உலகம் இயங்க உதவும் தொழில்நுட்பங்கள்!

கரோனா தொற்று எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியாத நிலையே இப்போது உள்ளது. உலகம் முழுவதும் இந்த கரோனா வைரஸ் பாதிப்பை மையமாகக் கொண்டே சுழல்கிறது.
உலகம் இயங்க உதவும் தொழில்நுட்பங்கள்!

கரோனா தொற்று எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியாத நிலையே இப்போது உள்ளது. உலகம் முழுவதும் இந்த கரோனா வைரஸ் பாதிப்பை மையமாகக் கொண்டே சுழல்கிறது.

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் கூட, நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியின் திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. தங்களுடைய தொழில்நுட்பத் திறன்களின் மூலம்புதியனவற்றை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.

மக்களுக்குத் தேவையான அன்றாடப் பொருள்களின் வணிகம்,அத்தியாவசிய சேவைகள்,ஆரோக்கியம்,ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளுதல்,வேலை செய்யும் இடங்களுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் பக்கம்இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனம் குவிந்திருக்கிறது.

இதன் விளைவாக கரோனா காலத்திலும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.சில புதிய முயற்சிகளைப் பார்ப்போம்.

HYGIENE SMART BAND

அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள நகரமான சியாட்டிலில் உள்ள Slightly Robot என்றநிறுவனம் கைகளில் கட்டிக் கொள்ளும் கடிகாரம் போன்ற கருவியை ஏற்கெனவே தயாரித்து விற்பனை செய்து வந்தது. நகத்தைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தக் கருவியைக் கைகளில்அணிந்து கொண்டால்,ஒவ்வொரு தடவையும் நகத்தைக் கடிக்க கைகள் வாய்க்கருகே போகும்போது,உடனே எச்சரிக்கை செய்து, நகத்தைக் கடிக்காமல் தடுத்துவிடும்.அந்தக் கருவியை இப்போதைய கரோனா சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்திருக்கிறார்கள்.

இந்தக் கருவியை (Immutouch) தற்போது அணிந்து கொண்டால், கை தவறி கூட கண்களில், மூக்கில், வாயில் ஏன் முகத்தின் எந்தப் பகுதியிலும் கைகளை வைக்கமாட்டோம்.அப்படி கை அந்தப் பகுதிக்குப் போனால்,இந்தக் கருவி உடனே எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலியை எழுப்பும்.அதுமட்டுமல்ல, ஒருநாளில் எத்தனை முறை கைகளை முகத்தை நோக்கிக் கொண்டு சென்றீர்கள் என்ற தகவலையும் உங்களுக்குக் கொடுத்துவிடும்.

உடல்வெப்பநிலையைச் சோதிக்கும் கருவி

அமெரிக்க நிறுவனமான SCYLLAதனது தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒரு கருவியைக் கண்டுபிடித்துச் சந்தைப்படுத்தி இருந்தது. அந்தக் கருவியை பெரிய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,உணவு விடுதிகளின் நுழைவாயில் அருகே பொருத்திவிடுவார்கள். நுழைவுவாயிலின் அருகே செல்பவர்களிடம் ஏதாவது வெடிக்கும் பொருள்கள் இருந்தால் அவற்றை இந்தக் கருவி கண்டுபிடித்து உடனே எச்சரிக்கை செய்துவிடும்.

இப்போது அந்த நிறுவனம் அந்தக் கருவியை கரோனா காலத்துக்கு உகந்தவிதத்தில் மாற்றியிருக்கிறது.நுழைவு வாயிலின் அருகே செல்பவர்களின் உடலின் வெப்பநிலையைக் கண்டறிந்து, யாருக்காவது அதிக வெப்பம் இருந்தால் உடனே எச்சரிக்கை செய்யும்விதமாக அதை மாற்றியிருக்கிறது.

இ- காமெர்ஸ் விநியோகம்

ட்ரோன்களின் மூலம்பொருள்களைக் கொண்டு சேர்க்கும் முறை ஏற்கெனவே பல நிறுவனங்களால் செய்யப்பட்டு வந்தது.எனினும் அது பெரிய அளவில் நடைபெறவில்லை.கரோனா காலத்தில் மனிதர்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளாமல் இடைவெளி விடஎல்லாரும் வற்புறத்துகிறார்கள்.அதனால் இப்போதுட்ரோன்களின் மூலம் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் முறை சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

உதாரணமாக, சீனாவில் உள்ள JD.COMஎன்ற நிறுவனம் இப்போது தொலைதூரங்களுக்கு ட்ரோன்கள் பறந்து செல்ல அனுமதி வாங்கியிருக்கிறது.அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருள்களை ட்ரோன்கள் மூலமாக விநியோகிக்கிறது.

இப்போதுபல பொருள்களை வாங்க செல்பேசி செயலிகள் இருப்பதால் ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டெலி மெடிசன்

ஊரடங்கின் காரணமாக,உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் வீட்டில் முடங்கியிருக்கிறார்கள். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய நிறைய மருத்துவர்கள் தேவைப்படும் இக்காலத்தில்,வேறு நோய்களைக் கவனிக்க போதிய மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இல்லை.

எனவே ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால்,டாக்டர்களை நேரடியாகச் சந்திக்காமல் வீட்டிலிருந்தபடியே போனில் டாக்டர்களிடம் பேசி தங்களுடைய நோய்க்கான தீர்வுகளைப் பெறுகிறார்கள்.அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை வரவழைத்து பயன்படுத்துகிறார்கள்.

ஆன்லைன் மூலம் கற்றல்

கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாதநிலையில், மாணவர்களின் பொழுது வீட்டில் வீணாகக் கழிந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது நிறைய ஆன் லைனில் கற்பிக்கும் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே மாணவர்கள் கற்றிருந்ததை மறந்துவிடாமல் இருக்கவும், அதன் தொடர்ச்சியாகவும் ஆன்லைன் மூலம் கற்பது அதிகமாகி உள்ளது.இப்போது EdX, Udemy போன்றஆன்லைன் கல்வி நிறுவனங்கள் பல தோன்றிவிட்டன.

வீடியோ கான்ஃப்ரன்ஸிங் செயலிகள்

வீடியோ கான்ஃப்ரன்ஸ்மூலம் சந்தித்துப் பேசுவது,தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுகரோனா காலத்தில் அதிகமாகி இருக்கிறது. Zoom என்ற நிறுவனத்தின் வீடியோ கான்ஃப்ரன்சிங் செயலியை 100 மில்லியன் மக்கள் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். மருத்துவர்கள்,கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாரும் பயன்படுத்தும் வகையில் இந்தZoom நிறுவனம்தனது செயலிகளை வகைப்படுத்தி உருவாக்கி உள்ளது.

Cloud Software

LogMeIn என்ற நிறுவனம்Cloud அடிப்படையிலான தொலைத் தொடர்பு சேவைகளை அளித்து வருகிறது. தொலைத் தொடர்புஅதிகம் தேவைப்படும் கரோனா காலமான தற்போது, அதுதனது சேவைகளை அதிகரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள்,நிதி மற்றும் வங்கித்துறை சார்ந்தவர்கள் இப்போது அதிக அளவில் தொலைத் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்கள்வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கிற்காக GoToWebinar, GoToMeeting போன்றவீடியோ கான்ஃப்ரன்ஸிங் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com