தடுப்பது மட்டுமல்ல...  அழிக்கவும் செய்யும்!

கரோனா தொற்று தொடங்கியபோது தொடக்க நாள்களில் எல்லாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
தடுப்பது மட்டுமல்ல...  அழிக்கவும் செய்யும்!

கரோனா தொற்று தொடங்கியபோது தொடக்க நாள்களில் எல்லாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை. நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மட்டும் அணிந்தால் போதும் என்றார்கள். தொற்று அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, எல்லாரும் அணிய வேண்டும் என்றார்கள்.

ஒருவர் தும்மினால், இருமினால் அவர்களுடைய வாயிலிருந்து வெளியே வரும் சளி, நீர்த்துளியின் மூலமாக கரோனா வைரஸ் வெளியே வந்து, காற்றில் மிதந்து, அந்த காற்றைச் சுவாசிக்கும் பிறருக்கும் தொற்றிக் கொள்ளும் என்றார்கள். இப்போது முகக்கவசம் அணியாமல் பேசும்போதோ, பாடும்போதோ கூட வாயிலிருந்து நீர்த்துளிகளின் மூலமாக கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள். என்றாலும் முதலில் இருந்தே முகக்கவசத்தின் முக்கியத்துவம் கூடுதலாகவோ, குறைவாகவோ கூறப்பட்டு, உணரப்பட்டு வந்திருக்கிறது.

அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மையம்(CDC), மருத்துவ முகக்கவசம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; முகத்தை எவ்விதத்திலேனும் மறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

என்றாலும் முகக்கவசம் முழுமையான பாதுகாப்பைத் தருமா என்ற ஐயம் உள்ளது. முகக்கவசத்தில் வைரஸ் தொற்றியிருக்கும்போது அதைத் தொட்டுவிட்டு பின்னர் மூக்கு, வாய், கண்களில் கையை வைத்தாலும் சிக்கலாகிவிடும். இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று நினைத்து அமெரிக்காவின் கென்டகி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு புதியவிதமான முகக்கவசத்தை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறது.

அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த முகக்கவசம் முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறி, அமெரிக்காவில் உள்ள "நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேஷன்' இந்த ஆராய்ச்சிக்காக 1.5 லட்சம் டாலரைக் கொடுத்திருக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு கரோனா வைரஸ் தாக்கம் எப்படியிருந்தாலும், எதிர்காலத்தில் கரோனா வைரஸ் போன்ற எந்த கொடிய வைரஸ் வந்தாலும் அவற்றைத் தாக்குப் பிடிக்கும்விதமாக இவர்கள் உருவாக்கும் முகக்கவசம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த முகக்கவசத்தின் பெயர் LEX18.

இதில் முக்கியமான விஷயம், இந்த முகக்கவசத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவர் திபாகர் பட்டாச்சார்யா என்ற பேராசிரியர். இந்தியாவில் பிறந்து வளர்ந்து தற்போது அவர் கென்டகி பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவர்கள் தயாரிக்க இருக்கிற முகக்கவசம் கரோனா வைரஸ் போன்ற கொடிய வைரஸ்களை வடிகட்டி கொன்று அழித்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கரோனா வைரஸில் வெளிப்புறம் எஸ்-புரோட்டீனால் ஆன கூர்முனைகளை உடையதாக இருக்கிறது. இந்தக் கூர்முனைகள் மனித உடலில் பட்டு உள்நுழைந்து மனித உடலில் உள்ள செல்களில் நோய்த் தொற்று ஏற்படச் செய்கிறது.

இவர்கள் தயாரிக்கிற முகக்கவசம் பல அடுக்குகளை உடையதாக இருக்கும். இந்த அடுக்குகளின் நடுவே பஞ்சைப் போன்ற பகுதிகளுமிருக்கும். இதைத் தாண்டி எந்த வைரஸூம் உள்ளே புகுந்துவிட முடியாது. இந்த அடுக்குகளின் இடையே கரோனா வைரஸ் போன்றவற்றின் எஸ் - புரோட்டீன் கூர்முனைகளைச் சிதைக்கக் கூடிய வேதிப் பொருள்கள் இருக்கும். வேதிப் பொருள்கள் அந்த கூர்முனைகளைச் சிதைப்பதோடு கரோனா வைரûஸயும் கொன்றுவிடும்.

வைரûஸயே கொல்கிறது என்றால், இதை அணிகிற மனிதர்களுக்கு இந்த முகக்கவசம் பாதிப்பை ஏற்படுத்தாதா? என்ற கேள்வி எழலாம்.

""எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது நச்சுத்தன்மை இல்லாதது'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த முகக்கவசம் மிகவும் மெல்லியது. இந்த முகக்கவசத்தில் வைரஸ் மாட்டிக் கொண்டால், முகக்கவசத்தின் நிறம் மாறிவிடும்.

""இப்போது தொடக்கநிலையில் இருக்கும் இந்த முகக்கவசம், பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதை உருவாக்குவதில் கென்டகி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரும் பங்கேற்று வருகிறார்கள். அவரவர் துறைசார்ந்த அறிவை இந்த முகக்கவசம் தயாரிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுத்தி வருகிறார்கள்'' என்கிறார் திபாகர் பட்டாச்சார்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com