கரோனா... அதிக உடல் எடை ஆபத்து!

கரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே.
கரோனா... அதிக உடல் எடை ஆபத்து!


கரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே.

நியூயார்க்கில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் இருவர் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பிரான்சில் கரோனா தாக்குதலுக்கு உள்ளான அதிக எடை உள்ளவர்களில் 90 சதவீதமானவர்கள் மூச்சுவிடச் சிரமப்படுகிறார்கள். அவர்களை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சுவாசக்கருவிகளின் உதவியுடன் மூச்சுவிட வைக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்? அதிக எடை உள்ளவர்கள் ஏன் மூச்சுவிடச்
சிரமப்படுகிறார்கள்?

அதிக எடை உள்ளவர்களுக்கு அதிக அளவிலான கொழுப்புச் சத்து வயிற்றுப் பகுதியிலும், நெஞ்சுப் பகுதியிலும் சேர்ந்துவிடுகிறது. இதனால் நுரையீரல் இயல்பான அளவில் சுருங்கி விரிவதற்கு போதிய இடமில்லாமல் போகிறது. இது மூச்சுவிடும் திறனைக் குறைக்கிறது. சாதாரணமாகவே குண்டானவர்கள் மூச்சுவிடச் சிரமப்படுவார்கள்.

அதிக உடல் எடையுள்ளவர்களின் உடலில் திசுக்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றுக்கு செல்லும் ரத்தத்தில் அதிக அளவிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் போதுமான அளவுக்கு இல்லாமல் போவதால், அதிக எடை உள்ளவர்கள் ஆழ்ந்து மூச்சுவிட முடிவதில்லை. மெதுவாக மூச்சுவிடுகிறார்கள்.

இதனால் அதிக உடல் எடை உள்ளவர்கள் ஏற்கெனவே மூச்சுவிடத் திணறிக் கொண்டிருக்கும்போது, கரோனா தொற்றினால் நுரையீரல் பாதிக்கப்படுவதால் மூச்சுவிடுவது மிக மிகச் சிரமமாகிப் போகிறது. அதனால்தான் சுவாசக் கருவிகள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

உடலில் உள்ள கொழுப்புத் திசு நோய் எதிர்ப்புத் திசுவின் தொகுதியாக உள்ளது. அதிக உடல் எடை உள்ளவர்களைக் கரோனா பாதிக்கும்போது, அவர்களுடைய நோய் எதிர்ப்புத்திறன் மிக அதிக வேகத்துடன் கூடுதலாகச் செயல்படத் தொடங்குகிறது. இன்டர்ஃபெரான், இன்டர்லுயூக்கின் போன்ற சைட்டோகைன் நோய்த் தடுப்புப் புரதங்கள் அதிக அளவில் ரத்தத்தில் உருவாகி உடல் முழுவதும் சென்று நோய்க் கிருமிகளை அழிக்கிறது.

அது கரோனா கிருமிகளை மட்டுமல்லாது, உடல் உறுப்புகளின் செல்லையும் அழிக்கிறது. குறிப்பாக நுரையீரல் செல்கள் பாதிக்கப்படுகின்றன. நுரையீரல் செல்களில் நீர் கோர்த்துக் கொள்வதுடன் போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ரத்தம் தூய்மையாகும் பணி தடைபட்டு உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கப்படுகிறது. மரணமும் நிகழ்கிறது.

எனவே அதிக உடல் எடை உள்ளவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தங்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com