இணைய வெளியினிலே...

மழைதான்விரிக்க மனமில்லைகுடையில் மான்.
இணைய வெளியினிலே...

முகநூலிலிருந்து...

மழைதான்
விரிக்க மனமில்லை
குடையில் மான்.

துரை. நந்தகுமார்


வெறுமைகளை கூட தின்றுவிடுகின்றன இந்த சலிப்புகள்!
ஆனாலும், நம்பிக்கை சளைக்காமல் சுரந்து கொண்டே இருக்கிறது.

ஹேமா வந்தனா

இன்றில்லை எனில் என்ன?
நேற்றமர்ந்த அதே கிளையில்...
நாளையும் அமரும்அதே பறவை.

நேசமிகு ராஜகுமாரன்

பசித்த வயிறு, பணமில்லாத வாழ்க்கை, பொய்யான உறவுகள்இம்மூன்றும்
கற்றுத் தரும் பாடத்தை... யாராலும் கற்றுத் தர முடியாது.

மாரியப்பன்

சுட்டுரையிலிருந்து...


"நாலு பேர் நம்மைக்கவனிக்கிறார்கள்'
என்ற எண்ணம்எழாதவரையில்...
நாம் நாமாகத்தான்இருக்கிறோம்.

உன்னைப் போல் ஒருவன்


திங்கள்,செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு
இந்த கிழமைகள்ல மட்டும்...
சண்டை செய்யக் கூடாது மாணிக்கம்.

காபூல் ஓநாய்


"சிந்திக்க'த்தெரிந்தவர்களின் வாழ்க்கையில்"சந்திக்கும்'
சிக்கல்கள்சிக்கல்களாகவேதெரிவதில்லை.

MAD_IN_BRAIN


பணம், பதவி இல்லாதபோது
நமக்குக் கிடைக்கும்
மதிப்பு, மரியாதையுமே...
நாம் மனிதனாய் வாழ்ந்ததற்குண்டான சான்று.

விடியல் வினோத்

வலைதளத்திலிருந்து...


பொதுவாகவே, கார்போரேட் நிறுவனங்களில், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து தம்மை "அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் என்பார்கள். அப்டேட் என்பதைவிடவும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும், நிறுவனம் மேற்கொள்ளும் மாற்றங்களுக்கும் ஏற்ப நாமும் வளைந்து நெளிய வேண்டும். அப்படி வளைந்தால் தப்பிவிடலாம். நெட்டுக்குத்தலாக நின்றால், அடுத்த ஆட்குறைப்பு பட்டியலில் பெயரைச் சேர்த்துவிடுவார்கள்.

இன்றைக்கு உலகமே மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது- இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தோடு நாம் அத்தனை பேரும் மாற வேண்டியிருக்கும். எல்லாருக்குமே ஏதாவதொரு சுமையை, இழப்பை, குழப்பத்தை, தெளிவின்மையை இந்த கரோனா காலம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. அது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியலாம் அல்லது தெரியாததாகவும் இருக்கலாம்.

ஆனால் பாஸிட்டிவிட்டி மிக அவசியம்.

இது தனிமனிதர்களுக்கான பிரச்னை மட்டுமில்லை. எல்லோருக்கும் பொதுவான பிரச்னை. நமக்கு இருக்கும் பிரச்னையை விட பன்மடங்கு பிரச்னைகளோடு எதிர்வீட்டுக்காரர் இருக்கக் கூடும். பிரச்னைகளின் அளவுகள் மாறலாமே தவிர, பிரச்னையே இல்லாத மனிதர் என்று யாருமில்லை. எப்பொழுதும் சொல்வதைப் போல இந்தச் சூழல் நிரந்தரமில்லை. நிலைமை மாறும் வரைக்கும் ஏதாவது பற்றுக் கோலை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பற்றுக் கோல் ஒன்றினை பற்றிக் கொள்ளுதல் தவிர, நம்மிடம் வேறு எந்த வாய்ப்புமில்லை. நிலைமை மாறும். சூழல் மாறும். அத்தனையும் மாறும் போது நமக்கான இறகு ஒன்று கிடக்கும். யாரும் எடுக்காத அந்த இறகை குனிந்து பொறுக்கி எடுத்து கைகளில் வைத்துக் கொள்வோம்.

http://www.nisaptham.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com