மனித உருவத்தை மறைக்கும் செயலி!

ஸ்மார்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது.
மனித உருவத்தை மறைக்கும் செயலி!

ஸ்மார்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது. கேமராக்களில் பதிவாகும் தெளிவான புகைப்படங்களுக்காகவே தற்போது ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கேமராக்களின் பயன்பாடு மக்களை கவர்ந்துள்ளது. எனினும், இந்த கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களைப் பத்திரமாக பாதுகாக்கவில்லை என்றால் அது தனிமனித சுதந்திரத்தையே பாதித்துவிடுகிறது. இது பெண்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. பெண்களுக்கே தெரியாமல் அவர்களது ஸ்மார்ட் போன்களின் கேமராக்களை ஹேக் செய்து வீடியோ, படம் எடுக்கும் ஆப்கள் இணையதளத்தில் பரவி உள்ளன.
இதில் இருந்து தப்பிக்க சிலர் தங்களது லேப்டாப், ஸ்மார்ட் போன்களின் முன்பக்க கேமராவை டேப் ஒட்டி மறைத்து பயன்படுத்தியும் வருகின்றனர். இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனத்தின் இணையதள பொறியாளர் ஜேசன் மைஸ் தீர்வு கண்டுள்ளார். அவர் கண்டுபிடித்துள்ள மென்பொருள், கேமராவில் இருக்கும் மனித உருவத்தையே மறைத்துவிடும். மாயாஜாலமாக தெரியும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால், லேப்டாப் முன்பு நாம் அமர்ந்து பணியாற்றினாலும் நமது வெப் கேமரா ஹேக் செய்யப்பட்டிருந்தாலும், நம்மைக் காண்பிக்காது. 
இந்த மென்பொருள் ஸ்மார்ட் போன்களுக்கு பயன்படுத்தப்பட்டால், பயன்பாட்டாளருக்கு தெரியாமல் ஹேக் செய்தாலும் பயன்பாட்டாளரின் படம் தெரியாது என்பதால் இது பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது என ஜேசன் மைஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுபோன்ற மென்பொருள்கள் சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களில் பரவி விட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்றும் மற்றொரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பாதுகாப்புடன் பயன்படுத்தினால் அனைவருக்கும் பாதுகாப்பே.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com