இளம் விஞ்ஞானிகள்...

ஆராய்ச்சியாளர் (நெப்ராஸ்கா பல்கலைக்கழகம்) மேற்கு ஆப்பிரிக்கா, செனகல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சித்தி நடாவ், வெப்பத்தின் மூலம் இயங்கும் கணினியைக் கண்டுபிடித்துள்ளார்.
இளம் விஞ்ஞானிகள்...

சித்தி நாடவ்

ஆராய்ச்சியாளர் (நெப்ராஸ்கா பல்கலைக்கழகம்) மேற்கு ஆப்பிரிக்கா, செனகல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சித்தி நடாவ், வெப்பத்தின் மூலம் இயங்கும் கணினியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் தொலைதூர விண்வெளியிலும், பாதாளத்திலும் இந்த கணினியை இயக்கலாம்.


ஆன்டி டே

உதவி பேராசிரியர் (சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்) மனித உடலில் வயோதிக காரணத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும் புதிய கண்டுபிடிப்புகளை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஆன்டி டே செய்து வருகிறார். நானோ வைரல் தொழில்நுட்பம் மூலம் மனித உடல் டிஎன்ஏவில் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைப்பதே இவரது புதிய கண்டுபிடிப்பாகும்.


ரோனா சந்திரவதி

ஆராய்ச்சியாளர் (நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகம்) ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள ரோனா சந்திரவதி, உணவு பொருள்களின் காலாவதியாகும் நேரத்தை "ஸ்மார்ட் ஸ்டிக்கர்' மூலம் தெரிந்து கொள்ளும் நானோ டெக்னாலஜி சென்சார்களை உருவாக்கி வருகிறார். பெட்டிகள், பாக்கெட்டுகள், வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் அடைத்து வைக்கப்படும் பொருள்கள் காலாவதியாவதை அவற்றின் நிற மாற்றத்தில் தெரிந்து கொள்ளலாம். 


ஸ்டேபானி சிட்லிக்

உதவி பேராசிரியர் (கார்னிஜ் மெலான் பல்கலைக்கழகம்) விபத்துகளில் மனித உடல் பாகங்களில் உள்ள எலும்பு சேதமடைந்தால், அதற்கு மாற்றாக தற்போது உலோகங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், சேதமடைந்த எலும்புப் பகுதியை மீண்டும் இயற்கையாக வளர வைக்கும் புதிய கண்டுபிடிப்பை ஸ்டேபானி சிட்லிக் கண்டுபிடித்துள்ளார்.

குறிப்பு: 40 வயதுக்குள்பட்ட இந்த 4 பேரும் உலக பொருளாதார கூட்டமைப்பால் நிகழாண்டு இளம் விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com