வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 249

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 249

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விஷயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.

இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான். அப்போது வீரபரகேசரி You were the last one to join the ministry என்பதற்கும் Are you the last among my ministers or did you join last as a minister? என்னும் வாக்கியத்துக்கும் என்ன வித்தியாசம் எனக்கேட்கிறார். விடையைக் காண்போமா?

கணேஷ் (ஜூலியிடம்): எனக்கு மண்டை குழம்புகிறது. இந்த ரெண்டு வாக்கியங்களுக்கும் என்ன தான்வித்தியாசம்?

வீரபரகேசரி: நீ வேண்டுமென்றால் ஜூலியிடம் கேட்டுச் சொல்லலாம். ஆனால் வெளியே விடை கேட்டு சொல்வதற்கான உனக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன என்பதை நினைவில் கொள்.

கணேஷ்: சரி மன்னா. ஜூலி, நீயே கதி. சொல்லு, என்னதான்வித்தியாசம்?

ஜூலி: ஆக்சுவலி இந்த ரெண்டு வார்த்தையும் கிட்டத்தட்ட ஒண்ணு மாதிரியே இருக்கும். ஆனால் வித்தியாசமானது.

கணேஷ்: அதான் என்னாங்குறேன். last என்பதுக்கு ஒரே அர்த்தம் தானே. அதுக்கு முன்னாடி ஒரு ற்ட்ங் போட்டால் எப்படி அர்த்தம் மாறும்?

ஜூலி: மாறுமே. He is a man என்பதற்கும் he is the man என்பதற்கும் வித்தியாசம் உண்டில்லையா?

கணேஷ்: ஆமாம், எங்க சார் சொல்லிக் கொடுத்திருக்கிறார் - a man என்றால் ஒரு மனிதர், ஒரு ஆள். ஆனால் அதுவே the man என்றால் அந்த ஆள், ஒரு குறிப்பிட்ட நபர். சரியா?

ஜூலி: கரெக்ட். The last-க்கும் வெறும் last-க்கும் கூட இதுதான் வித்தியாசம்.

கணேஷ்: புரியல ஜூலி.

ஜூலி: Are you the last among my ministers எனும் போது last என்பது minister என்பதை qualify செய்கிறது. அதாவது அந்த வாக்கியம் எதைப் பற்றி?

கணேஷ்: அமைச்சர்களைப் பற்றி.

ஜூலி: ஆமாம். இந்த அமைச்சர்களில் கடைசியாக சேர்ந்த அமைச்சரைப் பற்றி இது பேசுகிறது. அவர் கடைசியாக சேர்ந்தவர் என அழுத்திக் குறிப்பிட்டு சொல்ல last அங்கு பயன்படுகிறது. ஆனால் அடுத்த வாக்கியத்தை எடுத்துக் கொண்டால் அங்கு last என்பது அதிலுள்ள வினைக்கான ஒரு qualifier ஆக வருகிறது.

கணேஷ்: இப்போ சுத்தமா புரியல.

ஜூலி: கவனிச்சு கேள். ஓர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அங்கு பங்கேற்பாளராக நீ செல்கிறாய். போக்குவரத்து நெரிசலால் நீ அங்கு செல்வது தாமதமாகிறது. You joined last as the participant in the event. இங்கு ப்ஹள்ற் என்பது நீ எப்படிப் போய் சேர்ந்தாய், எவ்வளவு தாமதமாக போய் சேர்ந்தாய், எனச் சொல்ல ஒரு வினையூக்கியாக பயன்படுகிறது. அதே நேரம் He was the last participant to join the competition எனும் போது அதே அர்த்தம் தான் வருகிறது. ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்.

கணேஷ்: என்ன?

ஜூலி: The last participant எனும் போது பங்கேற்பாளரான உன் மீதுதான் கவனம் செல்கிறது. ஆனால் இரண்டு வாக்கியங்களுக்கும் ஒரே பொருள் தான் - நீ
தாமதமாக அந்த போட்டியில் கலந்து கொண்டாய்.

கணேஷ்: மன்னர் மன்னா எனக்கு விளங்கி விட்டது. விடை கிடைத்து விட்டது.
வீரபரகேசரி: சொல்.
கணேஷ்: Are you the last among my ministers என்றால் நீயா அமைச்சரவையில் சேர்ந்தவர்களில் கடைசி ஆள்? Did you join last as a minister?என்றால் நீ கடைசியாகத் தானே அமைச்சரவையில் இணைந்தாய்? இரண்டுக்கும் ஒரே அர்த்தம், ஆனால் முதல் கேள்வியில் அழுத்தம் "ஆள்' மீது இருக்கிறது, இரண்டாவதிலோ அழுத்தம் அல்லது கவனம் எந்த நேரத்தில் அவன் அமைச்சரவையில் சேர்ந்தான் என்பதில் இருக்கிறது - முதலிலா கடைசியிலா?
வீரபரகேசரி: சரியான பதில். சபாஷ்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com