ரொம்ப பிடிக்குமா, அது சம்பந்தமான பேச்சு வந்தாலே அவர் பாட்டுக்கு பேசிக்கிட்டே போவார்.

கணேஷ்: செம.

ஷா தலைதூக்கி வானைப் பார்க்கிறது. இருண்டு வருகிறது.

ஷா: Bangs!

கணேஷ்: ஆங்?

ஜூலி: இடியுடன் புயல் மழை வர வாய்ப்பு என்கிறது. Bangs என்றால் இங்கிலாந்தில் thunderstorm என அர்த்தம். .

கணேஷ்: அட... என் அலுவலகத்தில் பக்கத்து சீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் சின்ன வயது பேபி ஷாலினியைப் போல ஹேர் ஸ்டைல் பண்ணியிருப்பாள். என்னம்மா இது எனக் கேட்டால் Bangs என்றாள். 

இப்போ என்னடான்னா அது thunderstormன்னு சொல்றே?

(இனியும் பேசுவோம்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com